(Reading time: 29 - 58 minutes)

ன்றைக்கு பேமிலியாக எல்லாரையும் இன்வைட் செய்ததால் இன்று ஆண்களுக்கு மட்டும் அழைப்பு... இதற்கு வர வேண்டாம் என்று தான் நினைத்தான்... ஆனால் அவன் அப்பா சொல்லியிருக்கிறார்... இந்த பார்ட்டிக்கெல்லாம் போகலைன்னா... அவன் திமிறு பிடிச்சுவன் அப்படின்னு ஒதுக்கிடுவாங்க... அங்கப் போனா குடிக்கனும்னு இல்லை.. சும்மா நாமும் போனோம் பார்ட்டியை அட்டண்ட் பண்ணோம்னு எல்லோருக்கும் தெரிந்தால் போதும் என்று சொல்வார்...

அப்படி அப்பா சொல்லிய படி ஒரு கிளாஸை கையில் எடுத்துக்கிட்டு பேருக்கு நானும் இந்த பார்ட்டியில் எஞ்சாய் பண்றேன் என்று உட்கார்ந்திருந்தான்.... அப்போது அங்கு தெரிந்தவர் ஒருத்தர் அழைக்க அவரோடு போய் உட்கார்ந்தான்... அவரோ பெரிய குடிகாரன் என்று தெரிந்தது... மது அளிக்கப்படும் இடத்திற்கு அருகிலேயே உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்..

இவனுக்கு அங்கு உட்கார கூட பிடிக்கவில்லை இருந்தாலும் அவர் ஏதோ பேசிக் கொண்டிருக்க மரியாதை நிமித்தமாக உட்கார்ந்திருந்தான்.. அப்போது வரூனும் அந்த பார்ட்டிக்கு வந்தான்.. இவனை பார்த்துவிட்டு வேண்டுமென்றே இவன் பேசிக் கொண்டிருந்த நபரோடு இவனை போலவே கையில் ஒரு கிளாஸை எடுத்துக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டான்.

பிருத்வியோ கோபப்பட்டு எழுந்து போகாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தான்... வரூனோ அவன் மொபைல் போனை டேபிள் மேல் வைத்துவிட்டு அவருடன் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்... பிருத்வியோ அமைதியாக உட்கார்ந்திருக்க வரூனின் மொபைல் போனிலிருந்து வரூனுக்கு அழைப்பு வர யார் அழைக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு பிருத்வியை பார்த்து கொண்டே அந்த போனை வேகமாக எடுத்தான் வரூன்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

வரூன் போனை எடுக்கும் முன்பே அதில் வந்த அழைப்பு யாருடையது என்று பிருத்வி பார்த்துவிட்டான்... யுக்தா காலிங் என்று அவள் புகைப்படத்தோடு அந்த போனில் அழைப்பு வந்தது...

இவன் பார்த்துவிட்டானா என்று பார்த்துக் கொண்டே போனை எடுத்துக் கொண்டு தள்ளி சென்று அந்த அழைப்பை ஏற்று வரூன் பேசியது பிருத்விக்கு கேட்கவில்லையென்றாலும் வரூனின் முகபாவங்கள் இவனுக்கு நன்றாக தெரிந்தது. பிருத்வி வரூனையே பார்த்திருக்க அதை கவனிக்காமல் வரூன் பேசிக் கொண்டிருந்தான்...

பிருத்வியை விட்டு தள்ளி வந்து போனை அட்டண்ட் செய்து பேசினான் வரூன்...

"ஹலோ யுக்தா.."

"நான் யுக்தா இல்லை வரூன்... பிரணதி பேசறேன்.."

"பிரணா நீ என்ன யுக்தா போன்ல இருந்து பேசற.."

"இல்லை வரூன் என்னோட போன்ல சார்ஜ் இல்ல... அதான் அண்ணி போன்ல இருந்து பேசறேன்.."

"அப்படி என்ன அவசரம் பிரணா... போன் சார்ஜ் ஆனதும் பேசியிருக்கலாமே..."

"அது நாளைக்கு காலேஜ்க்கு சீக்கிரமா போகனும் வரூன்... அதான் சும்மா கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கலாம்னு நினைச்சேன்... ஏன் வரூன் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..."

"இல்லை பிரணா அப்படியில்லை... நான் இங்க ஒரு பார்டிக்கு வந்திருக்கேன்... இங்க உன்னோட அண்ணன் பக்கத்துல ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தேன்... அப்போ தான் போன் வந்துச்சு... என்னோட போன்ல கவர் வேற இல்லை... அப்புறம் யுக்தா கிட்ட இருந்து கால் வரும்போது போட்டோவோட வரும் அதான்..."

"அய்யோ அப்புறம் அண்ணன் பார்த்துடுச்சா... "

"பார்க்கலன்னு தான் நினைக்கிறேன்.... "

"ஆமாம் என்ன பார்ட்டி அண்ணாவும் வீட்ல எதுவும் சொல்லல போல ..."

"இது சடன்னா அரேஞ் பண்ணது பிரணா... அதனால சொல்லியிருக்கமாட்டான்... இது ஜென்ட்ஸ்க்கு மட்டுமான பார்ட்டி..."

"ஓ சரக்கு பார்ட்டியா...?? ஏன் வரூன் நீங்க குடிப்பீங்களா..."

"ஹே நான் குடிக்கல்லாம் மாட்டேன்... சும்மா இந்த பார்ட்டில கலந்துக்கனுமேன்னு வந்துருக்கேன்.... கையில் கிளாஸ் வச்சிக்கிட்டு சும்மா சிப் பண்ணிக்கிட்டு இருக்கேன்... பார்ட்டில வந்து இது கூட செய்யலன்னா எல்லாம் என்ன திமிர் பிடிச்சவன்னு பேசுவாங்க பிரணா.."

"ஆமாம் உலகத்துல குடிக்காம இருப்பவங்கள தான் இப்பல்லாம் கணக்கு பண்ண வேண்டியிருக்கு... அப்படி இருப்பவங்களையும் கெடுக்கறதுக்குனே இப்படி பார்ட்டி வைப்பாங்க போல..."

வரூன் பிரணதி கூட பேசிக் கொண்டிருக்க பிருத்வியோ இன்னும் யுக்தா கூட வரூன் என்னப் பேசிட்டு இருக்கான் என்று யோசித்துக் கொண்டிருந்தான்... பிருத்வியின் பார்வையோ வரூன் மீதே இருந்தது...

"ஹே.. என்ன அப்படி சொல்ற நான் ரொம்ப நல்ல பையன் மா..."

"அதை நாங்க சொல்லனும்... நீங்க சொல்லக் கூடாது... ஏன் வரூன் பார்ட்டில அண்ணன் குடிக்குதா.."

"என்ன பிரணா உன் அண்ணனைப் பத்தி உனக்கு தெரியாதா... அவன் என்னோட ப்ரண்ட் ஆச்சே... அவனும் அதே போல கிளாஸ் வச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்கான்..."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.