(Reading time: 29 - 57 minutes)

வன் வந்திருக்கிறான் என உணர்ந்த நொடியில் உலகின் மொத்த துன்பமும் முடிந்து போய் முழு அமைதி உண்டாகிப் போனதாய் அவளுக்கு வந்த உணர்வு அவன் வந்து படுத்த விதத்தில் சில் சில்லாய் சிதற சிறையெடுத்தது இவளை பதற்றம்.

 அடித்து பிடித்து எழுந்து அவன் முகம் முன்பாய் குனிந்து . “என்னாச்சு மனு?”  என பதை பதைத்தவள் கை அதுவாக சென்று அவன் நெற்றியில் அமர கொதித்துக் கொண்டிருந்தான் அவன்.

அதே நேரம் ‘பயப்பட ஒன்னுமில்ல’ என்ற செய்தியை விழியால் தலை அசைவால் சொன்னவன் தலையில் காதுக்கு சற்று மேல்புறம் இரண்டு இடத்தில் காய கட்டுகள் இருப்பது இவளுக்கு இப்போதுதான் பார்வைக்கு வருகிறது…..

மற்ற நேரமாய் இருந்தால் இவ்வளவு பதறி இருப்பாளோ என்னவோ….அவன் ஆபத்தில் இருக்கிறான் என்ற பயத்தில் வர்ஷனை காணவில்லை என்ற தவிப்பில் இருந்தவள் அல்லவா ரொம்பவுமே தவித்துவிட்டாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

கண்ணில் இருந்து அதுவாக நீர் பெருகி கொட்ட…“மனு என்னாச்சு மனு….?” என்றவள் அடுத்து அவன் இதழ் பிரிக்கவே சிரமப் படுவதை பார்த்தவள்….. ஓடிச் சென்று தன் மொபைலை எடுத்து அகதனை அழைத்தாள்.

“ஹேய் புதுப் பொண்ணு….” அண்ணன் என்ன சொல்ல வந்தானோ…..

“அகி உனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர்…..ஜெனரல் பிஸிஸியன் ஒருதங்களை இப்ப கையோட கூட்டிட்டு இங்க வா… வந்த பிறகு உனக்கு டீடெய்ல் சொல்றேன்….”

மீண்டுமாய் தன்னவனிடம் வந்து நின்றாள்…. மித்ரனின் குடும்ப டாக்டரை கூட விலைக்கு வாங்கி இவனுக்கு எதுவும் செய்துடுவாங்களோன்னு அவ பயப்படுறது இவனுக்கு புரியுது….

அருகில் நின்றவள் கையைப் பற்றிக் கொண்டவன்..

“ஸ்…..லிப்ல உள்ள ஸ்டிச் மனு……அதான்…. மத்தபடி பயப்படாத….” என முடிந்தவரை உதடு அசையாமல் சொன்னவன் தன்னருகில் இருந்த அவள் கையை எடுத்து தன் நெற்றியில் வைத்தபடி கண் மூடிக் கொண்டான்.…

இப்டி கைய அவன் நெத்தியில வச்சுகிட்டா ஃபீவர் குறஞ்சிடுமா என்ன? ஆனால் வீட்டில் எங்கு எந்த மெடிசின் இருக்கிறது என இவளுக்கு எப்படி தெரியும்…?

முதலில் ஏசி டெம்ரேச்சரை குறைத்தவள்…… அவன் காலிலிருந்த ஷூவைக் கழற்றப்போனாள். அவள் அவன் காலைத் தொடவும் கண் திறந்தவன்….. மறுப்பாக தலை அசைக்க…..இப்பொழுது அவளது ட்ரேட் மார்க் முறைத்தலை அவனுக்கு காண்பித்தாள்.

“ஏன் நாளைக்கு எனக்கு இது மாதிரி எதுவும் செய்ய மாட்டீங்களா?” கேட்டபடி அவன் ஷீக்களை கழற்றி….இப்போது அவன் ஷர்ட்டை கழற்றியவள் கண்ணில் படுகிறது அவன் தோளின் கீழ் புஜத்தில் இருந்த அடுத்த காயக் கட்டு….. நிச்சயமாய் இது சின்னது இல்லை….

அதே நேரம் சிணுங்குகிறது மனோவின் மொபைல்….

அகதனாக இருக்கும் என்ற நினைவில் அழைப்பது யார் என பார்க்காமலே இவள் இணைப்பை ஏற்க…..”எங்க க்ளையன்ட்லாம் அப்பா அரெஸ்ட்டானதும் அப்டியே எங்களை விட்டுட்டு போய்ட்டாங்க தெரியுமா…… அப்பாவை எல்லோரும் ஃப்ராடுன்னு சொல்றாங்க தெரியுமா….அப்பா நேம் கெட்டு போச்சு…..எங்க பிஸினஸை க்ளோஸ் செய்தாச்சு…..அப்பாவ அரெஸ்ட் செய்ததுக்கு மித்ரனுக்கு பனிஷ்மென்ட்னா….எங்க பிஸினஸை க்ளோஸ் செய்ய வச்சதுக்கு நான் யாருக்கு பனிஷ்மென்ட் கொடுக்கனும்? வர்ஷனுக்கா இன்பாக்கா?” கேட்டது தார்கிகா…..

Friends இனி சனிகிழமை தோறும் ஒரு வாரம் காதல் பின்னது உலகிலும் மறுவாரம் மனம் கொய்தாய் மனோகரியுலுமாக உங்களை இந்த நேரத்தில் சந்திக்கிறேன்…..Fortnight series எனும் போது பெரிய  எபிசோடுகளாய் கொடுத்து இரண்டு கதைகளையும் முடிந்த வரை சீக்கிரமாக முடிக்கலாம் என நம்புகிறேன்….தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி

Episode # 19

Episode # 21

தொடரும்!

{kunena_discuss:928}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.