(Reading time: 8 - 16 minutes)

சூப்பர் ப்லான் அண்ணா…யூ ஆர் ரியல்லி க்ரேட்”

“அய்யயோ, இதை செயல்படுத்துறதுல வேணும்னா,நான் பெரிய ஆளாய் இருக்கலாம்மா..ஆனா இந்த ஐடியா யாரோடது தெரியுமா?” என்று கேட்டவன் சில உண்மைகளை சொல்ல வியந்து போய் அமர்ந்திருந்தாள் புவனா!!  அது யாருன்னு அடுத்த எபிசொட்ல பார்ப்போம்… இப்போ நீங்கள் ஆவலாய்  எதிர்பார்த்து கொண்டிருந்த சண்டை கோழிகளை பார்ப்போமா…?

6 நாட்களுக்கு பிறகு…!

அழுது அழுது வீங்கி போயிருந்த விழிகளை சிரமப்பட்டு திறந்தாள் சங்கமித்ரா..காலைசுருக்கிகொண்டு  சோபாவில் படுத்திருந்தது இன்னும் வலியை தந்தது..கடிகாரத்தை பார்த்தாள்.. மணி 9.. அப்படியே தலையை தூக்கி எட்டி பார்க்க,அவர்களது அறை கதவு திறந்திருந்தது… தன் மீது போர்வை இருக்கவும்,நேற்று கோபத்தில் போர்வை தலையனை எதும் இன்றி உறங்க வந்தது நினைவிற்கு வந்தது..

“ஹும்கும்..இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. நேற்று என்ன எல்லாம் பேசிட்டான்…வெட்டியா இருக்கேனாம் வெட்டியாய்… ! இதோ வெட்டியாய் தூங்கிட்டேன், என்ன சாப்பிட்டனாம்? பட்டினியாய் தான் போயிருப்பான்..முதல்ல இவனுக்கு சாப்பாடு கொண்டு போகனும்” என்று முடிவெடுத்தவள் அரக்கபரக்க குளித்து முடித்து, அவனை சமாதனபடுத்த தயாரகும்படி அவனுக்கு பிடித்த பச்சை நிற சுடிதாரை தேடி பிடித்து அணிந்து சமையல் அறைக்குள் நுழைய, அங்கு ஏற்கனவே “ஷக்தியின் சமையல்” தயாராய் இருந்தது.

நேற்று அவன் சொன்னதுநினைவில் வந்தது.. “இந்த நாளு வருஷமாய் நீயா சமைச்சு போட்ட?சும்மாசீன் போடாதே” என்றிருந்தான்.. அவ்வளவுதானா ஷக்தி ?என்று மனம் துவண்டிட,ஃபோனை எடுத்து அவனை அழைத்தான்..

“ஹலொ”

“மா……ஷக்தீ”

“ம்ம்ம்”

“நாந்தான் பேசுறேன்”

“தெரியும் சொல்லு”

“சாப்பிட்டியா ?”

“ம்ம்ம்”

“ மதியம் சாப்பாடு …”

“ நானே செஞ்சிட்டேன்”

“ம்ம்ம் பார்த்தேன்”

“சரி ..அப்பறம்?” என்றான் அவன் அமர்த்தலாய்..”ச்ச,ஏதோ கோபத்துல பேசி இருப்பான்,சமாதானம் செய்து விடலாம்ன்னு பார்த்தா,இன்னமும் மலை இறங்காமல் இருக்கானே” என்று பற்களை கடித்தவள்

“ஒன்னுமில்ல” என்று ஃபோனை தூண்டித்து விட்டு கண்ணீருடன் அமர்ந்தாள்… அப்படி என்னதான் நடந்துச்சு? வாங்க தெரிஞ்சிப்போம்…

டந்த ஆறு நாட்களில் முதல்மூன்று நாட்கள் ஷக்தி மித்ரா இருவருக்குமே பரபரப்பாய்தான் போனது.. ஷக்தியாக வந்து அவளிடம் எந்த வேலையும் சொல்லாமல் போனாலும்,மித்ராவே பொறுப்பினை கையில் எடுத்து கொண்டாள்..ஆனால் அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்குவேலைகள் குறைந்துவிட, என்ன செய்வது என்று தெரியாமல் இங்கும் அங்கும் அலைபாய்ந்தது அவளின் சிந்தனை..ஷக்தியோ கருமமே கண்ணென வேலையில் மூழ்கி இருந்தான்..

இதனால் அடுத்த இரண்டு நாட்கள் அவள் வீட்டிலேயே இருந்துவிட, அவன் வேலையிலேயே இருக்க,இருவருக்குள்ளும் எழுந்த சாதாரணமௌனம், சங்கமித்ராவை பெரிதும் பாதித்தது..அதை அறிந்து ஷக்தியும் அவளுடன் பேச முயன்றாலும்,சோர்வினால் பேசிக்கொண்டே உறங்கினான் அவன்..ஒரு பக்கம் அவன் மீது கரிசனம், இன்னொரு பக்கம் தன்னிரக்கம் இரண்டிற்கும் நடுவில் மாட்டி கொண்டாள் சங்கமித்ரா… இதை சமாளிக்க தெரியாமல் நேற்றிரவு உறங்கி கொண்டிருந்த ஷக்தியை எழுப்பி விட்டிருந்தாள் சங்கமித்ரா…அயர்வில் உறங்கி கொண்டிருந்தவன் ,தன் மனைவி தட்டி எழுப்பவும் சற்று பதற்றமாகவே எழுந்தான்..

“ஹேய்.. என்ன மிது… என்னாச்சு ?”

“உன்னால எப்படி முடியுது ஷக்தி?”

“ என்னடீ ?”

“ என்கிட்ட நீ சரியாய் பேசி ஆறு நாள் ஆச்சு…ஐ மிஸ்யூ” என்றவளைவிநோதமாய் பார்த்தான் ஷக்தி.. அவள்நெற்றியில் கை வைத்து பார்த்தான்..

“காய்ச்சல் ஏதுமில்லை…என்ன உளருற நீ?”

“ ப்ச்ச்ச்… நான் பேசுறது உனக்கு உளறல் மாதிரி இருக்கா?”

“நடுராத்திரி ரெண்டு மணிக்கு பேசுற பேச்சாடி இது ? வாய மூட்டிட்டு தூங்கு டீ “

“ நீ என்னை லவ் பண்ணலையா மாமா “சோகமாய் கேட்டாள் அவள்.

“அறைஞ்சு பல்லை கழட்ட போறேன்…தூங்குன்னு சொல்லுறேன்ல”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.