(Reading time: 29 - 57 minutes)

மித்ரனுக்கும் இவளுக்குமாக தேர்ந்தெடுத்து வைத்திருந்த அறையில் தங்க வேண்டாம் என பிடிவாதம் பிடித்து அதற்கு அடுத்த அறையில் இவளுடன் பின்னிரவு வரை அரட்டை கச்சேரி நடத்திவிட்டு இவளோடு சேர்ந்து தூங்கிப் போன இன்பா, இப்படி இங்கு தங்குவதை மறுநாள் அப்படி ஒரு காரியத்திற்கு பயன்படுத்துவாள் என மனோகரி எதிர்பார்க்கவே இல்லை…..

 மறு நாள் இரவும் களஞ்சியத்திடம் மனோவுடன் தங்குவதாக சொல்லிவிட்டு வந்த இன்பா முந்திய தினம் போல் இவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். அன்று முழுவதுமே மித்ரனிடமிருந்து எந்த தகவலும் இல்லை…..அதில் ஒருவாறு உழன்று கொண்டிருந்த மனோவுக்கு தூக்கம் வரும் என்றே தோன்றவில்லை…..

மனோவின் மன்நிலையை உண்ரந்தாளோ என்னவோ இன்று தனக்கும் மித்ரனுக்கும் இடையேயான நிகழ்வுகளைப் பற்றியாய் பேசினாள் இன்பா….. மனோகரிக்கு அதில் ஆவலாகவே மனம் லயித்தது.

“அவன் பிறக்கவும் அப்பா என்ட்டதான் முதல்ல வந்து காமிச்சாங்களாம்…. அவன் அம்மா வயித்ல இருக்கப்பவே நான் எப்பவும் எனக்கு தம்பி  வேணும்னு  சொல்லிட்டே இருப்பனாம்….அப்டியே தம்பினதும் நான் ஏக குஷியாகிட்டேனாம்…. தம்பிய என்ட அப்பா காமிக்கவும்….. அவன் காலைத்தான் முதல்ல பிடிச்சுப் பார்த்தனாம்…. ஹே என் காலும் சோப்பு காலு….. தம்பி காலும் சோப்பு காலுன்னு சொல்லி ரொம்ப குதிச்சேன்னு அப்பா சொல்லிருக்காங்க…. சோப்புன்னு நான் சொன்னது ரெட் கலரை…..” இன்பா சொல்ல மனோ மானசீகமாக அந்த குட்டிக் கால்களை மனதில் பார்த்தாள். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“அப்றம் ஒரு நாள் அவன அம்மா தொட்டில்ல தூங்க வச்சுறுந்தாங்களாம்…. அவன் ரெண்டு மாச குழந்தையாம் அப்போ…..நானும் அப்போ ரொம்ப குட்டில அதனால என்னை அவன தூக்க விடமாட்டாங்க போல….. அதனால யாரும் பார்க்காத நேரம் போய் தூங்கிகிட்டு இருந்த அவனை கைல தூக்கி இருக்கேன்…… கரெக்ட்டா அந்நேரம் பார்த்து அப்பா அங்க வந்தாங்களாம்…..அவங்களப் பார்கவும்…..தூக்க கூடாதுன்னு  சொல்ற பாப்பாவை தூக்கிட்டமேன்னு நினைச்சு அவனை அப்டியே டொம்னு தரையில போட்டுட்டு ஓடிட்டேன் போல….. அதுக்கு பிறகு அப்பப்ப என்னை உட்கார வச்சு அவனை என் மடில படுக்க வைப்பாங்களாம்….” கேட்டிருந்த மனோவுக்கு  ‘அச்சோ….கீழ போட்டுடாங்களா உன்ன…’ என்றிருந்தது…..ஆனாலும் இன்பா இந்த நிகழ்வை சொன்னதும் பிடித்தது.

 “அப்பா இதுமாதிரி நிறையா சொல்லுவாங்க…. எனக்கு அப்பா என் கூடயும் வர்ஷன் கூடயும் சின்ன வயசில விளையாடினதுலாம் இன்னுமே அப்டியே ஞாபாகம் இருக்கு…..ஹைட் அண்ட் சீக்லாம் விளையாடுவோம்…. பின்னாலயும் எப்பவும் அப்பா எங்க ஏஜ்லயே இருக்ற மாதிரியே தான் ஃபீல் இருக்கும்…………எப்டி இப்டி திடீர்னு இல்லாம போவாங்கன்னு….” இந்த வர்த்தையில்  இன்பா குரல் அடைக்க நிறுத்திவிட்டாள்.

