(Reading time: 29 - 57 minutes)

ப்போதும் இன்பாவின் மனக் கண்ணில் அந்த காட்சி

 “ஆன்டி இந்த வீக் எனக்கு ஃப்ரெய்டே நைட் இடாலியன் மீட் லோஃப்…… .சாட்டர்டே  ஆப்பிள் க்ரம் பை…… என்னலாம் வாங்கனும்னு சொல்லுங்க…..எனக்கு மீட் லோஃப் நிறைய வேணும்….” மதிபா லிடி ஆன்டியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஹே …..நான் எனக்கு பாதி ஷாப்பிங் முடிச்சுட்டேன் லேசி டோமேடோ நீ இப்பதான் உருளவே ஆரம்பிக்கியா…?” அவளை சீண்டிய படி வந்த மித்ரன் மதி கையிலிருந்த ட்ராலியில் தான் அள்ளிக் கொண்டு வந்ததைப் போட்டான்….

“போடா கதா (ஹிந்தியில பொண்னு கழுதன்னு சொல்லுது) நீ எவ்ளவு சீக்ரம் ஆரம்பிச்சா என்ன நான்தான் பெஸ்ட் ஃபினிஷர்….” அவனிடம் சொன்ன மதியோ

“ ஆன்டி எனக்குள்ளத மட்டும் சொல்லுங்க…..அவனுக்கு என்ன வாங்கனும்னு இப்ப சொல்லாதீங்க….” என்றபடி ராக்கிற்கு ஓடினாள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“போ போ எனக்கு இந்த வீக் ரெட் வெல்வெட் கேக்கும் பீச் காப்லரும் தான்….என்ன வாங்கனும்னு நல்லாவே தெரியும்….” அவனும் ராக்கிற்கு போனான்…

 அவ்வளவுதான் இப்போது தன் வேலையை விட்டுவிட்டு அவனைத் தொடர்ந்து ஓடினாள் மதிபா….. பின்னால் போய் ராக்கிலிருந்து எதையோ எடுக்க முனைந்த அவனை பின்னிருந்து பிடித்து இழுத்தாள்….

“சீட்டெர் காக்…இதெல்லாம் சீட்டிங்….லாஸ்ட் வீக்கும் இதான் கேட்ட…..இந்த வீக்கும் நீ அதேல்லாம் கேட்க கூடாது….”

“ஏய் லேசி டோமேட்டோ விடு என்ன….” அவன் சொல்ல அசைக்க முடியாதபடி அவன் கைகளை இறுகிப் பிடித்திருந்தாள் மதிபா….

“விட மாட்டேன் …நாந்தான் வின் பண்ணனும்….” சொல்லிக் கொண்டிருந்தவள் சட்டென அவன் கைகளை விட்டுவிட்டு கண்ணில் கைவைத்து துடிக்க ஆரம்பித்தாள்…

“ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆ…”

“ஹேய் என்ன ஆச்சு? என்னாச்சு மதி…?” இவன் தான்.

“கண்ல ஏதோ விழுந்துட்டு….” இவன் முன் நெருக்கத்தில் வந்து நின்றவள் “தூசி போக ஊதுவல்ல…..இப்ப எடுத்துவிடு” என்றாள்.

அதற்குள் அவனோ… “ஆன்டி இங்க வாங்க இவளுக்கு ஹெல்ப் பண்ணுங்க” என அந்த ஆன்டியை அழைத்தான்.

இப்போது இவனை திறக்க முடிந்த ஒற்றைக் கண்ணால் முறைத்தாள் மதிபா.

“ஏன் நீ செய்ய மாட்டியோ…? வர வர நீ என்னமோ வித்யாசமா போய்ட்டு இருக்க….”  சொல்லியபடி ஒருவாறு தன் கண்களை சமாளித்து விட்டாள் மதிபா.

