(Reading time: 22 - 43 minutes)

"லேட்டா போனா அம்மா திட்டுவாங்க... தினம் இப்படித்தான் லேட்டா வருவீயான்னு கேப்பாங்க... இந்த பர்த்டேவை எப்படியெல்லாமோ செலப்ரேட் பண்ணனும்னு நினைச்சேன்... பட் இப்போ முடியல.. அம்மா இங்க இருக்கவரைக்கும் பார்க்க முடியாது பிருத்வி... டைம் கிடைக்கும் போது ஃபோன் பண்றேன்.." என்று விடைப் பெற்று சென்றாள்..

பின் வந்தவர்கள் ஒருவர் ஒருவராக கிளம்பினர்... எல்லாம் முடிந்து வந்து ஃசோபாவில் உட்கார்ந்தான் பிருத்வி... ஏனோ யுக்தா வராதது கவலையாக இருந்தது. ஏனோ சுஜாதா அத்தை யுக்தா வரவில்லை என்று சொன்னாலும் அவள் வருவாள் என்று அவன் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது... ஆனால் இதற்கு மேலா அவள் வரப் போகிறாள்??

கேக் செய்ததால் 5 மணிக்கு கிளம்ப வேண்டும் என்று நினைத்து 5.30 ஆகிவிட்டது... அம்மாவிற்கு ஃபோன் செய்தாள் யுக்தா... வீட்டிலிருந்து பாண்டிச்சேரி புறப்பட்டு விட்டதாக சுஜாதா கூறினாள்... இவள் வரும் விஷயத்தை கூறியதும்.. பிருத்வியை பார்த்துவிட்டு சீக்கிரம் வீடு திரும்புமாறு சுஜாதா கூறினாள்...

அங்கிருந்து ஒரு நகைக் கடைக்கு சென்றாள் யுக்தா... பிருத்விக்கு கிஃப்ட் வாங்குவதற்காக... அவள் சம்பாதித்த பணத்தில் பிருத்விக்கு கிஃப்ட் வாங்க நினைத்தாள்.. படிக்கும்போது ட்ரெயினிங் போன கம்பெனியிலேயே சிறிதுகாலம் பார்ட் டைம் ஆக வேலை செய்தாள்... அந்த பணத்தில் தான் வாங்க நினைத்தாள்...

சிறிதுநேரம் தேடி ஒரு ப்ரேஸ்லட்டை எடுத்தாள்... அதில் SP என்று அச்சிடப்பட்டிருந்தது... SP - சம்யுக்தா பிருத்விராஜ் எத்தனையோ முறை அவள் வாயில் உச்சரித்த பெயர்... இன்று அப்படி சொல்ல உரிமை இல்லை தான்... ஆனால் சம்யுக்தா என்ற பெயருக்கு பின்னால் வேறு எந்த பெயரையும் அவளால் இணைத்துப் பார்க்க முடியாது... கடைசிவரை அவள் மிஸ்.சம்யுக்தா மாதவன் ஆக தான் இருக்கப் போகிறாள்...

ஏனோ அதையே வாங்க வேண்டும் என்றிருந்தது... சப்னாவும் S ல் தானே ஆரம்பிக்கிறது... இதையே வாங்கினால் என்ன..?? என்று தோன்றியது... அதை வாங்கிக் கொண்டு அவள் பிருத்வியின் வீட்டிற்குச் செல்ல மணி ஆறரை ஆகிவிட்டது...

இதற்கு மேலா அவள் வரப் போகிறாள்..?? என்று பிருத்வி நினைக்கும் போதே அழைப்பு மணி அடித்தது... வாசலில் நின்றிருந்தாள் யுக்தா... அவளைக் கண்டு அவன் பார்வை வியப்பில் ஆழ்ந்தது.

"யுக்தா எனக்கு தெரியும்... அத்தை நீ வரமாட்டேன்னு சொன்னாங்க... ஆனா நீ கண்டிப்பா வருவேன்னு நான் எதிர்பார்த்தேன்... உள்ள வா யுக்தா.." அவளை வரவேற்றான்.

