(Reading time: 22 - 43 minutes)

"துவா கேக் பண்ணப் போறேன்... பிருத்வி பர்த்டேக்கு.."

"அதான் அங்கேயே கேக் வெட்டுவாங்கல்ல... அப்புறம் இது எதுக்கு..."

"அது நான் கொஞ்சம் லேட்டா போகப் போறேன்ல்ல..  கேக் வெட்டி முடிச்சுடுவாங்க... அதான் இத எடுத்துட்டுப் போய் பிருத்வியை வெட்ட சொல்லப் போறேன்... கூட பிரணதியும் இருப்பால்ல..."

"அது சரி... ஆனா நீ போகப் போறதில்லைன்னு சுஜாதா சொன்னாளே... நானும் பாண்டிச்சேரி போய்டுவேன்... கவி சித்தப்பாவும் நைட் வரமாட்டாரு... நீங்க ரெண்டுப்பேரும் பத்திரமா இருங்கன்னு சொன்னாளே...

இப்போ நீ போறேன்னு சொல்ற..."

"நான் அம்மாக்கிட்ட அப்படி சொல்லலையே...  கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு தானே சொன்னேன்... எப்படியோ நாம தனியா தானே நைட் இருக்கப் போறோம்... அத சொல்லியிருப்பாங்க..."

"சரி நீ தனியாவா போப்போற... நானும் உன்னோட வரேன்..."

"நீங்க எனக்கு துணையா... நீங்க சென்னைக்கு வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது... இன்னும் பக்கத்துல இருக்கும் மார்க்கெட், கோவில் ரெண்டைத் தவிர எங்கேயும் போகத்தெரியாது... இதுல என்னோட துணைக்கு வரப்போறீங்களா...??"

"உனக்கும் தானே இந்த இடம் புதுசு... பகலா இருந்தா பரவாயில்ல... நீ கேக் செஞ்சு எடுத்துக்கிட்டு போக 5 ஆயிடுமே... அதுக்கப்புறம் நீ அங்கிருந்து கிளம்பறதுகுள்ள பொழுது போய்டுமே... நீ அந்த நேரத்துல தனியா வர வேண்டாம்... நானும் உன்னோட வரேன்..."

"சாவிம்மா நான் இங்க வந்து ஒரு மாசம் ஆகப்போகுது... எனக்கு எல்லா இடமும் ஓரளவு தெரியும்... அதுவும் மதி அத்தை வீட்டுக்கு வழி நல்லாவே தெரியும்... 5 மணிக்கு கிளம்பி போய்... ஒரு அரை மணி நேரத்தில் கிளம்பிடுவேன்...

இப்போ பொண்ணுங்க நைட் ட்யூட்டியெல்லாம் பார்க்கிறாங்க... நீங்க என்னடான்னா பொழுது போய்டிச்சுன்னு சொல்றீங்க..."

"இது உனக்கு புது இடம் இல்லையா அதான்... சரி பத்திரமா போய்ட்டு வா... போகும் போது சுஜாதாக்கு ஃபோன் பேசிட்டு போ..."

"ம்ம்.. சாவிம்மா... இப்போ நான் கேக் செய்யனும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க...  அப்புறம் இதை பரணை மேல போட்டுடாதீங்க... நாளைக்கு கவி வந்ததும் ரெண்டுப்பேரும் சேர்ந்து உங்களுக்கு ஒரு புது டிஷ் செஞ்சு தரோம்..."

"இது வேறயா... என்ன கடவுள் தான் காப்பாத்தனும்... புலம்பிக் கொண்டே சாவித்திரி சென்றுவிட்டாள்.. ஏனோ சந்தோஷமான மனநிலையில் இருந்தாள் யுக்தா.

ப்னா வந்ததும் அவளைப் பார்த்த பிரணதி உள்ளே போய்விட்டாள்.. ஏனோ பிரணதிக்கு மட்டும் சப்னாவை கண்டாள் பிடிப்பதில்லை... அதற்காக சப்னாவும் கவலைப்பட்டதில்லை... மதி தான் சமயலறையில் இருந்து வந்து வரவேற்றாள்... ஏனோ பிரணதியை சப்னாவிடம் நல்லப்படியாக நடந்துக் கொள்ள சொல்லி யாரும் கட்டாயப்படுத்தியதும் இல்லை... சப்னாவை பார்த்து பிரணதி உள்ளே போனதால் அவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனான் பிருத்வி..

"பிருத்வி நைட் உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன் முடியல... ஸாரி பிருத்வி... அதான் காலையில விஷ் பண்ணேன்... பிருத்வி தெரியுமா அம்மாவும் அப்பாவும் வந்திருக்காங்க...

இங்க அப்பா ஸைட் ரிலேஷன்க்கு மேரேஜ்... இங்க தான் 1 வீக் இருப்பாங்க...

ஏஸி வொர்க் பண்ணலைன்னு அம்மா என்னோட ரூம்ல வந்து படுத்துட்டாங்க... அந்த நேரம் வெளியில வந்து ஃபோன் பண்ணாலும் திட்டு தான் விழும்... எனக்கு மட்டுமில்ல... தாத்தா பாட்டிக்கும் தான்... அவளை நீங்க பார்த்துக்குற லட்சணம் இது தானா...?? அப்படின்னு அவங்கக்கிட்ட சண்டை போடுவாங்க...

அப்புறம் என்னையும்... நீ ஏன் இன்னும் இங்க இருக்க... படிப்பு முடிஞ்சுதில்ல ஒழுங்கா மும்பைலயே இருன்னு எனக்கு திட்டு விழும்... அதான் பிருத்வி ஃபோன் பண்ணல... "

அவளை காதலிக்க ஆரம்பிச்சதுல இருந்து அவனோட பிறந்தநாளுக்கு 12 மணிக்கு அவ விஷ் பண்ணதில்ல... ஆனா மறுநாள் இது மாதிரி ஏதாவது ரீஸன் சொல்லுவா... இவனும் அவ ஃபோனை எதிர்பார்த்ததில்ல... இவனும் அவ பிறந்தநாளுக்கு அதுமாதிரி விஷ் பண்ணதுமில்ல... இப்பவும் அவள் சொன்னதுக்கு "பரவாயில்ல விடு" என்ற பதில் தான் அவனிடமிருந்து வந்தது...

"பிருத்வி இது என்னோட கிஃப்ட்" என்று வண்ண பேப்பரால் அலங்கரிக்கப்பட்ட ஒரு பார்சலை அவனிடம் நீட்டினாள்.

"தேங்ஸ்" என்று பெற்றுக் கொண்டான்.

"பிருத்வி அதுல என்ன இருக்குன்னு பிரிச்சுப் பாருங்களேன்"

"இப்போ என்ன அவசரம் அப்புறம் பார்க்கலாம்..."

"பிருத்வி அப்புறம் ஒரு விஷயம் சொல்லனும்..." அவன் என்ன என்பது போல் பார்த்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.