(Reading time: 20 - 39 minutes)

நீயும் ஏண்டா… அவனோட மல்லுக்கு நிக்குற?... அவன் தான் புத்திக்கெட்டு ஏதேதோ செய்யுறான்னா, நீயும் ஏண்டா இப்படி?...” என அழுத வைஜெயந்தியிடம்

“இவன் ஏன்ம்மா இப்படி இருக்குறான்… சே… அப்பாவை… அப்பா….வ…” என சொல்ல முடியாது திணறியவனின் தோள் மீது கைவைத்த கேசவனைப் பார்த்தான் விஜய்…

“விஜய்…” என்று சொல்லியபடி அவனை அணைத்துக்கொண்டவரை பதிலுக்கு அணைத்தவன்,

“என்னை மீறி அவன் உங்க கிட்ட நெருங்க முடியாதுப்பா… அவனை நான் பார்த்துக்குறேன்…” என்று சொல்ல, மகனை உச்சி முகர்ந்து முத்தமிட்டவர்,

“உன்னை இத்தனை நாள் பிரிஞ்சி இருந்துட்டனேடா…” என சொல்லி அழ, தகப்பனின் கண்ணீரை துடைத்துவிட்டவன், விடுங்கப்பா… என்றான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே"... - குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்... 

“அவனுக்கு காலா காலத்துல கல்யாணம் செஞ்சி வச்சிருந்தா அவன் இப்படி பாதை மாறி போயிருக்கமாட்டாண்டா… அவன் விஷயத்துல செஞ்ச தப்பை இனி உன் விஷயத்திலேயும் நாங்க செய்ய தயாரா இல்லை…” என அழுத்தமாக சொன்ன தகப்பனை அவன் பார்த்த போது,

“ஆமா விஜய்… உனக்கு சீக்கிரமே கல்யாணம் செய்துவைக்க முடிவு பண்ணிட்டேன்… ஆனா கண்டிப்பா உன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு தான் உனக்கு மனைவி… அதிலேயும் அப்பா தெளிவா இருக்குறேன்…” என்றவர், மனைவியிடமும், “சரிதானே வைஜெயந்தி…” என்று கேட்க, அவரும் புன்னகையுடனே ஆம்… என்றார்…

“அப்பா… ஒரு தகப்பனா நீங்க எனக்கு கல்யாணம் செய்து வைக்க நினைக்குறது உங்க கடமை… அது எனக்கு புரியுது… ஆனா என் மனசுக்கு பிடிச்ச பொண்ணா தான் என் மனைவி இருப்பான்னு சொன்னீங்கள்ள, அது மட்டும் நிஜம்ப்பா…” என அவன் சொன்னதும்,

“என்னடா… சொல்லுற?...” என வைஜெயந்தி கேள்வி கேட்க,

“ஆமாம்மா… எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு… உங்க சம்மதத்தை கேட்க தான் இப்போ அவசரமா வீட்டுக்கு வந்தேன்… வந்த இடத்துல அப்பா என்னை பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டார்… நானும் இதை நாளைக்கு சொல்லலாம்னு நினைச்சிட்டிருந்தப்போ, அப்பாவா கல்யாணம் விஷயம் பத்தி பேசிட்டார்… அதனால தான்மா சொல்லிட்டேன்….” என்றான் அவன் சற்று தயங்கிக்கொண்டே…

‘யாருப்பா அந்த பொண்ணு?... பேரென்ன?...” என கேட்ட தாயிடம்,

“உனக்கு கூட தெரியும்மா அந்த பொண்ணை… அவ பேரு பவித்ரா….” என சொன்னதும் வைஜெயந்திக்கு புரிந்துவிட, உதட்டில் பூத்த புன்னகை சற்று நேரத்தில் காணாமல் போனது அவருக்கு….

