(Reading time: 36 - 72 minutes)

மித்ரனும் அதைப் பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை….இவளுக்கு அவன் நிலை குறித்து இருந்த தவிப்பை உணர்ந்தவனாக ‘நீங்க என் ஐ சைட்டுக்குள்ளயே இருக்கனும் போல இருக்கு’ன்னு சொன்ன அவள் வார்த்தைகளை நிறைவேற்றுபவனாக, அப்பப்ப அவனுக்கு வந்து போன ஃபீவர் சரியாக எடுத்துக் கொண்ட அந்த இரண்டு நாட்களுமே இவளைவிட்டு எங்கும் நகரவில்லை அவன்.

இவள் டேர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் எதையும் வயலேட் செய்யாம….இவள் இழுத்த இழுபுக்கெல்லாம் வளைந்து கொடுத்து……இவ பேசுனதெல்லாம் கேட்டு….. இவ கொடுத்ததை மட்டுமாய் சாப்பிட்டு…..கொஞ்சமே கொஞ்சமாய் அவள் இரக்கப்பட்டு கொடுத்த சந்தர்பங்களில் மட்டுமாய் அவளை சீண்டி என அவன். ஹப்பா ஹஸ்பண்ட் ரோல் எவ்ளவு கஷ்டமடா சாமி!!!

ஆக அடுத்த இரு தினங்கள் மித்ரன் வகையில் நன்றாகவே கழிந்தன எனலாம்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஆனால் மனோ வகையில்???

அன்று தன் ஃபிட்னெஸை நிரூபிக்க என இவளை தோளில் அள்ளிக் கொண்டு தரை தளம் வரும் வரையுமே மித்ரனிடம் மனோ இன்பா ஜோவன் விஷயமோ தார்கிகா மிரட்டலோ எதைப் பற்றியும் சொல்லி இருக்கவில்லையல்லவா?

அடுத்தும் அதைப் பற்றி  அவனிடம் பேசும் சூழல் அமையவில்லை அவளுக்கு. ஏனெனில் அப்போது இன்பாவுக்கும் சேர்த்து உணவு வந்து சேர்ந்திருந்ததே…..அடுத்து இன்பாவையும் அழைத்து இவர்கள் மூவருமாக உணவு உண்ண என நேரம் கழிய…..

அப்போதும், அதன் பின்பு இன்பா இவர்களுடன் அமர்ந்து மித்ரன் உடல்நிலை குறித்து பேசிக் கொண்டிருந்த போதும் மனோவால் இன்பா விஷயத்தை மித்ரனிடம் பேச முடியவில்லை….. இன்பாவை வைத்துக் கொண்டே இதை எப்படி பேச என்றிருந்தது அவளுக்கு…..

இன்பா பத்தி சொல்ல முடியவில்லை என்பதால் தார்க்கிகா மிரட்டல் குறித்தும் மனோ எதுவும் குறிப்பிடவில்லை……ஒன்றை ஒன்று தொடர்புடயவை அல்லவா விஷயங்கள்…

அதன்பின்பு மனோவின் பெற்றோருடன் அகதன் வந்தான்…..இப்படி ஒவ்வொரு சூழலாக பேசவிடாமல் அமைய…. அடுத்தும் மெடிசின் எடுத்துக் கொள்ளவும் மீண்டுமாய் மித்ரன் தூங்கிப் போனான்…..ஜெட் லாக் வேறு இருக்குமல்லவா…?

அன்று இரவு நிச்சயமாய் இன்பா வீட்டைவிட்டு வெளியில் செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையில்….. நாளை மித்ரனிடம் விஷயத்தை சொல்லிக் கொள்ளலாம் என மனோ இருக்க….. தாறுமாறாய் மாறிப் போனது நிலமை.

மித்ரன் தன் காரில் சிக்னலில் காத்திருந்தான். இவனுக்கு பக்கவாட்டில் வந்து நின்றது இன்னொரு கார்….. சில நொடிகள் செலவுக்குப் பின் இப்போது சிக்னல் கிளியராக தன் காரைக் கிளப்பினான் மித்ரன். இவன் புறம் நின்றிருந்த அனைத்துக்கார்களுமே கிளம்பின…..ஆனால் ஏனென்று தெரியாமல் இவன் உள்ளுணர்வில் அருகில் வந்த அந்த கார் பற்றி ஒரு உறுத்தல்….. சைட் மிரரில் அதை ஒரு நொடி கவனித்தான்….. அந்த காரில் இரண்டு பேர்…… ஜெனியூன் அண்ட் ஜென்டில் என சொல்லும் படியான நற்குடி மக்கள் தோற்றம்….ஆனாலும் இவன் இன்ஃஸ்டிங்க்டிற்கு ஏதோ சரியாக படவில்லை…..மறுபடியும் சைட் மிரரில் அவர்களைப் பார்த்தான்….

