(Reading time: 8 - 16 minutes)

தென்ன ஜானகி, கௌரியை அப்படி சொல்லிட்டேள்.  பிளேனக்கூட ஈஸியா ஓட்டிண்டு வந்துடலாம்.  கிருஷ்ணாவ சமாளிச்சுண்டு வர்றது எத்தனை கஷ்டம் தெரியுமோ இல்லையோ.  குட்டி ஒரு இடத்துல உக்காறாது.  இந்த மூலைக்கும், அந்த மூலைக்கும் ஓடிண்டே இருப்பான்.  அவனை சாமாளிச்சு சென்னை வந்து சேர்றது, கௌரி ராக்கெட்ல நிலாக்கு போறதுக்கு சமம்”

கௌரியின் நான் ஸ்டாப் நான்சென்ஸ் பேச்சையே கேட்டு இருந்ததால், அமைதியாக தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் ஸ்வேதாவை எப்பொழுதுமே ஜானகிக்குப் பிடிக்கும்.  தான் மட்டும் அல்லாமல் தான் இருக்கும் இடத்தையும் எப்பொழுதும் கலகலப்பாக வைத்திருக்கும் கௌரியை லச்சு மாமிக்கு மிக மிகப் பிடிக்கும்.

இரு மாமிகளும் மாறி, மாறி தங்கள் மாட்டுப்பெண்களை உயர்த்தி வைத்துப் பேசுவதை மற்ற மூவரும் டென்னிஸ் மேட்ச் பார்ப்பதைப் போல பார்த்தனர்.  இவர்கள் பேசுவது இப்போதைக்கு நிற்காது என்று அறிந்த ஸ்வேதா தனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை என்று கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.  பின்னர் சிறிது நேரம் பேசிய பிறகு ராமனும், ஜானகியும் மறுநாள் விமான நிலையம் வருவதாகக் கூறி விடை பெற்றனர். 

ஸ்வேதா தன் தந்தை வாங்கிய மருந்துகளை எடுத்துக்கொண்டு, மீதி பாக்கிங் முடிக்க சென்றாள்.  அவள் எடுத்து வைத்துக்கொண்டிருக்கும்போதே Facetime-ல் கௌரியின் கால் வந்தது.

“ஹே ஸ்வேதா, எப்படி இருக்க.  பாக்கிங் எல்லாம் முடிச்சிட்டியா”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்...

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“பண்ணிண்டே இருக்கேன் மன்னி.  இப்போதான் உங்க அம்மா, அப்பா எல்லாம் வந்துட்டுப் போனா”, என்றபடியே அவள் படுக்கை முழுவதும் இறைத்து வைத்திருக்கின்ற பொருட்களை வீடியோவில் காட்டினாள் ஸ்வேதா.

“எங்கம்மாவை ஒரு வாட்டி உன்னோட ரூமுக்கு கூட்டிண்டு வந்து காமிச்சிருக்கலாம்.  எப்போப் பார்த்தாலும், ஸ்வேதா மாதிரி இரேன்டி..... அவ ஆத்தை எப்படி பளிச்சுன்னு வச்சுண்டு இருக்காப் பாருன்னு சொல்லி சஹஸ்ரநாம அர்ச்சனை பண்றதை நிறுத்தி இருப்பா”

“மன்னி, இதெல்லாம் ஓவர்.  இன்னைக்கு ஒரு நாள்தான் என் ரூம் இப்படி இருக்கு.  ஆனா உங்க ரூம் வருஷம் முழுக்க அப்படித்தானே அதான் மாமி திட்டறா”

“சரி சரி விடு விடு.  வீடு எப்பவுமே கொஞ்சம் குப்பையாத்தான் இருக்கணும் ஸ்வேதா.  அப்போத்தான் திருஷ்டி படாம இருக்கும்”,இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கௌஷிக் போனை நோண்டிக்கொண்டே வந்து கௌரியின் அருகில் அமர்ந்தான்.