“வித்யாசம்னு இல்ல….உங்க அப்பாட்ட பேசிட்டு இருந்தேன்….அவங்க நீ மேரேஜுக்கு பிறகு இன்டியால செட்லாகனும்னு ஆசைப்படுறதா சொல்லிட்டு இருந்தாங்க….  இப்டிலாம் பழகுறதை அங்க எல்லாரும் சரியா புரிஞ்சுப்பாங்களான்னு எனக்கு தெரியலை…..எதுக்கு தேவை இல்லாம…அதான்….. டென்னிஸ் ப்ராக்டிஸ் மாதிரி இதுக்கும் ப்ராக்டிஸ்…. நீ மேரேஜ் செய்து போற ஃபேமிலில எல்லோருக்கும் உன்ன பிடிக்கனும் மதி….அப்போதான் எனக்கு திருப்தியா இருக்கும்…..” அவன் குரல் இந்த இடத்தில் சில சமயங்களில் வர்ஷன் இவளிடம் பேசும் தொனிக்கு மாறிப் போனதாய் தோன்றுகிறது இன்பாவுக்கு…

“பைதவே சிலவிஷயத்த நானும் என் வைஃப்க்கு மட்டும்தான் செய்வேன்னு சேர்த்து வச்சுக்கனும்…அப்பதான் எங்க லைஃப் ரொமன்டிக்கா இருக்கும்…”

அவன் சொன்ன விஷயத்தை, அதை அவன் சொன்ன விதத்தை கவனித்த மதிபாவோ……உனக்கு என்னடா ஆச்சு நல்லாத்தான இருந்த.. பாவத்தில் லுக் விட்டவள்   “கதா எனக்கு ஒரு டவ்ட்….நீ நிஜமா என் மேரஜைப் பத்தி யோசிக்கியா….இல்ல நீ எங்கயாவது போய் மாட்டிகலாம்னு ப்ளான் போடுறியா?...”

அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தார் அந்த ஆன்டி…. “யாருக்கு மேரேஜ்….?” என்றபடி…

இப்போது மித்ரனும் மதிபாவும் அவசர அவசரமாக ஒருவரை பார்த்து ஒருவர் கை நீட்டினர்.

 “வர வர உங்க தொல்லை தாங்க முடியல……வீக் என்ட்னு வார வாரம் தேர்ஸ்டே நைட்டே வீட்டுக்கு வந்துடுறீங்க….சன்டே நைட் வரைக்கும் என்னயவே சுத்தி சுத்தி வர்றது…. அதுவும் இவனப் பாரு…..சாப்டு முடிச்சுட்டு டைனிங் ரூம்லயே தரையில படுத்தான்னா அந்த ரூஃபை பார்த்துட்டே காலைல வரைக்கும் கதை சொல்வான்….  இந்த ஏஜ்ல வீக் என்ட்னா எல்லோரும் டேட்டிங் போவாங்க…..ஏஜ்ல செட்டில் ஆகனும்னா இதெல்லாம் இங்க முக்கியம்…. இதெல்லாம் இல்லாம நேரே மேரேஜைப் பத்தி ப்ளான் செய்தா ஒன்னும் நடக்காது….வயசு மட்டும்தான் கூடிட்டே போகும்…… நான் சொல்றத யாரும் கேட்டாதான….” சற்று சலித்துக் கொண்டாரோ அவர்….

“அந்த சிண்டி ரொம்பவே சாஃப்ட் ஹார்டட்….நல்ல பொண்னும் தான்…..” திரும்பவுமாய் அவர் ஏதோ ஆரம்பிக்க

இப்போது அவரது தோளில் போய் ஒரு கை போட்ட மித்ரன் அடுத்த கையால் ட்ராலியை தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்….

அவர் காதருகே குனிந்து ஏதோ ரகசியம் பேசுவது போல் பாவ்லா….ஆனால் குரல் அடுத்திருந்த அனைவருக்கும் கேட்கும் அதே அளவு….

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.