அம்மா ஏன் அப்படி சொன்னாங்க... நான் கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்னு தானே சொன்னேன்... அதான் இப்போ ஃபோன் பண்ணும் போது கூட நீ வரப் போறீயான்னு அதிர்ச்சியா கேட்டாங்களோ..?? ஒருவேளை நான் அப்புறம் வரேன்னு சொன்னதை அவங்க கவனிக்கலையோ...??

யுக்தா என்று அழைத்தான்..  யோசனையில் ஆழ்ந்திருந்த அவள் அதில் இருந்து வெளி வந்தாள்..

"ஒன்னுமில்ல பிருத்வி... வரலாமா?? வேண்டாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்... அதான் அம்மாக்கிட்ட அப்படி சொன்னேன்..."

"எனக்கு புரியுது யுக்தா... இருந்தாலும் நீ வந்ததுக்கு தேங்ஸ்.."

"என்ன எல்லாரும் கிளம்பிட்டாங்களா பிருத்வி..?? நான் தான் லேட்டா வந்துட்டனா..??"

"அம்மா அப்பா இருந்திருந்தா எல்லாரும் கொஞ்ச நேரம் இருந்திருப்பாங்க... அவங்க பர்ஸ்ட் கிளம்பிட்டதால... எல்லாரும் உடனே கிளம்பிட்டாங்க... இவ்வளவு நேரம் என்னோட ஃப்ரண்ட்ஸ் ரெண்டுபேரும் இருந்தாங்க... அவங்களும் இப்பத் தான் போனாங்க..(எங்க அவங்களா போனாங்க.. நான் இருந்த மூட்க்கு சரியா அவங்கக் கூட பேசக் கூட முடியல.. அதான் கிளம்பிட்டாங்க)"

"சப்னாவும் கிளம்பிட்டாளா..??(அவளை பார்க்காம இருந்தாலே நல்லது தான்)"

"அவ சீக்கிரமே கிளம்பிட்டா.. அவங்க அம்மா அப்பா மும்பையில் இருந்து வந்திருக்காங்கன்னு.."

"ஓஓ.. ஆமா பிரணதி எங்க..?? பர்த்டே பார்ட்டில மேடம் டயர்டா ஆயிட்டாங்களோ.."

"ஹே.. அவளும் பாண்டிச்சேரிக்கு போயிருக்கா..."

"அப்படியா... நான் கிளம்பும் போது அம்மாக்கு ஃபோன் பண்ணிட்டு தானே வந்தேன்... என்கிட்ட சொல்லைலயே... நான் கூட வரேன்னு சொன்னதுக்கு கும்பல் வேண்டான்னு சொன்னாங்களே..."

"அவ தான் நானும் வருவேன்னு அடம்பிடிச்சு போய்ட்டா... அம்மா அவளை அடிக்கடி அங்க கூட்டிட்டு போவாங்க... நானும் அவங்களை பார்க்கனும்னு சொல்லி கூடப் போய்ட்டா..."

"அம்மா ஏதேதோ சொன்னாங்க பிருத்வி... கஸ்தூரி அம்மா எந்த கஷ்டமும் இல்லாம கடவுள் கிட்ட சேரனும்... அதான் நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டேன்.."

"நானும் அதையே தான் நினைச்சுக்கிட்டேன் யுக்தா... அவங்களை நானும் ரெண்டு தடவை பார்த்திருக்கேன்... ரொம்ப நல்ல பர்சன்.."

"பிருத்வி இது தான் என்னோட கிஃப்ட்" என்று அவள் கைப்பயிலிருந்து ஒரு பார்சலை எடுத்து நீட்டினாள்...

"ஹே... என்ன கிஃப்ட்" என்று நின்றபடியே பிரித்தான்..

"பிருத்வி அப்படியெல்லாம் பிரிக்காதீங்க... அது உடைஞ்சிடும்... கீழே வச்சு பிரிங்க..."

"ஹே... அப்படி என்ன பொருள்..." கேட்டப்படியே ஃசோபாவில் உட்கார்ந்து... மெதுவாகப் பிரித்தான்..." ஒரு சின்ன சாக்லேட் ப்ளேவர் கேக் இருந்தது... பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிருத்வி என்று தமிழில் எழுதியிருந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.