(Reading time: 29 - 58 minutes)

மாலையில் நேர்த்தியாக கட்டிய புடவை இன்னும் அப்படியே இருக்க...  மொட்டாக வைத்த மல்லிகை பூ இப்போது பூத்து இன்னும் அவளுக்கு அழகு சேர்க்க எப்போதும் இவனை பார்த்தால் உம்மென்று மாறும் அவள் முகம் இன்று சிரிப்போடு இருக்க இதெல்லாம் அவன் எப்போதும் இழுத்து பிடித்து வைத்துக் கொள்ள நினைக்கும் கோபத்தைக் கூட அவனை விட்டு தூரம் செல்ல வைத்துவிட்டது...

சிஸ்டமில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவள் கொஞ்சம் ரிலாக்ஸாக டிவியில் காமெடி காட்சிகளை பார்த்துக் சிரித்துக் கொண்டிருந்த போதுதான் பிருத்வி காலிங்பெல்லை அழுத்தியது... அதனாலே அந்த சிரிப்போடே வந்து கதவை திறந்தாள் யுக்தா... பொதுவாக  அதிக வேலை இருந்தாளோ... இல்லை வருத்தத்தில் இருந்தாளோ நல்ல மெலடி பாடல்களை கேட்பதோ... இல்லை காமெடி காட்சிகளை பார்ப்பதோ தான் அவளது வழக்கம்... இப்போதும் அதையே தான் செய்துக் கொண்டிருந்தாள்...

பிருத்வியின் மனநிலை என்ன என்று தெரியாத யுக்தா... " நீங்க ப்ரஷ் ஆகிட்டு வாங்க பிருத்வி நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..." என்று அவனை அனுப்பிவிட்டு கிச்சனுக்கு சென்றாள்...

அறைக்குச் சென்று உடை மாற்றி வந்த பிருத்விக்கு யுக்தா சாப்பாடு பரிமாற அவளின் அருகாமை அவனை என்னவோ செய்துக் கொண்டிருந்தது... அன்றைக்கு பார்ட்டிக்கு செல்ல தயாராகி வந்த யுக்தாவை பார்த்ததிலிருந்து அவளின் அழகு அவனை இம்சித்துக் கொண்டிருந்தது....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதற்கான காரணத்தை அவனே ஆராய்ந்துக் கொண்டிருந்தான்... மனைவி என்ற உரிமையா..?? அவளை புடவையில் பார்த்ததாலா...?? இல்லை இப்போது மதுவினால் ஏற்பட்ட போதையா..?? எதுவோ அவன் கட்டுப்பாட்டில் இருந்த உணர்ச்சிகளை தூண்டியது...

இது எதுவும் தெரியாமல் அவள் கடமையை சரியாக செய்துக் கொண்டிருந்தாள் யுக்தா... இப்போதும் அவன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு சாப்பிட்டு விட்டு அவன் அறைக்குச் சென்றான் பிருத்வி...

எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அவள் அறைக்கு செல்ல தயாராக இருந்த யுக்தாவிற்கு அப்போது தான் ஞாபகம் வந்தது மாலை அவன் படுக்கையின் பெட் கவரை மாற்றுவதற்கு பழைய பெட்கவரை எடுத்தவள் புது கவரை மாற்றுவதற்குள் மதி அழைக்கவே பாதியிலேயே விட்டுவிட்டு சென்றது... (இந்த நேரம் தான் இதெல்லாம் ஞாபகத்திற்கு வரனுமா..)

அறைகுறையாக செய்து வைத்த வேலைக்கு பிருத்வி கோபப்பட போகிறான் என்று தயங்கி தயங்கி அவன் அறைக் கதவை தட்டி திறக்க வெற்றுடம்போடு நின்றிருந்தான் பிருத்வி... இவள் தயக்கத்தோடு திரும்பவும் போக நினைக்க... "என்ன வேணும்..." என்று அவளை தடுத்து நிறுத்தினான் பிருத்வி...

பொதுவாக சாப்பிட்டு வந்ததும் சிறிது நேரம் புத்தகம் படித்துவிட்டு தான் தூங்குவான்... இன்று மயக்கமாக இருக்கவே டீ ஷர்ட்டை கழட்டிவிட்டு படுக்க நினைத்தான்...

"இல்லை பிருத்வி... பெட் கவர் போடாம விட்டுட்டேன்... அதான் போட்டுட்டு போகலாம்னு வந்தேன்..."

அப்போது தான் அவனே படுக்கையை பார்த்தான்... "சரி மாத்திட்டு போ.." என்று கூறி விட்டு அங்கிருந்த சேரில் உட்கார... அவள் பெட்கவர் மாற்றும் வேலையில் இறங்கினாள்...

எப்படியோ உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டு அறைக்கு வந்த அவனை.... அவன் அறைக்கே வந்து இம்சித்துக் கொண்டிருந்தாள் அவள்... அந்த ஏ.சி ரூம் முழுக்க மல்லிகை பூ வாசம்...

குனிந்து பெட்கவரை மாற்றிவிட்டு யுக்தா நிமிர திடிரென்று அவளை பின்னால் இருந்து அணைத்து  அவள் சூடிக்கொண்டிருக்கும் மல்லிகை பூவில் முகம் புதைத்தான் பிருத்வி... எதிர்பாராத அணைப்பில் திடுக்கிட்டாள் யுக்தா...

"பிருத்வி என்ன இது விடுங்க..."

"இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க யுக்தா..." என்றவன் மல்லிகை பூவிலிருந்து சற்று விலகி காதுமடலில் உதடுகளால் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்...

"பிருத்வி நமக்குள்ள இன்னும் எதுவும் சரியாகல... ப்ளீஸ் விடுங்க..."

"என்ன சரியாகனும்... நான் தானே கோபமாக இருந்தேன்... இப்போ எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை... நமக்குள்ள சரியாகற வரைக்கும் என்னால வெய்ட் பண்ண முடியல... உன்னோட அழகு என்னை இம்சிக்குது... என்னால என்னோட உணர்ச்சிகளை அடக்கிக்க முடியல... நமக்கு ஒன்னும் இது புதுசில்லையே..." என்று அவள் காதில் மெல்லியமாக பேசிய அவன் அவளை அவன் புறம் திருப்பி அவள் கழுத்தில் கோலம் போட்டான்...

"பிருத்வி அன்னைக்கு நடந்தது ஏதோ போதையில.." என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அவனிடம் வந்த வாடையை வைத்து இவன் குடித்திருக்கானா என்ன..?? அதனால் தான் இப்படி நடந்துக் கொள்கிறானா..?? என்று நினைத்தவள் ஏதோ சொல்ல வர அவன் அவளை பேசவிடவில்லை...

திடிரென்று விழிப்பு வர முதலில் எங்கிருக்கிறோம் என்று யோசித்தாள் யுக்தா... பின் பிருத்வி அறையில் இருப்பதை தெரிந்துக் கொண்டு உடனே எழுந்தாள்.... அங்கேயே தூங்கிவிட்டாள் போல.... அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.