(Reading time: 29 - 58 minutes)

னால் யுக்தா வந்ததுக்குப் பிறகு பிருத்வி சாப்பிடுவதால் அவள் உட்கார்ந்து சாப்பிட மறுத்தாள்... நான் பிறகு சாப்பிடுகிறேன் நீங்க சாப்பிடுங்க அத்தை என்று சொல்லும் போது... அவளை எப்படி தனியாக விடுவது என்று மதியும் யுக்தாவோடு சாப்பிட பழகிக் கொண்டாள்... சில சமயங்களில் பிரணதி நான் அண்ணியோடு சாப்பிடுகிறேன் என்று யுக்தாவோடு அவள் சாப்பிடுவாள்.. செந்திலுக்கும் யுக்தாவின் நிலை புரிவதால் அதுவே சரி என்று விட்டுவிட்டார்.

ஆனால் பிருத்வி லேட்டாக வரும் சம்யங்களில் யுக்தா  எனக்கு பசிக்கல அத்தை நீங்க சாப்பிடுங்க என்று மறுக்க பார்ப்பாள்... என்ன தான் யுக்தா பிருத்விக்கிட்ட இருந்து விலகி இருந்தாலும் அவன் லேட்டாக வருவதால் அவன் வரும் வரைக்கும் சாப்பிடமால் காத்திருக்கிறாள் என்று மதிக்கு புரிகிறது... ஆனால் செந்திலுக்கு இதெல்லாம் பிடிக்காது... நாங்க வர எவ்வளவு நேரமாகுமோ... அதுவரைக்கும் சாப்பிடாம இருக்கக்கூடாது என்று கோபப்படுவார்...

அப்படியே பிருத்விக்காக காத்திருந்து இரண்டுப்பேரும் சேர்ந்து சாப்பிட்டாலும் பரவாயில்லை... ஆனால் அதுவும் நடக்கப்போவதில்லை... அதனால் யுக்தாவை சாப்பிட வைத்து விடுவாள் மதி... ஆனாலும் பிருத்வி வரும் வரை தூங்காமல் விழித்திருப்பாள் யுக்தா..

இவ்வளவு அக்கறை பிருத்வி மேல இருந்தும் இந்த பொண்ணு ஏன் ஒதுங்கியே இருக்கா என்று நினைத்துக் கொண்டாள் மதி... பிருத்விக்கும் தான் யுக்தா மீது பிரியம் இருக்கிறது... யுக்தா வரூனோடு பேசியதை கோபமா பார்த்துக்கிட்டு இருந்தானே அவன்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஏனோ தப்பா புரிஞ்சிக்கிட்டு வரூன் மேல பிருத்வி கோபமா இருக்கான்... வரூனாவது என்ன நடந்ததுன்னு சொல்வான் என்று நினைத்தால் அவன் இவர்களை பார்க்கவே வரவில்லை...

அதோடு நேற்று தான் அவனை இவர்கள் பார்த்தார்கள்... பார்த்ததும் பேசலாம் என்று தான் மதியும் செந்திலும் நினைத்தார்கள்... ஆனால் இப்போதெல்லாம் பிருத்வி அடிக்கடி கோபப்படுகிறான்... அதுவும் அவன் கோபத்தை யுக்தாவிடம் தான் காட்டுகிறான்.. அதனால் இப்போது வரூனோடு பேசினாலும் கோபப்பட போகிறான் என்று அமைதியாக இருந்தார்கள்..

வரூனும் இவர்களோடு வந்து பேசவில்லை..  பிருத்வி கோபப்படுவான் என்று அவனுக்கும் தெரியுமே... இதில் அவன் யுக்தாவோடு பேசியதே அவள் பிருத்வியின் மனைவி என்று அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும்... அதனால் யுக்தாவோடு அவன் பேசியிருப்பான்... இதை மதி தவறாக நினைக்கவில்லை... இருந்தாலும் பிருத்வி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் கவனித்தாள்... எங்கே இதையும் ஒரு சாக்காக வைத்து யுக்தா மீது பிருத்வி கோபப்படப் போகிறான் என்று நினைத்து தான் பிரணதியை விட்டு யுக்தாவை அழைத்து வரச் சொன்னாள்...

இவன் வரூன் மீது கோபமாக இருப்பதால் யுக்தா வரூனோடு பேசுவதை பார்த்து பிருத்விக்கு கோபம் வந்திருக்கிறது... இப்படி ரெண்டுபேருமே ஒருத்தர் மேலே ஒருத்தர் பிரியமா இருந்தாலும்... ஏன் ரெண்டுப்பேரும் விலகியே இருக்காங்களோ... எப்போது இவர்களுக்குள் சரியாகும் என்று கவலைப்பட்டுக் கொண்டாள் மதி.

மணி பத்துக்கு மேல் ஆகியதால் கம்பெனியிலிருந்து கிளம்பினான் பிருத்வி... வேலை ஒன்றும் இல்லையென்றாலும் வீட்டிற்கு போகாமல் அங்கேயே உட்கார்ந்துவிட்டான்... யுக்தாவையும் வரூனையும் பார்த்ததிலிருந்து கோபமாக இருந்தான் பிருத்வி... அதே கோபத்தோடு வீட்டிற்கு போனால் அதை அவளிடம் அவன் காண்பித்து விடுவான்..... ஏனோ அதை இப்போது அவன் விரும்பவில்லை... அம்மாவும் நீ இப்பல்லாம் அடிக்கடி கோபப்பட்ற பிருத்வின்னு சொல்லி வருத்தப்படுவாங்க... அதனால் தான் இங்கேயே உட்கார்ந்து விட்டான்..

அவர்கள் இருவரும் சந்திப்பதால் ஒன்றும் இல்லை... சப்னாவிடம் சொன்னது அவன் மனதறிந்து சொன்னது தான்... இரண்டுபேரும் செய்த காரியத்தால் அவர்கள் மீது கோபமாக இருக்கிறான்... அதற்காக அவர்கள் தப்பானவர்கள் இல்லை... அவர்கள் சந்திப்பை இவன் சந்தேகிக்கவுமில்லை...

இருந்தாலும் ஏன் அவர்களை பார்த்து கோபம் வருகிறது அவனுக்கு என்று தான் தெரியவில்லை... இப்படியும் இருக்கலாமோ என்று அவனுக்கு சில விஷயங்களும் தோன்றியது...

இரண்டுபேருமே தப்பு செஞ்சிருக்காங்க... அதனால் தான் இவன் அவர்கள் மீது கோபமாக இருக்கிறான்... ஆனால் அதற்காக அவர்கள் கவலைப்பட்டது போல் தெரியவில்லை...  நான் அப்படி செஞ்சிருப்பேன்னு நினைக்கிறியான்னு பேசிவிட்டு போன வரூன் அப்புறம் அந்த தப்பை அவன் செய்யவில்லைன்னு நிரூபிக்க ஒரு முயற்சியும் செய்யவில்லை... அதன் பிறகு இவனை சமாதானப்படுத்த நினைக்கவுமில்லை...

அதிலிருந்து என்ன தெரிகிறது வரூன் தப்பு செய்திருக்கிறான் என்று தானே தெரிகிறது... அதன்பிறகு ஜெர்மனி சென்ற பின்னும் ஒருமுறை கூட இவனோடு அவன் பேச முயற்சித்ததில்லை... சும்மா அவன் மொபைலிலிருந்து வாழ்த்து தான் அடிக்கடி வரும்... அப்போதெல்லாம் பிருத்வி நினைப்பான் தப்பு செய்தவனே இப்படி இருக்கும்போது நான் ஏன் அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொள்வான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.