(Reading time: 29 - 57 minutes)

ப்போது கிளம்பிப் போனாள் என தெரியவில்லை….. எங்கு போனாள் என்றும் சொல்லவில்லை…….அந்த வீட்டின் இரண்டு சாவியில் ஒன்றை தான் எடுத்துக் கொண்டு கிளம்பிப் போனவள் அதிகாலையில் வெகு ரகசியமாய் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இரவில் படுக்க வந்த போது அணிந்திருந்த உடையை மீண்டுமாய் மாற்றி வந்து இவளருகில் படுத்து உறங்கிப் போனாள்.

இரவில் சரியான தூக்கமின்மையால் உருண்டு கொண்டிருந்த மனோ நள்ளிரவிலே இன்பா அருகில் இல்லை என கண்டுவிட்டாள்.

‘பக்கத்தில் அவளது அம்மா பாட்டி இருக்கும் அந்த வீட்டிற்கு எதாவது தேவைக்காக போயிருப்பாளாய் இருக்கும்……இவள் தூங்கியதால் எழுப்பி தொந்தரவு செய்யவில்லை போலும்….சீக்கிரம் வருவாளாய் இருக்கும்…’ என்ற நினைவில் மனோ அவளுக்காக படுக்கையிலே காத்திருந்தாள்…. அரை தூக்கத்தில் இருந்தவள் அல்லவா….. ஏதோ வகையில் அவளை அறியாமல் மீண்டுமாய் தூங்கிவிட்டாள் போலும்.

மீண்டும் காலையில் விழிப்பு வந்ததே  இவள் விழித்துவிடக் கூடாதென்று இன்பா பம்மி பம்மி அறைக்குள் நுழையும் போதுதான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அப்பொழுதே இன்பா ஒரு ஆலிவ் க்ரீன் பேர்ல்லல்ஸும் க்ரீம் நிற டாப்ஃஸும் ஹேண்ட் பேக்குமாய்  உள்ளே வந்த கோலம் உறுத்தியது மனோவை…. பக்கத்து வீட்டுக்கு போய்ட்டு வர எதுக்கு இப்படி ட்ரெஃஸ் ஹேண்ட் பேக் எல்லாம்…..என்றாலும் இருந்த தூக்க கலக்கத்தில் திரும்பவுமாய் தூங்கதான் முனைந்தாள் இவள்.

அடுத்தும் பாத்ரூம்குள் போய் கதவை அடைத்துக் கொண்ட இன்பா…. குளித்த பின்னும் நேற்று அவள் அணிந்திருந்த அதே நைட் ட்ரைஸை அணிந்து…..பின்னி இருந்த முடியை நேற்று இரவு போலவே விரித்துவிட்டு இவள் அருகில் வந்து இவள் தூங்குகிறாளா என முகம் பார்த்து உறுதி செய்து கொண்டு படுக்க….. தூக்கம் வர வேண்டும் என கண் மூடிக் கிடந்த மனோவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

இன்பா வெளியே  சென்று வந்தது தனக்கு தெரியக் கூடாது என நினைக்கிறாள் எனப் புரியத் தொடங்கியது இவளுக்கு…..ஏன்??? என்ன செய்றாங்க இன்பா???

அடுத்தும் ஒரு இரண்டு மணி நேரத்திற்குள் சிவந்த தக்காளி பழ கண்களுடன் கண் விழித்த இன்பா……”எனக்கு இன்னைக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு மனோ….நைட் பார்க்கலாம்” என்று கிளம்பிப் போய்விட்டாள்..

தில் அன்றும் இரவு வரை மித்ரன் மனோகரியை தொடர்பு கொள்ளாமல் துவள வைத்தான்.

மித்ரனே சொல்லி இருக்கிறான்தான் நான் உன்ன கான்டாக்ட் செய்ய மாட்டேன் என…. இருந்தாலும் அவன் ப்ரச்சனையில் இருக்கும் போது அவனிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என்னும் இந்த நிலை திடும் திடும் என எதையாவது நினைக்க வைத்துவிடுகிறதுதானே. அவன் குரலாவது காதில் விழுந்தால் போதுமே என ஏக்கம் வந்து அமர்ந்தது அவளுள்.

இந்த நிலையில்  அன்று இரவு இவளைத் தேடி வந்த இன்பா, மனோவை பயோசி சி ஈ ஓ வாக பதவி ஏற்க அவன் செய்ய வேண்டியவைகளை செய்து வர்ஷன் டாகுமென்ட்ஸ்  மெயில் செய்திருப்பதாக சொன்னாள்.

வர்ஷனே ஒத்துக் கொண்ட பிறகும் மனோவுக்கு அந்த பதவியை ஏற்பதில் ஏதோ ஒரு வகை மனதடைதான்…..இயல்பாக எடுக்க முடியவில்லைதான்…. ஆனாலும் இனி இதை மறுப்பது சரி இல்லை….. அடுத்த நாள் இவள் பயோசி செல்லலாம் என முடிவு செய்து கொண்டாள்…..

செய்யும் வேலையில் மனதை வைத்தால் உலகம் மறந்து விடும் மனோவுக்கு…. அது அவளது சுபாவம்… ஆக இருக்கும் இந்த மனநிலைக்கு நாளை முதல் சற்று மாற்றம் கிடைக்கும் என இவள் நினைத்திருக்க….

 அன்று இரவு மித்ரனிடமிருந்து இவளுக்கு ஒரு இ.மெயில்

‘வர்ஷனை காணவில்லை….இதுக்கு மேலயும் நீ பயோசி போகனும்னா எனக்கு இன்னும் ரெண்டே ரெண்டு நாள் டைம் கொடு….. வர்ஷன் மிஸ்ஸிங்ன்னு நமக்கு தெரிஞ்சிட்டுன்றது ஆப்பொனென்ட்ஸுக்கு தெரியவந்தாலே வர்ஷனை கண்டுபிடிக்கிறது கஷ்டம்…..அதனால இதை இன்பா உட்பட யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு நம்புறேன்…….’ என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் வந்திருந்தது அது.

மிரண்டு போனாள் அவள். என்ன நடக்கிறது என புரியவில்லை என்ற குழப்பம் எல்லாம் இரண்டாம் பட்சம். மனோகரி பயப்பட ஆரம்பித்தது இங்குதான்.

இத்தனை நாளைக்குள் அவள் கவனித்திருக்கும் ஒன்று மித்ரன் வீட்டை சார்ந்த யாரும் எங்கு வெளியே செல்வதென்றாலும் சாதரணமாகவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடு….ஆனால் மித்ரன் பொதுவாகவே தனியாக செல்பவன்……இதில் வர்ஷனை காணவில்லை என்றால் மித்ரன் நிலை என்ன?

பெரியத்தான் ஸ்விஸ் போய் 3 மாசம்  ஆகுது…. இதுக்கிடையில அவங்க தன் ஃபேமிலியோட அப்பப்ப பேசி இருக்காங்க…. இப்பவும் ஃப்யூ வீக்‌ஸாதான் அவங்க பேசுறது இல்ல….ஆனாலும்  மெயில்ல தொடர்பில இருக்றாங்க….. அவங்க மேனேஜ்மென்ட்ல பயோசி, நேஷன் க்ரூப்ஸ் ப்ராஜக்ட்ஸ்லாம் தடையில்லாம நடந்துகிட்டுதான் இருக்குது…. இதெல்லாம் இன்பா சொல்லி மனோவுக்கு தெரியும்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.