(Reading time: 23 - 46 minutes)

'னக்கு நடந்தது தானே அவனுக்கும் நடந்தது. அவனோட வொய்ஃப் எவ்வளவு அழகா அவனை ஏத்துக்கிட்டாங்க பார்த்தியா??? நம்மை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டாங்க இல்லையா??? அவனும் சந்தோஷமா இருக்கான்.'

'அது சஞ்சா...'

'எதுவும் இல்லை. எனக்கு விளக்கம் எதுவும் வேண்டாம். இதெல்லாம் நடந்திருக்க வேண்டாம் தான்.. ஆனா நடந்து முடிஞ்சிருச்சு. இனிமே மாத்த முடியாது. இதையெல்லாம் மறக்கணுமா இல்லை  தூக்கிட்டே அலையணுமான்னு நீயே பார்த்துக்கோ... இந்த அல்வா துண்டு எப்போ பழைய மாதிரி ஆகும்னு நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன் ஞாபகம் வெச்சுக்கோ அவ்வளவுதான்.' சொல்லிவிட்டு பின்னால் சாய்ந்து கண்கள் மூடிக்கொண்டான் சஞ்சா.

சில நிமிடங்களில் விமானத்தில் விளக்குகள் அணைக்கப்பட, சில நிமிடங்கள் அப்படியே கரைய சின்ன தயக்கத்துடன் அவனை சேர்ந்தது அவளது மென்மையான முத்தம்.

தே நேரத்தில் இங்கே மருத்துவமனையில்...

அருந்ததியும் உறங்கிவிட இருக்கையின் பின்னால் சாய்ந்துக்கொண்டு கண்மூடி அமர்ந்திருந்தான் ரிஷி.

'எங்கிருந்து ஆரம்பித்ததாம் என் வாழ்கை??? எங்கெல்லாம் சுற்றி எங்கே வந்திருக்கிறேனாம்??? மனம் பழைய நினைவுகளில் சுழல ஆரம்பித்தது.

அரசன் தான் அவன். தமிழ் திரை உலகின் முடி சூடா மன்னன் தான் அவன். அவன் திரையில் தோன்றினாலே போதும் படம் வெள்ளிவிழா என்ற நிலை..

முதலில் அம்மாவுக்கு அவனை திரைப்பட துறைக்கு அனுப்பும் எண்ணமே இல்லைதான். எப்போதாவது ரிஷி அவனது தாத்தா, அதாவது ராமனின் அப்பா வீட்டுக்கு வருவது உண்டு. அப்படி ஒரு  முறை வந்த போது இயக்குனர் இந்திரஜித்தின் அறிமுகம்.

அவரது கதாநாயக தேடலுக்கு ரிஷி பொருந்திப்போக, அப்பாவும் அம்மாவும் மறுத்து மறுத்து பார்த்துவிட்டு கடைசியில் வேறு வழியே இல்லாமல்  ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் என்ற கண்டிஷனுடன் அவன் கதாநாயகனாக அறிமுகம் ஆனான்.

படம் இமாலய வெற்றி. முதல் பட வெற்றிக்கு பிறகு வந்த அந்த பார்ட்டி, மேகலா கற்று தந்த அந்த பாடம் அவனை நன்றாக விழித்துக்கொள்ள வைத்திருந்தது. அடுத்தடுத்த படங்களுக்கு வாய்ப்பு வர, அப்பாவும் அம்மாவும் வேண்டாம் என்று சொல்ல கேள்வி கேட்க ஆரம்பித்தான் ரிஷி.

ஏன் கூடாது??? என்ற கேள்விக்கு பதில் சரியாக கிடைக்கவில்லை. அவனும் விடவில்லை. இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே உண்ணா விரதம். இளகினர் அப்பாவும் அம்மாவும். அதற்கான காரணம் மேகலா என்று தெரியவந்தது

ஏன்??? அம்மாவுக்கும் மேகலாவுக்கும் இடையில் என்ன??? அவனுக்குள் உறுத்தி எடுத்த கேள்விகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்தது அவர்களிடமிருந்து. அவனுக்குள்ளே கனல்.

'இப்போ புரிஞ்சுதா???' கேட்டார் அம்மா. ;இங்கே உனக்கு என்ன குறைச்சல். அப்பாக்கு எத்தனை பிஸினஸ். அதிலே ஒண்ணு  ரெண்டை நீ  பார்த்திட்டு ராஜா மாதிரி இரு. நமக்கு சினிமா... ஏன்  இந்தியாவே  வேண்டாம்பா.

'ஒப்புக்கொள்ள முடியவில்லை அவனால். 'எனக்கு வேணும். நான் ஜெயிக்கணும். அவங்களுக்கு பயந்து நான் எனக்கு வர வாய்ப்புகளை நான் இழக்கறதா இல்லைம்மா' உறுதியாக சொன்னான் அவன்.

எப்படியெல்லாமோ அவர்களுடன் போராடி கடைசியில் மேகலாவுடன் எந்த பிரச்சனைக்கும் செல்ல மாட்டேன் என்ற உறுதி மொழியுடன் களம் இறங்கினான் ரிஷி. கொஞ்சம் கொஞ்சமாக புகழின் உச்சியை தொடவும் ஆரம்பித்திருந்தான்.

அப்பாவுக்கு கொடுத்த வாக்குறுதியையும் காப்பற்றிக்கொண்டுதான் இருந்தான் அவன்.. அதனாலேயே நெருங்கி நெருங்கி வந்த அருந்ததியை விட்டு விலகி விலகி சென்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே பக்க பலமாக இருந்தது சஞ்சா.

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் லண்டனுக்கு சென்று விடுவான் அவன். அவன் கண்ணசைவில் எல்லாவற்றையும் முடித்துவிட ஆட்கள் இருந்த போதும் அப்பாவிற்கு கொடுத்த வாக்கிற்காக அவ்வபோது மேகலா அவனுக்கு கொடுத்த உரசல்கள் எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டவனால், ஒரு மகனாக தனது அம்மாவை பற்றி மற்றவர்கள் தவறாக பேசுவதை மட்டும் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அப்படி பேசுவது  யாரென்றாலும் அவர்கள் மீது  அவன் கை ஒங்க கூட யோசித்ததில்லை.

ன்றரை வருடம் முன்பு அந்த படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம் இன்னமும் நினைவிருக்கிறது அவனுக்கு, அவனது மானேஜர் பரந்தாமன் தனது சொந்தகார பெண்ணை பட வாய்ப்புக்காக அழைத்து வந்திருந்தார்..

'இதெல்லாம் ப்ரொட்யூசர், டைரக்டர் சம்மந்த பட்ட விஷயம். நான் இதிலே தலையிட முடியாது. நீங்க அவங்க கிட்டே பேசிக்கோங்க..

'நீங்க சொன்னா எல்லாரும் கேட்பாங்க சார். நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயாரா இருக்கா சார் இவ..... சினிமாவிலே உங்க கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சா போதும்.' அவர் சொல்ல அவன் சரேலென திரும்ப..

மறுபடியும் சொன்னார் பரந்தாமன் 'நீங்க என்ன சொன்னாலும் செய்வா சார்.'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.