(Reading time: 6 - 12 minutes)

கௌஷிக், கௌரி கல்யாணம் நிச்சயம் ஆன நாள் முதல், ஸ்வேதா ஹரியை சைட் அடிக்க, ஹரியோ அதைப் புரிந்து கொள்ளாத தத்தியாகவே சுற்றிக்கொண்டிருந்தான். கௌரியின் வாய் மொழியாக ஹரி விவேகானந்தர், ரமணர் இவர்களின் நேரடி சிஷ்யப் பரம்பரையில் வந்தவன் என்று அறிந்திருந்த ஸ்வேதா, அவனை நம்பிக்கொண்டிருந்தால் தன் அறுபதாம் கல்யாணத்தின்போதுக்கூட காதலை சொல்ல வாய்ப்பில்லை என்பதால், தானே அவனிடம் அவனை விரும்புவதாக சொல்ல, ஹரி ஸ்வேதாவை உருப்படியாக படிக்கும் வேலையை மட்டும் பார்க்க சொல்லி அவளின் காதலை மறுக்க, கடுப்பான ஸ்வேதா, ஹரியை ரிஜெக்டெட் லிஸ்டிற்கு தள்ளி விட்டாள்(மேடம் அப்படி நினைச்சுட்டு இருக்காங்க. அது எப்படி அப்படியே விடறது. அது எல்லாம் நாரதர் வேலை செஞ்சு சேர்த்து வச்சுடுவோம்). கௌஷிக், கௌரி கல்யாணமும் ஏகப்பட்ட ட்விஸ்ட்களுக்குப்பின் ஒரு வழியாக முடிந்தது. ஹரியும் இரண்டு வருடம் சென்னையில் வேலை செய்த பின், அந்தக் கம்பெனி வாயிலாகவே அமெரிக்கா சென்று உள்ளான். ஸ்வேதாவும் தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்து சென்னையில் உள்ள ஒரு IT கம்பெனியில் வேலை செய்கிறாள். அந்தக் கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமாக இப்பொழுது ஒரு மூன்று மாதம் அமெரிக்கா செல்கிறாள்.

ஸ்வேதா ஹரியை ப்ரப்போஸ் பண்ணும்போது அகஸ்மாத்தாக அந்தப் பக்கம் வந்த லக்ஷ்மி மாமி அதைக் கேட்டு விட, ஹரியின் பொறுப்பை எண்ணி அப்பொழுதே தன் பெண்ணிற்கு ஏற்ற வரன் ஹரிதான் என்று மனதளவில் ஃபிக்ஸ் செய்துவிட்டார்.

கௌஷிக்... ஹரி, ஸ்வேதாவை விரும்புவதாகவும், ஆனால் அதை அவனே அவளிடம் கூறி சம்மதத்தை பெற விரும்புவதாகவும் தன் பெற்றோர்களிடம் கூற உடனே தன் கணவனுக்கும் சேர்த்து தானே ஓகே கூறி பச்சைக் கொடியை நாலா பக்கமிருந்தும் ஆட்டிவிட்டார் லச்சு மாமி. லச்சு மாமி கொடியை ஆட்டியப்பின் தலையை ஆட்டுவது மட்டுமே பத்து மாமாவின் வேலை என்பதால் அவரும் அந்த வேலையை செவ்வனே செய்து முடித்தார். ஆனால் இந்த விஷயம் ஹரியின் பெற்றோர் ராமன், ஜானகிக்குத் தெரியாது. இதை வைத்தே பலமுறை ஹரியை ப்ளாக்மெயில் செய்து வருகிறாள், ஹரியின் அக்காவும் , ஸ்வேதாவின் மன்னியுமான கௌரி.

ஹரி நல்ல முறையில் செட்டில் ஆகியபிறகு ஸ்வேதாவை தொடர்பு கொண்டு தன் காதலைக் கூற முயல, ஒரு ஒரு முறையும் அவனைத் தவிர்த்து வந்தாள் ஸ்வேதா. வைட் ஹவுஸ்ல பிஜிலி வெடி எல்லாம் வெடிச்சு தீபாவளி கொண்டாடற ஒபாமாக்கு, ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்திங்கற பழமொழியும் தெரிஞ்சு இருக்கும் போல, அதனால ஸ்வேதாவிற்கு உடனே விசா அப்ரூவல் ஆகி இதோ நாளைக்கு அவளும் ஹரி இருக்கும் அமெரிக்காவிற்கு போகப்போகிறாள்.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.