“என்ன வைஜெயந்தி?... ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட?... என்னாச்சு?... அந்த பொண்ணை உனக்குத் தெரியுமா?... யாரு அந்த பொண்ணு… சொல்லு… அந்த பொண்ணு வீட்டுல போய் நாம பேசலாம்…” என சொன்ன கேசவனிடம், தயங்கி தயங்கி பவித்ராவை பற்றி அவர் சொன்னதும்,

“நானும் காதலிச்சிருக்கேன் வைஜெயந்தி… உன்னை காதல் திருமணம் செய்தவன் தான் நான்… அதனால எனக்கும் புரியும்… காதல்னா என்னன்னு… உன்னை முதல் முதலா பார்த்தப்பவே எனக்கு பிடிச்சு போச்சு… அப்போ எனக்கு உன் ஜாதி, உன் குடும்பம், எதுவுமே தெரியாது… அப்பவே முடிவு பண்ணினேன்…. கல்யாணம்னு ஒன்னு செஞ்சா அது உன்னைத்தான்னு… அது போல தான் இப்போ விஜய்யும் முடிவெடுத்திருக்குறான்… வளர்ந்த இடத்துல அவளுக்கு சொந்தம் அதிகம் இல்லன்னா என்ன இனி வாழப்போற இடத்துல அவளுக்கு சொந்தமா நாம எல்லாரும் இருப்போம் எப்பவும்…” என சொன்னதும், கணவரை அணைத்துக்கொண்டார் வைஜெயந்தி…

“ஹேய்… என்ன இது… பையன் முன்னாடி…” என வெட்கப்பட்ட கேசவனிடம்,

“அவன் எதுவும் நினைச்சிக்க மாட்டான்… அப்படித்தானடா?...” என கேட்க, அவனும் ஆம் என்று தலை அசைத்துவிட்டு,

“தேங்க்ஸ்ப்பா…” என சொல்லி, கேசவனின் தோள்களில் சாய்ந்து கொண்டான்…

ரவு முழுவதும், ஜித், தருணுடன் சேர்ந்து குடித்து, நாளை செய்ய வேண்டிய வேலையையும் பேசி முடிக்க, ராஜேஷ் இதெல்லாம் வேண்டாம் டா என தடுத்துக்கொண்டிருந்தான்… அவன் சொல்வதை அவர்கள் இருவரும் காதில் ஏற்றினால் தானே… ஹ்ம்ம்… ஹூம்…

வித்ராவிற்கு விஜய் நடந்து கொண்ட விதம் ஒருவித குறுகுறுப்பையும், பதட்டத்தையும் உருவாக்கி இருக்க, தூக்கம் வராமல் தவித்தாள் அவள்… கார் கண்ணாடியில் தன்னை பார்த்தது, நதிக்கரையில் யாரோ பார்ப்பது போல் இருக்க திரும்பி பார்த்த போது அவன் அது தான் இல்லை என்று பிரபுவிடம் பேசிய விதம், சில மணி நேரத்திற்கு முன் அவன் ஸ்பரிசம் தன் மீது பட்டது என அனைத்தையும் யோசித்துக்கொண்டே இருந்தவளுக்கு தூக்கம் வரும் வழியே தெரியவில்லை கொஞ்சமும்…

பொழுதும் விடிந்தது… ஆனால் இந்த ஒரு பொழுது அனைவரின் வாழ்விலும் பெரும் மாற்றத்தைக்கொண்டு வரும் பொழுதாய் இருக்குமென்று யாரும் அப்போது எண்ணவில்லை கொஞ்சமும்…

வாக்கிங்க் செல்வதற்காக எழுந்த மகத், அங்கே வந்து கொண்டிருந்த சதாசிவம் தாத்தாவையும், பார்வதி பாட்டியையும் பார்த்து அவர்களின் அருகில் ஓடினான்…

“வாங்க தாத்தா… வாங்க பாட்டி… என்ன தாத்தா… சொல்லியிருந்தா நான் கூப்பிட வந்திருப்பேனே…” என அவர்கள் இருவரிடமும் இருந்து பைகளை அவன் வாங்கி கொள்ள,

“இல்லப்பா… உன்னையும் நதிகாவையும் பார்க்கணும் போல இருந்துச்சு… அதான் வந்துட்டேன் உன் பாட்டியையும் அழைச்சிகிட்டு…” என்றவரிடம், புன்னகை பூத்தபடியே உள்ளே அழைத்துச் சென்றான் அவன்…

