(Reading time: 29 - 57 minutes)

ப்படி இருக்க இப்போ காணலைனா என்ன அர்த்தம்? என்ன நினைக்கனும்?

மிரட்டி சென்ற தார்க்கிகா இப்பொழுது மனகண்ணில் வந்து போகிறாள்….

அவள மூட்டபூச்சி அளவு கூட நினைக்க முடியலையே…..கடிக்க தெரியாத கரப்பான் பூச்சி கேட்டகிரில அவ….. அவளா இவ்ளத்தையும் செய்ய முடியும்?... என்று ஒரு பக்கம் தோன்றினாலும்

 எங்கோ அறிவில் கடந்து போகிறது ஒரு ஒப்புமை…. ‘அவ பேசாத கரப்பான் பூச்சி இல்ல….சொன்னத சொல்ற கிளிப் பிள்ளை…. ‘

ஆமாம் அவ பேசினது அப்டித்தான் இருந்துச்சு…..அப்படின்னா மாசிரன் சொல்றத இவ செஞ்சுகிட்டு இருக்காளோ…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்...

ஆனால் இன்றைய நிலையில் வர்ஷனுக்கோ மித்ரனுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் சந்தேக லிஸ்ட்ல முதல்ல வர்றது மாசிரனாதானே இருக்கும்……மாட்டிப்பானே….. மாட்டிப்போம்னு தெரிஞ்சும் எப்படி இவ்ளவு தைரியமா வேலை செய்ய முடியும்?

இதை யோசிக்கவும், தன் சொந்த வீட்டில் வைத்து இவளிடம் பேசுவதற்கு கூட இன்பா கதவு ஜன்னலை அடைத்ததற்கு சொன்ன காரணம் ஞாபகம் வருகிறது மனோவுக்கு.

“நேஷன் க்ரூப்ஸ்ல ப்ரச்சனை….அவங்க குடும்பத்துக்குள்ள இஷ்யூ இப்டிலாம் எந்த நியூஸ் வெளிய போனாலும் முதல்ல அடி வாங்குறது நம்ம ஷேராத்தான் இருக்கும்….. பிஸினெஸ் இன்ஸ்டெபிலிடின்னு சொல்லி எல்லோரும் நம்ம ஷேரை விக்க ட்ரைப் பண்ணுவாங்க…..அது ஒரு பெரிய ப்ரச்சனை….அடுத்து நம்ம க்ளையண்ட்ஸுக்கு நம்ம மேல உள்ள கான்ஃபிடென்ஸ் போய்டும்…. அதுவும் நம்மளோட மெயின் பிஸினஸ்ல ஒன்னு பேங்கிங்……மக்கள் அவங்க பணத்தை நம்ம நம்பி நம்மட்ட கொடுத்து வச்சுறுக்காங்க….. ஆக அவங்க சின்னதா பேனிக் ஆகிற மாதிரி நியூஸ் வெளிய போனாலும் நம்ம கம்பெனிக்கு பெருசா லாஸ் ஆகும்…. அதனால எப்ப நம்ம குடும்ப விஷயம் பேசனும்னாலும் அது நமக்குள்ள மட்டுமா இருக்ற மாதிரி பார்த்து பேசனும்….”

அப்படின்னா  கம்பெனி பேரை கெடுத்து மக்களை பயம் காட்டி பிஸினஸை கெடுக்க ப்ளான் செய்றானோ மாசிரன்…..அந்த வகையில யோசிச்சா கொலைன்ற அளவுக்கு போக மாட்டான்….அதே நேரம் மாசிரன் மாட்டிக்கவும் மாட்டான்…அப்டி எதாவது இருக்குமோ…..

‘இப்ப மித்ரனும் வர்ஷனும் எந்த அளவு ஆபத்துல இருக்காங்க? எவ்ளவு சேஃபா இருக்காங்க?’  இப்படி எதுவும் புரியாமல் தவித்தாள். பயந்தாள்.

