(Reading time: 22 - 43 minutes)

12. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

சிகரா.. என் நெஞ்சினிக்க..

உன் பொன்மடியில் தூங்கினால் போதும்..

அதே கணம் என் கண்ணுறங்க...

Kadalai unarnthathu unnidame

முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்...

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்

உன் தயவால் தானே...

ஏங்குகிறேன் தேங்குகிறேன்

உன் நினைவால் நானே...

உற்சாகமாக பாடிக் கொண்டே... பிருத்வியின் பிறந்தநாளுக்கு செல்வதற்கான உடையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் யுக்தா..

சில நாட்களாக சோக கீதம் கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு... இன்று ஏனோ உற்சாகமாக பாடத் தோன்றியது..

ஆனால் அது கூட அவனை நினைத்து ஏங்குவதும் தேங்குவதுமான பாட்டு தான் பாடத் தோன்றுகிறது... அவன் மடியில் தூங்குவதெல்லாம் இந்த ஜென்மத்துலேயே நடக்குமான்னு தெரியல... இதுல முன் ஜென்மம் ஏக்கம் எங்கே இருந்து தீருவது... மொத்த ஏக்கங்களும் சேர்ந்து அடுத்த ஜென்மத்திலாவது தீர வேண்டும்.. வாய் பாடிக் கொண்டிருந்தாலும் மனசோ இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது.

உடையை தேர்ந்தெடுத்துவிட்டு அறையை விட்டு வரும்போது... அவள் அம்மா அவளை அழைத்தாள்...

"யுக்தா மதி ஃபோன் பண்ணா... பர்த்டே ஃபங்ஷன் 4மணிக்கே ஸ்டார்ட் ஆகுதாம்... நாம கிளம்பனும்..."

"ஏம்மா 6 மணிக்கு தானே பார்ட்டின்னு சொன்னீங்க..."

"அதுவந்து யுக்தா... நாங்க வளர்ந்த ஆசரமத்தை அப்போ நிர்வகிச்சுக்கிட்டு இருந்த கஸ்தூரி அம்மா இப்போ சீரியஸா பாண்டிச்சேரி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி இருக்காங்களாம்... அப்பா அம்மா இல்லாத எங்களுக்கு அவங்க தான் அம்மா மாதிரி... அவங்க சில வருஷத்துக்கு முன்னாடி... பாண்டிச்சேரி ஆசரமத்துக்கு போய்ட்டாங்க... இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க...

எப்போ வேணா அவங்க இறுதி நேரமா இருக்கலாம்னு சொல்லியிருக்காங்க.. அடிக்கடி மதி அங்கப் போய் அவங்களை பார்ப்பா... அதான் அவளுக்கு தகவல் சொல்லியிருக்காங்க.... அதான் நாங்க பார்த்துட்டு வந்துடலாம்னு இருக்கோம்... சீக்கிரம் பர்த்டே பார்ட்டிய முடிச்சிட்டு போகலாம்னு மதி சொன்னா..."

"அம்மா நானும் உங்க கூட வரவா... அவங்களை பார்க்க..."

"நானே உன்னை கூட்டிட்டு போய் அவங்களை பார்க்கனும்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்... ஆனா இப்போ வேண்டாம் யுக்தா... அவங்களுக்கு தன்னோட இறுதி நாளை நெருங்கிக்கிட்டு இருப்பது தெரியும்... இருந்தாலும் ஏன் எல்லாம் இப்போ கும்பலா போகனும்... நீ பொறந்த அப்பவே உன்னை கூட்டிட்டு போய் அவங்ககிட்ட காமிச்சிருக்கேன்... அவங்க ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும்... இப்போ நான், மதி, செந்தில் அண்ணா மட்டும் போய்ட்டு வரோம்..."

"ம்ம்.. சரிம்மா..."

"சரி கிளம்பு நாம 4 மணிக்கே போகனும்..."

அவள் அம்மா கூப்பிட்டதும் திடிரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது...

"அம்மா... நீங்க போங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்... எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு... நான் வரவரைக்கும் காத்திருக்க வேண்டாம்... கேக் கட் பண்ண சொல்லுங்க..."

யுக்தா அப்படி சொன்னதும்... ஒருவேளை அவளுக்கு வரப் பிடிக்கவில்லையோ... என்னால வரமுடியாதுன்னு சொன்னா... நான் என்ன ஏதுன்னு கேட்பேன் என்று நினைக்கிறாளோ... சரி அவ இங்கேயே இருக்கட்டும்... எப்படியோ பர்த்டே பார்ட்டிக்கு அந்த சப்னா வருவா... யுக்தா வந்தாலும் அவளுக்கு சப்னாவை பார்க்க கஷ்டமாக இருக்கும்... என்று நினைத்துக் கொண்டு " சரிம்மா" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்....

இவ போனால் தான் கேக் வெட்டனும்னு அங்கே காத்திருக்க... இவள் ஒன்றும் விஐபி இல்லைதான்... ஆனால் உன்னை எதிர்பார்ப்பேன் என்று பிருத்வி சொன்னதால்... இவள் வரும்வரை காத்திருக்க கூடாதே என்று தான் தன் அம்மாவிடம் அப்படி கூறினாள்.

திடிரென்று யுக்தாவிற்கு என்ன யோசனை தோன்றியதென்றால்... ஏனோ அந்த சப்னாவை பார்க்க யுக்தாவிற்கு பிடிக்கவில்லை... இவளை வெறுப்பேற்றுவதற்காகவே பிருத்வியுடன் அவள் நெருக்கமாக இருப்பது போல் இவளுக்கு தோன்றுகிறது...அதைப் பார்க்கும் போது இவளுக்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்... சந்தோஷமான நாளில் இது வேறயா...

அதனால் பார்ட்டி முடியும் போது சென்று பிருத்விக்கு விஷ் பண்ணிட்டு வருவோம் என்று முடிவெடுத்தாள்... ஆமா நீ என்னத்தான் நினைக்கிற... நேத்து உனக்கு லைன் கிடைச்சது... பிருத்விக்கு விஷ் பண்ண... இப்போ உன்னோட இஷ்டத்துக்கு போய் விஷ் பண்ணிப்பேன்னு சொல்றீயே... அந்த சப்னா பிருத்வியோட காதலி... வருங்கால மனைவி... பிருத்வி பர்த்டேவை செலப்ரேட் பண்ணமாட்டாங்களா..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.