ருணதியும் வேலைக்கு வந்துவிட, பொழுது நகர ஆரம்பித்த வேளை,

அங்கே கன்யா வந்தாள் காவேரியைப் பார்க்க…

அவர் அவளை பார்க்க மறுக்கவே, போராடினாள் அவள்… கடைசியில் அவர் முடியவே முடியாது என்று சொல்லிவிட, ஆத்திரத்துடன் அங்கிருந்து அகன்றவள், ருணதி யாருடனோ பேசுவதை கண்டு அவள் பக்கம் சென்றாள்…

“அப்பா தான் இப்போ சமாதானம் ஆகிட்டாரே…. இன்னும் ஏன் வீட்டிற்கு வர மறுக்குற?... நீ நான் துருவன் எல்லாரும் சேர்ந்து வாழலாமே… வா… ருணதி… ப்ளீஸ்…” என கெஞ்சிக்கொண்டிருந்தவன் யாராக இருக்கும் என்று பார்த்தவள், அவனையும் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்…

அவள் வந்தது காவேரிக்கும், பவித்ராவிற்கும் மட்டுமே தெரியும்… வேறு யாரும் கவனிக்கவில்லை…

ஜித்தின் வார்த்தைகளுக்கு எந்த பதிலும் சொல்லாது, அமைதியாய் சென்றவளை பார்த்தவனுக்குள் வெறி தலைக்கேறியது… புயலென அங்கிருந்து சென்றான் அவன் வேகமாய்…

சிறிது நேரத்திற்குப் பிறகு,

“நதி… எங்கடா இருக்குற?... சாப்பிடலாம்… வா…” என பவித்ரா அழைத்த போது, அவள் அங்கு இல்லை…

மகத்தின் அருகில் இருக்கிறாளா என்று பார்க்க்ச் சென்ற பவித்ரா, அவனிடம் கேட்க, அவன் நதி எங்கே என்ற கேள்வியோடு நிற்க, அந்நேரம் அவனுக்கு ஒரு போன் வந்தது…

பெயரைப் பார்த்தவனுக்குள் சட்டென்று ஒரு அதிர்வு அலை பரவ, எதுவும் காட்டிக்கொள்ளாது போனை எடுத்தான்…

“உன் பொண்ணு இப்போ எங்கிட்ட தான் இருக்குறா… உன் பொண்ணு உனக்கு உயிரோட வேணும்னா நான் சொல்லுற இடத்துக்கு நீ வரணும் ருணதியோட…” என்று சொல்லோடு எதிர்முனை துண்டிக்கப்பட, அடுத்து என்ன செய்வது என யோசித்தான் அவன்…

“உங்கூட கொஞ்சம் பேசணும்… எங்கூட வா…” என ருணதியை அவன் அழைத்த போது, அவள் மறுத்தாள்… பின் அவன் கண்களில் என்ன கண்டாளோ, எதுவோ சரியில்லை என்றபடி அவனுடன் செல்லத் தயாரானாள்…

அவனுடன் சேர்ந்து அவள் காரில் அமர்ந்த போது, அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தான் ஜித் தனது காரில்…

வித்ரா நதிகாவை காணவில்லை என்ற தகவலை காவேரிக்கு சொல்ல, அந்நேரம் பிரபுவும் அங்கு வர, அனைவரும் மகத்தினை பின் தொடர்ந்து செல்ல ஆயத்தமான வேளை, விஜய்க்கு போன் செய்து அவனையும் வரும் வழியில் சேர்ந்து கொள்ள சொல்லிவிட்டு, சதாசிவம் தாத்தாவையும், காவேரியையும் அழைத்துக்கொண்டு பிரபு கிளம்பினான்…

பவித்ரா இல்லத்திலேயே இருந்துவிட, பார்வதி பாட்டியும், அவளும் என்ன நடக்கப்போகிறது என்றபடி கைகளை பிசைந்துகொண்டு ஒருவரின் ஒருவர் முகம் பார்த்துக்கொண்டனர்…

