(Reading time: 29 - 58 minutes)

தேபோல தான் யுக்தாவும் அத்தனை பேர் முன்னாடி தப்பு செய்தது நான் தான் என்று ஒத்துக் கொண்டவள்.. பின் ஏனோ அவள் எதுவும் செய்யாதவள் போல் நடந்துக் கொள்கிறாள்... ஏனோ அவன் அப்பா அம்மா பிரணதி கூட எதுவும் செய்யாதவள் மீது இவன் கோபப்படுவது போல நினைத்துக் கொள்கிறார்கள்... ஏனோ அவளும் இவன் தான் குற்றவாளி போல ஒதுங்கியே இருக்கிறாள்... இதுவே அவனுக்கு யுக்தா மீது கோபத்தை வரவழைக்கிறது...

நேற்று தான் முதன்முதலில் சந்தித்த இருவரும் இன்று திட்டமிட்டு சந்தித்து பேசிக் கொள்கிறார்கள்... ஆனால் இவன் தான் குற்றவாளி என்பது போல் இவனிடம் ஒதுக்கம் காட்டுவதாக தோன்றியது... அதுதான் அவனுக்கு கோபத்தை வரவழைத்ததோ என்றும் தோன்றியது... 

இருந்தாலும் அவன் அவர்கள் எப்படி இருந்தால் என்ன..?? அவர்களை என்னால் மன்னிக்கவே முடியாது என்ற உறுதியை மனதில் வைத்துக் கொண்டான்...

வீட்டிற்கு வர 11மணிக்கு மேல் ஆகிவிட்டது... பெல் அடித்ததும் உடனே வந்து கதவை திறந்தாள் மதி... அம்மா முகத்தை பார்த்ததும் தான் வர லேட்டாகும் என்று தான் அம்மாவிடம் தெரிவிக்காதது பிருத்விக்கு ஞாபகம் வந்தது... இன்னும் தூங்காமல் அவர்கள் முழித்துக் கொண்டிருப்பதில் கொஞ்சம் கோபமும் வந்தது...

"என்னம்மா நீங்க இன்னும் தூங்காம முழிச்சிக்கிட்டு இருக்கீங்களா..?? நீங்க படுக்க வேண்டியது தானே..?? நான் வந்தா போன் பண்ணியிருப்பேன் இல்ல.."

"என்ன பிருத்வி லேட்டாகும்னு போன் பண்ணவும் இல்லை... நானே போன் பண்ணாலும் எடுக்கல... என்னவோ ஏதோன்னு கவலையா உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன்... நீ என்னடான்னா தூங்க வேண்டியது தானேன்னு கோபமா சொல்ற..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... - 

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அது... எனக்கு திடிரென்று ஒரு வேலை வந்துடுச்சு தகவல் சொல்ல முடியல... மொபைல் சைலன்ட்ல இருந்ததால நீங்க போன் பண்ணத கவனிக்கல.... அதனால என்ன நான் வரைக்கும் நீங்க முழிச்சுக்கிட்டு இருக்கனுமா..?? இதனால உங்க உடம்பு தான் கெட்டுப்போகும்..."

"இத்தனை நாள் இப்படி இருந்தேனா பிருத்வி... இன்னைக்கு நீ எதுவும் சொல்லாம இருந்ததால தான் பிரச்சனை... நீ வேற இப்பல்லாம் அடிக்கடி கோபப்பட்ற.. அதான் எனக்கு பயமா இருக்குடா..??"

"உங்க மருமக இருக்க வரைக்கும் எனக்கு கோபம் குறையப் போறதில்லை.."

"ஏண்டா இப்போ அவளை இழுக்குற... அவ என்ன செஞ்சா..."

"ஆமாம் அவ என்னோட பொண்டாட்டி தான... நான் இவ்வளவு நேரம் கழிச்சு வரேனேன்னு ஏதாச்சும் கவலை இருக்கா... அவ பாட்டுக்கு தூங்கறா... நீங்க தான் உடம்பு முடியலைனாலும் எனக்காக கஷ்டப்பட்றீங்க... இதுக்கு தானே எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சீங்க..."

பிருத்வி கோபத்தில் பேசினாலும் அவன் பேசிய விஷயம் மதிக்கு சந்தோஷத்தை கொடுத்தது... "இப்போதாவது அவ உன்னோட பொண்டாட்டின்னு கண்ணுக்கு தெரிஞ்சா சரி... அவளுக்கு அது தெரியுது... சார் தான் அதெல்லாம் புரிஞ்சுக்காம சுத்திக்கிட்டு இருந்தீங்க...

இப்போதாவது இதெல்லாம் புரிஞ்சுதே அது சந்தோஷம் தான்... யாருக்குடா உன்னைப் பத்தி கவலையில்லை... நீ வரவரைக்கும் உனக்காக அவ முழிச்சுக்கிட்டு இருப்பா.. ஆனா நீ என்ன சொல்லுவியோன்னு அவளுக்கு பயம்.."

"........"

"இப்பக் கூட அவ முழிச்சிக்கிட்டு தான் இருக்கா... இரு அவளையே உனக்கு சாப்பாடு பரிமாற சொல்றேன்... நீ போய் ப்ரஷ் ஆகிட்டு வா.." என்று பிருத்வியை அவன் அறைக்கு அனுப்பி வைத்தாள்.. பின் யுக்தா அறைக்கு வந்தாள் மதி... அதைப் பார்த்த யுக்தா...

"என்ன அத்தை பிருத்வி வந்தாச்சா..." என்று கேட்டாள்.

"ஆமாம் யுக்தா ஏதோ திடிரென்று வேலை வந்துடுச்சாம்... அதான் போன் பண்ணலையாம்... இப்போ தான் வந்தான்... அப்புறம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? இன்னைக்கு பிருத்விக்கு நீ தான் சாப்பாடு போடப்போற... சாருக்கு இன்னிக்கு தான் வீட்டில் பொண்டாட்டி இருக்கறது ஞாபகம் வருது... சீக்கிரமாவே எல்லாம் சரியாயிடும்...

சரி யுக்தா நீ பிருத்விக்கு சாப்பாடு போடு... எனக்கு ரொம்ப தூக்கம் வருது நான் போய் படுத்துக்கிறேன்.." என்று மதி சொன்னதும் என்ன சொல்வதென்று தெரியாமல் சரி என்று தலையை ஆட்டினாள் யுக்தா..

பிருத்வி வந்து சாப்பிட உட்கார்ந்ததும் சாப்பாடு பரிமாறினாள் யுக்தா...

"நான் இப்படி சொன்னதும் உன் மேல இருக்க கோபம் போய்டுச்சுன்னோ இல்லை எல்லாம் மறந்துட்டேன்னோ நினைச்சுக்காத.." என்று பிருத்வி சொல்ல அமைதியாக பரிமாறினாள் யுக்தா...

"அம்மாக்கு பி.பி இருக்கு... அதில்லாம இவ்வளவு நேரம் முழிச்சுக்கிட்டு இருப்பது அம்மாக்கு நல்லதும் இல்ல... இனி புது ப்ராஜக்ட் நடக்கும்... நிறைய நாள் லேட்டா வர வேண்டியிருக்கும் அதான் அம்மாக்கிட்ட அப்படி சொன்னேன்... உனக்கும் அம்மா மேல அக்கறையிருக்கும்னு நினைக்கிறேன்..." என்று அவன் சொல்ல வந்ததை சொல்லி அவள் பதிலுக்கு எதிர்பார்த்து பிருத்வி காத்திருக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.