“அப்பறம் ஸ்வேதா.  இன்னும் ரெண்டு நாள்ல உன் ஆளைப் பாக்கப்போற. ஒரே குஷிதான் போ”

“அது யாரு கௌஷிக் என் ஆளு”

“என் பாச மச்சான் ஹரிதான்.  புள்ளப்பாவம் ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை தனிமையே’ன்னு ஸோலோவா perform பண்ணிண்டு இருக்கு.   நீ போய் டூயட் பாட ஆரம்பிச்சுடு”

“ஸ்வேதா உங்க அண்ணா சொல்றதை எல்லாம் கேக்காத.  அவனைப் பார்த்தெல்லாம் சப்ப பிகர் ஓகே சொல்றதே கஷ்டம்.  இதுல சூப்பர் பிகர் நீ லவ்வ சொன்னா, விழுந்தடிச்சிண்டு சரின்னு சொல்லாம, அறிவுரைங்கற பேருல மொக்கை போட்டான் இல்லை.  தனியாவே பாடிண்டு அலையட்டும்”

“ஏன் கௌரி, இத்தனை கொலைவெறி உனக்கு.  அவன் அவ படிக்கணும், டிஸ்டிராக்ட் ஆகக்கூடாதுங்கற நல்ல எண்ணத்துலதான சொன்னான்”

“அண்ணா, மன்னி எதுக்காக நீங்க எனக்காக அடிச்சுக்கறேள்.  அதெல்லாம் நான் எப்பவோ மறந்தாச்சு.  இப்போ எனக்கு என்னோட காரீர் மட்டும்தான் முக்கியம்.  அதுல எப்படி மேல வர்றதுன்னுதான் பார்க்கறேன்”

“வெரி குட் ஸ்வேதா, இதை இப்படியே USலேர்ந்து திரும்பி வர்ற வரை மெயின்டெயின் பண்ணு.  அவன் எப்படியுமே அம்பிதான் அப்படியே  வந்தாலும் லவ் டயலாக் எல்லாம் அடிக்கத்தெரியாது, ஸோ சமாளிச்சுக்கலாம்”

“கௌரி, நீ பண்றது நன்னாவே இல்லை.  அவன் எத்தனை முறை இவக்கிட்ட பேச ட்ரை பண்ணினான்.  இவ பேசினாளா.  அட்லீஸ்ட் அவன் தரப்பை சொல்றதுக்கானும் ஒரு சான்ஸ் கொடுத்திருக்கலாம் இல்லை”

“எதுக்கு இல்லை எதுக்குன்னு கேக்கறேன்.  எங்களுக்கும் கெத்து இருக்கு இல்லை.  ஸ்வேதா அதெல்லாம் நீ விட்டுக் கொடுக்காத”

“இப்படியே நீ அவளை ஏத்தி விடு.  ஸ்வேதா எனக்கு ஒரு கான்கால் இருக்கு நான் பேசிட்டு வரேன்.  திரும்ப நாளைக்கு நீ கிளம்பறதுக்கு முன்னாடி பேசறேன். bye”

“ஓகே கௌஷிக்.  நீ பாரு.  bye”, கௌஷிக் உள்ளே செல்ல கௌரி, ஸ்வேதாவின் அரட்டை தொடர்ந்தது.

உள்ளே நுழைந்ததும் அறையைப் பூட்டிய கௌஷிக்,  இந்தப்பக்கம் ஹரியுடன் பேச ஆரம்பித்தான்.

“ஹரி அவா ரெண்டு பெரும் பேசினதைக் கேட்ட இல்லை.  என் தங்கை கூட அத்தனை கோவத்துல இல்லை, ஆனா உங்கக்கா ஏத்திவிட்டு ஏத்திவிட்டு அதை அதிகப்படுத்தறா.  அவ அங்க வர்ற மூணு மாசத்துல அவ மனசை எப்படி மாத்தப்போற”

“கவலையேப்படாதீங்கோ கௌஷிக்.  அதான் மூணு மாசம் டைம் இருக்கே.  ஏதானும் யோசிக்கலாம். இத்தனை நாளா  நான் ஒரு இடம், அவ ஒரு இடம் அதனால ஈஸியா எஸ்கேப் ஆகிட்டா.  இப்போ நான் இருக்கற இடத்துக்குதானே வரப்போறா.  இனி fulltime ரெமோ வேலைப் பார்த்துட வேண்டியதுதான்”

“என்னவோ போ.  எல்லாம் சுபமா முடிஞ்சா சரிதான்”, என்று கூறி தொலைபேசியை வைத்தான்.  ஹரி இப்பொழுதிலிருந்தே எந்த விதத்தில் ஸ்வேதாவை அணுகுவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.