வர சொன்ன இடத்திற்கு மகத் ருணதியோடு வந்து சேர, “வா அசிஸ்டெண்ட்… வா… உன் பொண்ணை பார்க்க அவ்வளவு ஆர்வமா?... அவ இங்க தான் நிம்மதியா தூங்கிட்டு இருக்குறா… இன்னும் கொஞ்ச நேரத்துல முழுசா தூங்கிடுவா… அவளை நான் கொல்லப்போறேன்…” என சொல்ல,

“கன்யா…..” என சீறினான் மகத்…

“என்ன கன்யா?... சொல்லு?... என் வாழ்க்கையை எல்லாரும் சேர்ந்து திட்டம் போட்டு கெடுத்துட்டீங்கள்ள…” என சொல்லிவிட்டு ருணதியை ஆத்திரத்தோடு முறைத்தவள்,

“இனி இவளும் நிம்மதியா இருக்க முடியாது….” என சிரித்துவிட்டு கைகாட்ட, அங்கே துருவனும் தூங்கிக்கொண்டிருந்தான் நதிகாவின் அருகே…

அதிர்ச்சியில் உறைந்தவளாய் ருணதி இருக்க, ஆத்திரத்துடன் சிரித்த கன்யா, துப்பாக்கியை எடுத்து நதிகாவை குறிவைக்க,

“கன்யா… ப்ளீஸ்… எதுவும் செஞ்சிடாத… வேண்டாம்….” என மகத் கெஞ்ச

“ஹாஹா… அன்னைக்கு எதுவோ சொன்ன, உன்னை கெஞ்ச வைக்க முடியாதுன்னு… இன்னைக்கு கெஞ்சுறீயா… கெஞ்சு… நல்லா கெஞ்சு…” என குரோதத்துடன் அவள் சொல்ல,

“நான் சொல்லுறதை கேளு… பைத்தியம் மாதிரி எதுவும் செஞ்சிடாத….” என்றான் மகத்

“ஆமாடா நான் பைத்தியம் தான்… உங்க எல்லாராலயும் தான் நான் இப்படி இருக்குறேன்… உன் உயிர் இந்த ருணதியும், இந்த நதிகாவும் தான… முதலில் நதிகா, அப்புறம் இந்த ருணதி…” என சொல்லிக்கொண்டே நதிகாவின் அருகில் சென்றவளை மகத் தடுக்க முனைந்த போது,

“இப்படி சில்லியா நடந்துகிட்ட அப்புறம் நடக்குறதே வேற… என் பக்கத்துல வர ட்ரை பண்ணாத… புரிஞ்சதா?... என் வாழ்க்கையில நீ வந்த பாவத்துக்கு உனக்கு என்னோட தண்டனை இது தான்…” என சொல்லி நதிகாவை அவள் சிரிப்போடு பார்த்த போது,

“அது எனக்கு தர்ற தண்டனை இல்லை… நதிகாவை நீ எதாவது செஞ்சா அது உனக்கு நீயே கொடுத்துக்குற மரண தண்டனை…” என சொல்ல, அவனை புரியாமல் அவள் பார்த்துவிட்டு,

“என்னை திசை திருப்ப பார்க்குறீயா அசிஸ்டெண்ட்…” என பயங்கரமான முகத்துடன் அவள் கேட்டபோது,

“கன்யா என்னை நம்பு… நான் சொல்லுறது நிஜம்… உன்னோட இவ்வளவு நாள் வலிக்கு மருந்து கிடைக்குற நேரத்துல அதை கெடுத்துடாத…” என அவன் சொல்ல அவள் அவன் சொல்வதை காது கொடுத்து கேட்க தயாராக இல்லை…

“கன்யா… சொல்லுறதைக் கேளு… வேண்டாம்…” என அவன் சொல்ல சொல்ல, அவள் முன்னேறிக்கொண்டிருந்தாள்…

துப்பாக்கியில் தனது விரலை அவள் வைத்த போது “கன்யா………………….” என்ற மகத்தின் சத்தம் அதற்குள் அங்கு வந்துவிட்ட அனைவரையும் உலுக்க ஜித்தினை தொடர்ந்து அனைவரும் அந்த இடத்திற்குள் நுழைந்தனர் வேகமாய்…

தொடரும்

Episode # 33

Episode # 35

{kunena_discuss:907}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.