(Reading time: 28 - 55 minutes)

ல்லடா… நான்….” என அவன் இழுக்க, “உங்களுக்கு பொய் சொல்ல வராது சகி… எனக்கு தெரியும்…” என்றவள், “எதுக்கு இப்படி சாப்பிடாம இருக்குறீங்க… இப்படி சாப்பிடாம இருந்தா நாளைக்கு எக்ஸாம் எப்படி எழுதமுடியும் தெம்பா?... இனிமே இப்படி செய்யாதீங்க சகி… ப்ளீஸ்… கரெக்ட் டைமுக்கு சாப்பிடுங்க…” என வருத்தத்தோடு சொல்லவும்,

“சரிடா… இனி கரெக்ட் டைமுக்கு சாப்பிடுறேன்… சரிதானா?...” என கேட்க, அவள் “ஹ்ம்ம்…” என்றாள்…

“ப்ளீஸ்டா…. சிரி…” என அவன் கெஞ்ச, “எதுக்கு சகி சாப்பிடாம இருந்தீங்க… வீட்டுக்கு போயிட்டு சாப்பிட்டு வந்திருக்கலாம்ல… பாவம் வீட்டிலேயும் தேடியிருப்பாங்கல்ல அம்மா?...” என அவள் சொல்லிக்கொண்டே செல்ல அவன் நடை நின்றது…

பேசிக்கொண்டே போனவள், அவன் வராதது கண்டு, திரும்பி பார்க்க அவன் அங்கேயே நின்றிருந்தான்…

“சகி…” என அவள் அழைத்ததும், “ஆ… இதோ வரேண்டா…” என அவளுடன் நடந்தவன், “சரிடா… உன் பாதை வந்துடுச்சு… நீ பார்த்து போயிட்டு வா… நானும் கிளம்புறேன்…” என்றபடி நகர்ந்து கொள்ள, அவளும் புரியாத பாவனையோடு அவனை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள்…

பரீட்சை எல்லாம் முடிந்த நாளில், “ரிசல்ட் வந்ததும் எங்கிட்ட சொல்லுவீங்களா?...” என கேட்டவளிடத்தில்,

“உங்கிட்ட சொல்லாம இருப்பேனாடா?... ஆனா அப்போ உனக்கு லீவா இருந்தா உங்கிட்ட எப்படி நான் சொல்லுறது?...” என சொல்லிவிட்டு யோசித்தான் அவன்…

“லீவா இருந்தா வீட்டுக்கு வாங்க… நான் வாசலியேயே உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்… சரியா?...”

“வீட்டுக்கா?...” என கொஞ்சம் யோசித்தவன், “வீட்டுக்கு வருவீங்களா மாட்டீங்களா?...” என்ற அவளின் அதட்டலில் சரி என்றான் புன்னகையோடு….

“சரி சொன்னதெல்லாம்… ஓகே தான்… பட் வீடு உங்களுக்கு எப்படி தெரியும்?... வாங்க காட்டுறேன்…” என்றவள் அவனை தன்னுடன் வர சொன்னாள்… அவன் மறுக்கவே வலுக்கட்டாயமாக அவளைப் பின் தொடர சொன்னவள்,  வீடு வந்ததும், அதோ அந்த யெல்லோ கலர் பெயிண்ட் அடிச்சிருக்குல்ல அதான்…” என கைகாட்ட…

“சரிடா… உடம்பை பார்த்துக்கோ… நேரத்துக்கு சாப்பிடு… என்ன?...” என அக்கறையோடு அவன் சொல்ல,

“இனி நாம கொஞ்ச நாள் பார்க்கவே முடியாதுல்ல சகி…” என்ற அழுகையோடு அவள் கைஅசைத்து விடைபெற, அவனும் மனதில் கணத்தோடு அவளுக்கு கை அசைத்தான்…

ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நாட்கள் சென்றபின், பத்தாம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியிடப்படுகிறது என பேப்பர் டீவியில் பார்த்தவள், அவனுக்காக வாசலிலேயே காத்திருந்தாள்…

அவளை அதிக நேரம் காத்திருக்க விடாது, மகத்தும் வந்தான்….

அவளைப் பார்த்து புன்னகையுடன், “கிருஷ்ணா….” என அழைக்க, அந்த ஒற்றை அழைப்பு அவளுக்கு போதுமானதாக இருந்தது இத்தனை நாள் பிரிவை ஆற்ற…

“சகி….” என்றவளின் குரலே கலங்கி இருக்க, “நான் பாஸ் பண்ணிட்டேண்டா… இப்போ உனக்கு சந்தோஷம் தான?...” என கேட்டதும், “சூப்பர் சகி…” என்றாள் அவள்…

ஒரு துண்டு பேப்பரில் தனது மார்க்கை எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அகன்றான் அவன்….

அதில் அவனுடைய மதிப்பெண்களும், பள்ளியில் முதல் மாணவனாக வந்த விவரமும் இருக்க, பூரித்துபோனாள் அவள்…

அந்த சந்தோஷம் மாறாமல் அவன் நடந்து செல்லும் திசையைப் பார்த்த போது, அவனும் திரும்பி அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்….

சில நாட்களுக்குப் பிறகு, அவள் அடுத்த வகுப்பில் அடி எடுத்து வைக்க, அன்றைய தினம் காலையில் அவனை ஆவலோடு எதிர்ப்பார்த்தாள்… ஆனால் அவன் வரவில்லை…

மாலையிலும் அவன் வராமல் போகவே “என்னாச்சு இந்த சகிக்கு?... இன்னைக்கு வரவே இல்லை… வரட்டும்… பேசிக்கிறேன்…” என திட்டிக்கொண்டே நடந்தவள், எதிரே நிமிர்ந்து பார்த்தபோது அவன் நின்றிருந்தான்….

அதுவரை திட்ட வேண்டுமென்று எண்ணமிட்டுக்கொண்டிருந்தவள், அவனைக் கண்டதும், தாயைக் கண்ட சேயை போல, அவள் முகம் மலர்ந்தது…

“எப்படி இருக்குறடா கிருஷ்ணா?... ஃபர்ஸ்ட் டே ஸ்கூல் எப்படி இருந்துச்சு?...”

“அதெல்லாம் விடுங்க… நீங்க ஏன் காலையிலேயே வரலை?... அத சொல்லுங்க முதலில்…”

“இல்லடா… அதுவந்து…” என அவன் இழுத்தபோது தான் அவள் கவனித்தாள்…. அவன் பள்ளி சீருடையில் இல்லை என்பதை…

அவனை உற்றுப் பார்த்தபோது தான் அவள் அறிந்தாள் அவனுக்கு உடல்நிலை சரி இல்லை என…

“சகி…. உங்களுக்கு உடம்பு சரி இல்லையா?... என்னாச்சு?... காய்ச்சலா?....” என கேட்டுக்கொண்டே அவனது நெற்றியில் கை வைத்து பார்த்தவள்,

“அச்சச்சோ… இதென்ன இப்படி நெருப்பா கொதிக்குது?... டாக்டரைப் பார்த்தீங்களா இல்லையா?... மாத்திரை போட்டீங்களா?... சாப்பிட்டீங்களா?...” என அடுக்கிக்கொண்டே போக,

“இல்லடா… வாய்க்கு எதுவும் நல்லா இல்லை… மருந்து சாப்பிட்டேண்டா… இப்போ கொஞ்சம் பரவாயில்லை…” என்றான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.