பின் மெல்ல தலையை சிலுப்பி தன் மனதை சமனபடுத்த முயான்றவள்…..”பாரு இப்ப போய் இதச் சொல்லி….அப்பா ஒன்னும் இல்லாம போகலை…இங்க இருந்து இன்னும் பெட்டரானா ப்ளேஸ்க்கு போய்ருக்காங்க…..ஒரு நாள் நானும் கூட அங்க போவேன்…. ஐ’ல் கிவ் ஹிம் எ பிக் ஹக்…..எல்லாம் சரியா போயிடும்….” தன் வார்த்தைகளால் அதை செய்து முடித்தாள்.

மனோவுக்கு என்ன சொல்லவென தெரியாத நிலை…..

“அப்பா எப்பவும் தம்பியைப் பத்தி எங்கட்ட நல்லதாதான் சொல்ல ட்ரைப் பண்ணிட்டே இருந்தாங்க அவங்க இருந்த வரையுமே…..ஆனா எனக்கு விபரம் தெரிஞ்சு நான் தம்பிய பார்த்ததே இல்லையா…..அதோட பாட்டி எப்பவுமே தம்பி எங்களுக்கு பெரிய எதிரி…அவனால நாங்க ரொம்ப கஷ்டப்படப்போறோம்ன்ற மாதிரியே சொல்லிட்டு இருப்பாங்களா…..அதோட சின்னதுல நான் அம்மாவுக்குத்தான் பயங்கர க்ளோஸ்….. அவங்களே தம்பிய தேடக் கூடாது அவன்லாம் இங்க வரக் கூடாது…அது சரியா இருக்காதுன்னே சொல்லுவாங்களா….. அதுவும் கொஞ்சம் வளரவும் அம்மாவே அவன மோசம்னு கூட சொல்லுவாங்க……அதனால அப்பா சொன்னது மனசுல ஏறலை….. மித்ரன் இங்க வர்றப்ப பாட்டி எப்பவும் என்னையும் வர்ஷனையும் மாமா வீட்டுக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்க…..அது ஏதோ சேஃப்ன்ற மாதிரியே எங்க மனசுல பதிஞ்சுட்டு….”

இப்போது கட்டாயமாய் அமைதி காத்தாள் மனோ. இன்பாவிடம் களஞ்சியத்தை குறைபட்டு என்ன ஆகப் போகிறதாம்?? கூடவே இன்பா வர்ஷன் நிலையும் புரிகிறது…

“ஆனா பின்னால ஒரு டைம் நான் யூஎஸ் வெகேஷன் போயிருந்தேன்…. அப்ப ஒரு சூப்பர்மார்கெட்ல வச்சுதான் மித்ரனை பார்த்தேன்….. அப்பா அவனோட ஃபோட்டோஸ் காமிச்சிறுந்ததால பார்க்கவும் அது அவன்னு தெரிஞ்சிட்டு…..” இன்பாவின் முகத்தில் ஒரு அழகான புன்னகை வந்தமர்ந்தது இப்போது…

“ அவனும் அந்த பொண்னு மதியும் ஏதோ காம்படிஷன் மாதிரி ஓடி ஓடி திங்ஸ எடுத்து சேர்த்துகிட்டு இருந்தாங்க…. வீக் என்டல என்னல்லாம் குக் செய்யனும்னு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஏதோ சொல்லிகிட்டே அதுக்கு தேவையானத வாங்கிகிட்டு இருந்தாங்க….கூட ஒரு ஒயிட் லேடி….கொஞ்சம் வயசானவங்க…..அவங்கதான் சமைக்க போற ஆள் போல… இந்த ரெண்டு வாலுகளையும் கிண்டல் செய்துட்டே இருந்தாங்களே தவிர இவங்க சொன்ன டிஷ் எதையும் வேண்டாம் முடியாதுன்னு சொல்லலை. அதுக்கு என்னலாம் வாங்கனும்னு சொல்லிட்டு இருந்தாங்க…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.