(Reading time: 8 - 16 minutes)

வனது நெருக்கத்தை விரும்பாதவள் போல அவள் எழ பார்த்தாள்.

"ஹனி!என்னால டக்குன்னு எழ முடியாது!டயர்டா இருக்கேன்!"-என்றான் சிறு குழந்தையை போல!!அவளுக்கு சிரிப்பு வந்த போதும் அதனை முகத்தில் காட்டவில்லை அவள்.

பேசாமல் அமர்ந்தாள்!!!

"ஏ...ராட்ஸஸி!ஏன் இப்படி கோபப்படுற நீ?"

"..............."

"சரி...லாஸ்ட் சான்ஸ்!இனி இந்த மாதிரி தப்பை பண்ண மாட்டேன்!உனக்கே தெரியும்ல அந்த குமார் என்டர்பிரைசஸ் எம்.டி. ஒண்ணுமில்லை என்றாலும் 

ஹாரன் அடிப்பான்!!அப்பாவோட ஃப்ரண்டு வேற!அதனால,அவன் சகவாசத்தையும் விட முடியலை!!அதான்மா லேட்டாயிடுச்சு!!"

"நான் உனக்கு ரொம்ப தொல்லை கொடுக்கிறேனா ஆதி?"-அப்போது தான் அவன் கோபத்தில் உளறிய வாக்கியங்கள் நினைவு வந்தன.

அவள் கண்கள் தன்னால் கசிய ஆரம்பித்தன.

"ஏ...ஹனி!ஸாரி!எக்ஸ்டிரீம்லி ஸாரி!"-என்று அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.

"நீயும் என்னை புரிஞ்சிக்க மாட்றன்னு ஒரு டென்ஷன்...அதான்!!!ஸாரி!ஸாரி!"

"போ!என் கூட பேசாதே!!!"

"உன் கூட பேசாம!!ரொமான்ஸ் பண்ண உனக்கு தங்கச்சி கூட இல்லையேம்மா..ஐயயோ!!"-அவன் எதையோ சிந்திப்பது போல நடிக்க அவள் உண்மையில் காளி அவதாரமே எடுத்துவிட்டாள்.

"உனக்கு அந்த நினைப்பு வேற இருக்கா?உன்னை எல்லாம் உயிரோடவே விடக்கூடாது!"-அவள் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து அவன் மேல் வீசினாள்.

"ஏ..வேணாம்!வலிக்குது!! எனக்கு எதாவது ஆச்சுன்னா அப்பறம் உன் தாலிக்கு தான் பிரச்சனை!சாகுறதை பற்றி எனக்கு ஒண்ணும் இல்லை!"-இறுதி வாக்கியத்தை கேட்டவள் பதறியப்படி அவன் அணைப்பினுள் சேர்ந்தாள்.

"ஏ..."

"அதுக்கு முன்னாடி நான் செத்துடுவேன்!"-என்ன பதில் கூறுவான் இதற்கு??

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணினான் அவன்.

"ஐயோ!!என் லூசு காதலியிடம் எப்படி பேசினாலும் மாட்டிக்கிறேனே!!கல்யாணத்துக்கு அப்பறம்  ஃப்லாஸ்டர் தான் ஒட்டிட்டு வீட்டுக்கு வரணும் போல இருக்கே!!"

"போ ஆதி!"-அவள் முகம் தொலைந்த புன்னகையை நாணத்தோடு சேர்த்துக் கொண்டது.

"ஸாரி ஆதி!"-அவன் வானத்தை எட்டிப் பார்த்தான்.

"என்ன?"

"இல்லை...மழை எதாவது வருதான்னு பார்த்தேன்!"

"எதுக்கு?"

"நீ ஸாரி கேட்டுட்டியே!ஓ...இது மழை சீசன் இல்லை...ஒருவேளை பூகம்பம் வரலாம்!இது புது பில்டிங் தான் பயப்பட வேண்டியதில்லை!"-அவள் மீண்டும் அவனை முறைத்தாள்.

"சாந்தி!!சாந்தி!!மறுபடியும் எதையாவது தூக்கி அடிக்காதே!"

-அவள் மீண்டும் அவனது அணைப்பினுள் சேர்ந்தாள்.

"ஐ லவ் யூ ஆதி!"-நீண்ட நேரமாய் அங்கு மௌனமே குடிக்கொண்டிருந்தது.

அவர்கள் அந்த மௌனத்தை கலைக்க விருப்பம் கொள்ளவில்லை.

நீண்ட நேரத்திற்கு பின் நிஜ உலகிற்கு வந்தவன்,

"ஹனி!நீ இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா!அப்பறம்,நான் நமக்கு கல்யாணம் ஆகாத விஷயத்தையே மறந்துவிடுவேன்!பார்த்தக்கோ!"

என்றான்.

அவன் கூற வந்ததன் பொருள் விளங்கியவள் அவனது நெருக்கத்தினை தியாகம் செய்தாள்.

"எனக்கு பசிக்குது!"-அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"நீ இன்னும் சாப்பிடலையா?"என்றாள்.

அவளை விசித்ரமாய் ஒரு பார்வை பார்த்தவன்,

"இந்த கேள்விக்கு நான் கோபப்பட மாட்டேன்னு நீ நம்புறீயா?"

"சரி...சரி...டென்ஷன் ஆகாதே!வா சாப்பிடலாம்!!"-இருவரும் சற்று நேரத்திற்கு முன் சண்டையிட்ட நிகழ்வை மறந்து போயிருந்தனர்.

காதலின் அதிகப்பட்ச முதிர்ச்சி இதுவே ஆகும்!!ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை!!!உணர்வுகள் ஆண்,மற்றும் பெண் இருவருக்கும் சமமானதே!!ஆண்,பெண் இருவருக்கும் ஒரே வகை உணர்வு தான் எழ வேண்டும் என்பதில்லை!!!அது வேறுப்படலாம்!!ஆனால்,எவ்வகை உணர்வாக இருந்தாலும் அதனை அடுத்தவர் மதித்து வாழ்வதே காதலின் அடையாளம்!!!நாம் அளிக்கும் அன்பு நமக்கு திரும்பவில்லை என்ற வருத்தம் சிலருக்கு இருக்குமாயின் அந்த எண்ணத்தை திருத்திக் கொள்ளுங்கள்!!!தாமதமாக கிடைத்தாலும் அன்பின் சுவை மாறாது!!!யார் எப்படி இருந்தால் என்ன??தேள் கொட்டுவதால் நாமும் தேளை வஞ்சம் தீர்த்தால் நமக்கும் தேளுக்கும் என்ன வித்தியாசம்??நாம் அன்பை வழங்கியப்படி இருப்போம்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.