மாலையில் அவர்கள் கிளம்பும்போது சௌந்தரம் ஏக்கத்துடன் பார்த்தார்.
“தம்பி. சுஜயாவை கொஞ்சம் விட்டுட்டுப் போறியா. எனக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.”
தயக்கத்துடன் மனைவியை பார்த்தார். அவள் முகத்திலும் என்ன சொல்வது என்ற கவலை தெரிந்தது. ஆனால் தன் சகோதரியின் முகத்தில் தெரிந்த நிராசை அவரை சம்மதிக்க வைத்தது.
“சரிக்கா. அவளுக்கும் இப்ப லீவுதான். உன் கூட இரண்டு நாட்கள் இருக்கட்டும். சுஜா அத்தையை கிட்டவே இருந்து பார்த்துக்கடா.”
“சரிப்பா.”
அவளை அங்கு விட்டுச்செல்லவே சரஸ்வதிக்கு விருப்பம் இல்லை. ஆனால் படுக்கையில் கிடக்கும் நாத்தனாரின் விருப்பத்தை மறுக்க முடியாமல் கிளம்பினாள்.
வீட்டில் வேலையாட்கள் நிறைய பேர் இருந்தனர். அதனால் அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
டி எல்லாம் இல்லைம்மா. ரொம்ப நல்லவ. என்னை ஒரு மகளா இருந்து கவனிச்சுக்கிட்டா. இந்த வீட்டு ஆம்பளைங்க புத்தி என் மகனையும் விட்டுவைக்கலை. கல்யாணத்துக்கு முன்னாடியே வரப்போறவளை எப்படி மதிக்கனும்னு படிச்சு படிச்சு சொன்னேன். அவன் எதையும் காதில் வாங்கிக்கலை.”
அவள் சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.