யார்ட்டயாவது இதை மனம் விட்டு பேசினால் கூட நல்லா இருக்குமேன்னு இருக்குது…. யார்ட்ட இதை பேச முடியும் மித்ரனை தவிர? அவனிடம் பேச முடிந்தால் எவ்ளவோ நல்லா இருக்குமே என்றிருக்கிறது….

கூடவே இவட்ட தன் ப்ளானை அவன் மறைச்சப்ப அவனுக்கும் கூட இப்டித்தானே இருந்திருக்கும்…..என்னதான் விஷயத்தை இவ வீட்ல அவன் சொல்லி இருந்தாலும் அவங்க பயந்துட கூடாதுன்னு அளவாதானே சொல்லி வச்சிறுக்கான்…..யார்ட்டயும் சொல்ல முடியாம……இவ எவ்ளவு ஆபத்துல இருக்கிறா..…இல்ல எவ்ளவு சேஃபா இருக்கிறான்னு தவிப்போட….இப்டித்தானே அவனுக்கும் இருந்திருக்கும்… இவட்ட சொல்லலைனு கோபபட்டாளே…. சொல்லாமலிருக்க அவன் எவ்ளவு கஷ்டபட்டானோ என இப்போது தோன்றுகிறது…

எது எப்படியோ மனோ ஒரு பக்கம் மித்ரன் வர்ஷன் பாதுகாப்பிற்காக தவித்தாள்….மறுபக்கம் மித்ரனின் அருகாமைக்காக ஏங்கினாள்….. இன்பாவிடமோ களஞ்சியத்திடமோ இயல்பாக எதையும் அவளால் பேச முடியாமல்…. வர்ஷன் விஷயத்தை அவர்களிடம் சொல்லாமல் மறைப்பதை தவிர்க்கவும் முடியாமல்  குற்ற மனப்பான்மையோடு குமைந்தாள்.

இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுமே எந்த தகவலும் இல்லை மித்ரனிடமிருந்து….. இன்பாவும் இரவுகளில்  ரகசியமாய் வெளியே போவதை நிறுத்தவில்லை…. வர்ஷனுக்குப் போல் இன்பாவுக்கும் எதுவும் ஆபத்தாகிவிடுமோ என பலவாறாய் தவித்தாள் மனோ.

இந்த சூழ்நிலையில்தான் வந்தது அந்த மூன்றாம் நாள். ரெண்டு நாள் டைம் கொடுன்னு சொன்னானே….அப்டின்னா இன்னைக்கு கண்டிப்பா அவன்ட்ட இருந்து எதாவது மெசேஜ் வரும் தானே என இவள் பெரும் ஆவலாய் காத்திருக்க…..

அன்று மனோகரி சற்றும் எதிர்பாராத ஒன்று நடந்தது.

ப்பொழுது தன் வீட்டில் மித்ரனுடன் தேர்ந்தெடுத்த அந்த ஃபர்ஸ்ட் ப்ளோர் பெட் ரூமில் அமர்ந்து லேப்டாப்பில் தன்னவன் மெயிலுக்காக குடைந்து கொண்டிருந்தாள் மனோகரி. அறைக் கதவை சாத்தி வைத்திருந்தாள் பூட்டி இருக்கவில்லை….

இந்த நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம்….. தூக்கிவார நிமிர்ந்து பார்த்தால் அவன்….அவளுடைய மித்ரன்…..

வர்றேன் என எந்த தகவலும் தராமல் வந்துவிட்டேன் என்றும் எதுவும் கூறாமல் வந்தவன் இவள் வந்திருப்பது தன்னவன் என முழுதாக உணரும் நொடிக்கும் முன்பாகவே கையிலிருந்த லக்கேஜை அப்படியே விட்டுவிட்டு….. பெட்டில் அமர்ந்திருந்த இவள் அருகில் வந்து  படுத்துவிட்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.