அதில் காரை டிரைவ் செய்து கொண்டிருந்தவனுக்கு அருகில் வெட்டியாய் உட்கார்ந்திருந்த அவன் பார்வை ஏனோ படு அன்யூஷுவலாக வானத்தைப் பார்ப்பது போல் மேல் நோக்கி இருந்தது….. அவன் பார்வையை பின்பற்றி பார்த்தான் மித்ரனும்…..

இவன் கார் செல்லும் சாலைக்கு குறுக்காக….. மிக உயரத்தில் அந்தரத்தில் சாலை அமைத்தது போல் அந்த ஃப்ளை ஓவர்….

அங்கு என்ன??

இப்போது இவன் பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த கார் சட்டென இவனைவிட்டு சற்றுவிலக காருக்குள் வானம் பார்த்திருந்தவனோ தன் கைகளால் காதுகளைப் பொத்து…..தனக்குள் பம்மி…..காருக்குள் குனிந்து….

நேனோ செகண்டில் புரிந்துவிட்டது மித்ரனுக்கு….ஃப்ளை ஓவரிலிருந்து இவனை சுடுகிறார்கள் யாரோ……இவன் காரை ட்ராஃபிக்கில் அடையாளம் காட்ட இந்த பக்கவாட்டு கார்…..

கண்டிப்பா குறி இவன் இடது நெஞ்சாய் இருக்கும்……எண்ண வேகத்தில் இவன் காரை வலப்பக்கம் வளைக்க….. அந்த ஜென்டில் மேன் லுக் கிரிமினல்களின் காரின் பின் பகுதியில் ஒரு படீர்…..

அதே நேரம் இவன் தோள்பட்டைக்கு கீழாக கிழித்துக் கொண்டு போகிறது தோட்டா….. வந்து கொண்டிருந்த வேகத்திற்கு பக்கவாட்டில் இடிக்கவும் ஃஸ்கிட்டாகி எங்கோ போகிறது இவனது கார்…. ஏர் பேக் விரிந்து…முன்பு என்ன இருக்கிறது என பார்க்க முடியாதநிலையில் இவன்…..

ஸ்கிட்டான காரை இப்போது அருகில் வரும் ராட்சச ட்ரக் இடிக்க……

“மனு………” கத்திக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள் மனோகரி….

சே……..கனவு….அவனுக்கு நடந்த அந்த ஆக்சிடெண்ட் பத்தி அவன் சொன்னது இதுதான்…. அது அவள் மனதை இப்படியாய் அலைக் கழிக்கிறது போலும்….

அருகில் தூங்கிக் கொண்டிருந்தவனை மனம் அமைதியாகும் வரை பார்த்திறுந்தவள்……ஏசியிலும் வியர்த்திறுக்க…. தண்ணீர் குடித்துவிட்டு படுக்கலாம் என சற்று தொலைவிலிருந்த டேபிளில் வைத்திருந்த வாட்டர் பாட்டலை எடுத்தால்…… அந்த பாட்டில் அருகிலிருந்த இவள் மொபைல் ப்ளிங்கிங்…..

சைலண்ட் மோடில் இருக்கும் மொபைலுக்கு அழைப்பு வந்திருக்க…..மொபைல் கவர் மூடி இருந்ததால்….அழைப்பின் அடையாளமாக சின்ன ஒளி சிதறல்கள் மாத்திரம் அந்நேரம் இவள் பார்வைக்கு கொடுத்துக் கொண்டிருந்தது அது.

இத்தனை மணிக்கு யார் அழைக்க கூடும்…..நேரத்தைப் பார்த்தாள்…..2. 37 ஏஎம்…..அகால நேர அழைப்பு எப்போதுமே கிலி தான்…. அழைப்பது யார் என அவசரமாக பார்த்தாள்….. இன்பா……!!!!

“என்னாச்சு அண்ணி… இந்த டைம்ல கூப்டுறீங்க….?” காலை அட்டென் செய்து இவள் படபடக்க

“ம்….உன் இன்பா அண்ணி இப்ப என் கைல……” என்ற குரல் தார்கிகாவினுடையது.

Episode # 20

Episode # 22

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.