(Reading time: 8 - 15 minutes)

வளைப் பார்த்த்தும்,  தலையை இடதும் வடதும் ஆட்டி

“ செம்ம அழகா இருக்க டீ” என்று விசிலடித்தான் அவன். அவனை அவளும் நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கு கழுத்து வலி தருவதற்காகவே வளர்ந்து கெட்ட உயரம்..!

மாநிறம்,கட்டுமஸ்தான தேகம்..அதைவிட வசீகரமான புன்னகை.

“என்ன மார்க் போடுறியா?”

“நீயும் அழகாய் இருக்க தமிழ்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“ ஸ்ஸ்ஸ் ஆ”

“என்ன… என்னடா?”

“இல்ல…அதிசயமாய் நீ என்னை அழகுன்னு சொல்லுறியே அதான் கிள்ளி பார்த்தேன்..”

“அட இவ்வளவு தானே …வா நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்றபடி அவனை கிள்ளுவதற்காக அவள் துரத்த  அவனும் ஓட, கொஞ்ச நேரம் ஓடிவிட்டு அவளை இழுத்து கொண்டு ஹாலில் நுழைந்தான் தமிழ்.. அவன் கையை பற்றிகொண்டு அவள் கடந்த அந்த சில நொடிகளில் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த கார்களின் மத்தியின் அந்த காரை அவளால்  கண்டுகொள்ள முடிந்தது..

“இது அவனின் காராச்சே? இங்கு வந்திருக்கிறானா? வர மாட்டானே!! என்னை தூக்கி எறிஞ்சுட்டு போனானே!! அவன் வந்தால் என்ன வரலன்னா என்ன?” என்றவள் மனம் கேள்வி கேட்க விழிகளோ நாளா புறமும் சுழன்றது. அவன் அகப்படவில்லை !

“ நாம இன்னும் திருந்தவே இல்லயோ ? இன்னமும் இவன் நினைப்பிலேயே இருக்கோமோ” என்றவள் ஆராய்ச்சி செய்யும்போதே அவள் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் மோகன்.. யாழினியின் தந்தை.. தமிழ்தான் தன்னை தந்தையின் அருகே அழைத்து வந்தான் என்பதை புரிந்துகொண்டவள் சட்டென சமாளித்தாள்.. தேவையில்லாத நினைவுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு கேக்கை  வெட்டினாள்.

 அவளுடன் பணிப்புரியும் சக நண்பர்களில்  இருவர், அண்டை வீட்டார், தமிழ் மற்றும் தந்தையுடனான மிகச் சிறிய பிறந்த நாள் விருந்து அது .. ஒவ்வொருவராய் தங்களது பரிசை கொடுக்க, அதை திறந்து பார்த்து ஆர்பரித்தவள், தமிழின் பக்கம் திரும்பினாள்.

“ டேய் எரும எங்கடா என் கிஃப்ட் ?” என்றாள் யாழினி..

“கிஃப்ட் வேணுமா? இல்ல நான் முதலில் பாடனுமா?” என்று ரகசியமாய் சிரித்தபடி கேட்டான் தமிழ்…தமிழின் குரல் கம்பீரமாய் அதே நேரம் காந்தம் போல ஈர்க்கும்..சிறு வயதிலேயே சங்கீதம் கற்றுக்கொண்டதால் அருமையாகவே பாடுவான் அவன்..

“ ம்ம்ம்ம் பாடு பாடு “ என்று கண்களில் புன்னகை மின்ன கூறினாள் யாழினி..

என் வானம் விடிவது உன்னாலே

என் வாசல் திறப்பது உன்னாலே

என் வீதி நிறைவது உன்னாலே

என் நிலவும்,வெயிலும், மழையும், குளிரும்

உன்னால், உன்னால், உன்னால் பேரன்பே

அவனின் பாடலில் தன்னையே மறந்திருந்தாள் யாழினி,, சற்றுமுன் தனக்குள் எழுந்த குழப்பமும் கூட மறைந்திருந்தது .. அவனுடன் இணைந்து அவளும் பாடினாள்.

நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்

கண்ணால்..கண்ணால் ..கண்ணா

பேரன்பே,

தீ போல் இன்று ஏன் இங்கு சந்தித்தோம் தோம்?

சொல்லின்றி மௌனம் கொண்டோம்

இன்பம் கண்டோம்..ஏன் காதல் சிந்தித்தோம் ..தோம்?

ஏன் வந்தாய் நீயாக? பஞ்சோடு தீயாக?

அவள் கண்கள் மூடி பாடிய நேரம் புதிய குரல் கேட்டது..

நீ அமுத மழையா? அமிலமழையா ?

ரெண்டும் ஒன்றாய் வந்தாயா ?

எனது வலி அறிய உனது இதயம் கொடு !

வளர்பிறை அழகினை ஒருமுறை தொடவிடு!

என் பேர் சொல்லும் பேரன்பே வா

உள்ளன்பு மறைக்க முடியாது

உன் போன்ற பெண்ணால்

உன் பார்வை அருள் செய்ய வேண்டும்

ஒளி ஊரும் கண்ணால்..

என் காதல் வேண்டாமென்று ஓர் வார்த்தை சொன்னால்

ஏழ் வண்ண வானவில்கூட நிறம் மாறும் தன்னால்..!

 “புகழா??” அவன் முகத்தை பார்த்தபடி அதிர்ச்சியாய் பின்னே நகர்ந்தாள் யாழினி… அவளை பார்த்துகொண்டே புகழ் தோளில் கை போட்டு, “என் பெர்த்டே கிஃப்ட்” என்றான் தமிழ்..

 அவனை பார்த்துமே அந்த ஏசி அறையிலும் அவளுக்கு முத்து முத்தாய் வியர்த்தது… இதயம் எகிறித்துடித்தது.. கைகளை பிசைந்தபடி அவள் நிற்க, கண்களில் எதிர்பார்ப்புடன் புகழ் நிற்க, இருவருக்கும் இடைஞ்சலாய் இருக்க கூடாது என்ற எண்ணத்தில் தமிழ் இரண்டடி பின்னே நகர, கண் இமைக்கும் நேரத்தில் தமிழை கட்டிப்பிடித்து கொண்டாள் யாழினி..

“அவனை போக சொல்லு தமிழ்..! அவன் எனக்கு வேணாம்! இந்த கிஃப்ட் எனக்கு வேணாம் தமிழ் …ப்ளீஸ்” ..அனைவரின் முன்னிலையிலும் தமிழை இறுக கட்டிகொண்டு அப்படியே நின்றாள் யாழினி. தமிழின் பதில் என்ன?

ஆக, இந்த அத்தியாயத்தில் தமிழ் பக்கமாய் நிற்கிறாள் யாழினி..அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும்? விரைவில் சொல்லுறேன்..

தொடரும்

Episode 02

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.