(Reading time: 29 - 57 minutes)

வர்கள் இருந்த இடத்திலிருந்து ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி கதையாக   அத்தனை எக்‌ஸ்கெலேட்டர்…. அத்தனை கடை என தாண்டி இந்த குறிப்பிட்ட  ஷாப் அருகில் வந்த நேரம்… சட்டென நின்ற இன்பா “மனோ இன்னைக்கு ஐஸ் க்ரீம் வேண்டாம்….இன்னொரு டைம் வருவோம் “ என இவள் கையை பிடித்து இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு அருகிலிருந்த காஃபி ஷாப்புக்குள் சென்று அமர்ந்தாள்.

ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை மனோவுக்கு….. ஆனாலும் இன்பா யாரையோ தவிர்க்க இதை செய்கிறாள் என புரிந்ததுதான்….

“நீ காஃபி சாப்ட மாட்டல்ல…..சாரி  அவசரத்துல இங்க வந்துட்டேன்….கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ….இப்ப போயிடலாம்…..” இன்பா இவளுக்கு ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கண் கடை வாசலில் நின்று போகிறது.

இன்பாவின் பார்வையை பின்பற்றி மனோவும் திரும்பிப் பார்த்தாள்.  ஒருவன் உள்ளே வந்து கொண்டிருந்தான். நல்ல உயரம்….. ஒல்லி என சொல்ல முடியாவிட்டாலும் உருவிவிட்டார் போன்ற உடல்வாகு…. களையான சதுர முகம்….ப்ரென்ச் பியர்ட்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

அவன் இவர்களை கவனித்ததாகவே தெரியவில்லை…..இன்பாவின் பார்வையோ அவனைவிட்டு விலகுவதாகவே இல்லை…. எச்சில் விழுங்கி சற்று மிரண்ட பாவத்துடன் அதே நேரம் அவனை விழுங்குவது போல ஒரு விதமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் உள்ளே வந்து யாரிடமோ எதையோ பேசி…..கையில் ஒரு கப் காஃபியுடன் வெளியேறும் வரைக்கும் கூட இன்பாவின் பார்வை அவனைத்தான் தொடர்ந்தது.

அடுத்து அவன் பார்வையிலிருந்து  மறையவும் சின்ன புன்னகையுடன் அவளது வழக்கமான தொனிக்கு மாறி இருந்தாள் இன்பா.

“சரி இவ்ளவு தூரம் வந்தாச்சு …சோ நான் ஒரு காஃபி குடிக்கலாம்னு நினைக்கிறேன்….” சொல்லிய இன்பாவின் மொத்த முகமும் மகிழ்ச்சியில் மின்னுவது போல் இருந்தது பார்த்துக் கொண்டிருந்த மனோவிற்கு…

‘ஐஸ்க்ரீம் சாப்ட வந்துட்டு காஃபியா?...அதுவும் இப்பதான் உடனே போய்டுவோம்னு சொல்லிட்டு….இதென்ன திடீர் காஃபி’ மனோ யோசித்துக் கொண்டிருக்கும் போதே இன்பாவின் கண்ணில் மீண்டும் அந்த மிரண்ட பார்வை…..

அவள் பார்வை தொட்ட திசையை இப்போதும் மனோ திரும்பிப் பார்க்க அங்கு அதே அவன்….திரும்பவும் உள்ளே  வந்து கொண்டிருந்தான்… அதுவும் மலர்ந்த முகத்துடன்… இவர்களைப் பார்த்து.

மனோ இப்போது இன்பாவை திரும்பிப் பார்த்தாள்…இன்பாவின் முகத்திலும் புன்னகை வந்திருந்தது. முழு மின்னுதலும்தான்…..ஆனால் அதன் அடியில் ஒரு சங்கட உணர்வு மறைந்து கிடந்ததோ?

“ஹாய் இன்பா….. வெளிய போன பிறகுதான் கவனிச்சேன், இங்க இருக்றது நீயோன்னு தோணிச்சு “ என இன்பாவப் பார்த்து சொன்ன அவன்…… மனோவை நோக்கி “ஹலோ….ஐ’ம் ஜோவன்” என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான்.

ஒரு ஃபார்மல் புன்னகையுடன் ஹலோ சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் கவனிக்க தயாரானாள் மனோகரி.

இன்பாவின் தகிடுதம் தடுமாற்றம் முக மின்னல் எல்லாம் இவளுக்கு சொல்லும் சேதி உண்மைதானா? இந்த பாட்டிக்கும் களஞ்சியத்தின் பிடிவாதத்திற்கும் இடையில் கிடந்து இழுபடும் இன்பாவிற்கு திருமணம் என்பது ஒரு சரியான தீர்வாய் இருக்கும் என்பது இவள் நினைவு…

அதே நினைவில் இவள் அவர்களைப் பார்த்தால் இரண்டாவது கேள்வியாக இன்பா அந்த ஜோவனைக் கேட்டதே “மின்னு குட்டி எப்டி இருக்கா?” என்பதே…

அதற்கு பதிலாக அவனும்” ம் நல்லா இருக்கா……  இங்கதான் அம்மாட்ட இருக்கா அவ…..”  என்றான் அவன்.

அடுத்து தொடர்ந்த அந்த சிறு உரையாடலில் பெரும்  பங்கு இடம் பிடித்தது அவனது குழந்தை  மின்னு குட்டிதான்.

‘ஓ இது நான் நினச்ச மாதிரி எதுவும் இல்ல போல….’ என நினைத்துக் கொண்டாள் மனோகரி. ஆனாலும் ஏதோ ஒன்று ரொம்பவும் உறுத்தியது அவள் மனதை….. இன்பாவின் உடல் மொழியா?  இத்தனை நேரம் இவள் அறிந்த இன்பா போல் இயல்பாய் இல்லை இந்த இன்பா…. ஏன்????

ன்று இரவு தன் வீட்டில் ‘எப்ப பேசுவான்…..எப்ப அவன் நிலமை சுமுகமாகும்’ என்ற மித்ரன் பற்றிய தவிப்பிலேயே நேரத்தை கடத்திக்கொண்டிருந்த மனோகரியிடம் வந்து நின்றாள் இன்பா…..

“நான் யார் கூடயும் இதுவரை சேர்ந்து தங்குனது இல்ல மனோ…..ஆனா நீ இங்க தனியா இருக்கன்றப்ப…..என்னமோ ஒரு மதிரி இருக்குது…..உங்க வீட்டை பத்தி நீ சொன்ன வரை ரொம்ப கலகலன்னு இருந்திருப்பீங்கன்னு தெரியுது…..இப்ப இப்டி வந்து தனியா இருக்க உனக்கு  கஷ்டமா இருக்குமோன்னு படுது….. உனக்கு ஓகேன்னா தம்பி திரும்பி வர்ற வரைக்கும் நான் உன் கூட தங்கிகிடட்டுமா…. பிடிக்கலைனா ஓபனா சொல்லிடு….கண்டிப்பா தப்பா எடுத்துக்க மாட்டேன்….உன் கம்பர்ட்தான் முக்கியம்…”

மனோவுக்கு நிச்சயமாகவே இது பிடித்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.