(Reading time: 29 - 58 minutes)

"னக்கும் அத்தை மேல அக்கறையிருக்கு... நீங்க பண்ணது சரி தான்.... இனி நானே இதெல்லாம் பார்த்துக்கிறேன்... நீங்க சாப்பிடுங்க..." என்று அவனுக்கு பதில் அளித்தாள்...

சாப்பிட்டு முடித்ததும் அவன் அறைக்குச் சென்ற பிருத்விக்கு அவன் செய்து விட்டு வந்த காரியத்தை நினைத்து அதிர்ச்சியாக இருந்தது... யுக்தா மீது கோபப்படக் கூடாது என்று தான் தாமதமாக வந்தான்... இங்க வந்து அம்மா தூங்காமல் விழித்திருப்பதை பார்த்ததும் இப்படி அம்மாக்கிட்ட வர லேட்டாகும்னு சொல்ல மறந்ததுக்கும் அவள் தானே காரணம் என்று இவனுக்கு கோபம் வந்தது...

ஆனா அதுக்காக இப்படியெல்லாம் தன் அம்மாவிடம் பேசுவான் என்று இவனே எதிர்பார்க்கவில்லை... கல்யாணத்துக்கு முன்னாடி அம்மாவிடம் போட்ட கண்டிஷன் என்ன..?? கல்யாணம் ஆகி ஒருமாதம் முடிஞ்சிருக்க இப்போ இவன் செய்தது என்ன..?? அப்போ அவள் செய்த எல்லாவற்றையும் மறந்துவிட்டேனா..?? என்று அவன் மனமே கேள்வி கேட்டது..

இல்லை அம்மாவை பார்த்ததும் அவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு தான் எனக்கு இப்படியெல்லாம் தோனியிருக்கு... அவ மேல எனக்கு இன்னும் கோபம் இருக்கு..." என்று அவனே அவனுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு உறங்கச் சென்றான்..

பின் அடுத்து வந்த நாட்களில் பிருத்விக்கு வேண்டியதையும் யுக்தாவே செய்தாள்... அப்போது ஒரு மாலை வேளையில் ரொம்ப ஆடம்பரமாக இல்லாமல் சாதாரண ஒரு புடவை கட்டிக் கொண்டு வரச் சொல்லி மதி சொல்ல அப்படி ஒரு புடவை கட்டிக் கொண்டு மதியிடம் வந்தாள் யுக்தா..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அத்தை நீங்க சொன்ன மாதிரி புடவை கட்டிக்கிட்டு வந்துட்டேன்... நாம கோவிலுக்கு போகப் போறோமா அத்தை..."

"இல்லை இப்படி வந்து உக்காரு சொல்றேன்.." என்று கூறி யுக்தாவை உட்கார வைத்து மொத்தமாக சேர்த்து கிளிப் போட்டு வைத்த முடியை அவிழ்த்து தலை வாரினாள் மதி.

"அத்தை என்னப் பண்றீங்க வெளியப் போறதா சொல்லியிருந்தா நானே பின்னிக்குவேனே..."

"ஏன் வீட்டில் இருந்தா இதெல்லாம் செஞ்சுக்க கூடாதா?? நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்... எப்பப் பார்த்தாலும் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டு செஞ்சுக்கிட்டு இருக்க... ஒரு சல்வாரை போட்டுக்கிட்டு மொத்தமா முடியை எடுத்துக் கிளிப் போட்டுக்கிட்டு... இப்படி தான் தினம் இருக்க..."

"......."

"புதுசா கல்யாணம் ஆனப் பொண்ணு தினம் சாயங்காலம் வேலை முடிஞ்சதும் ப்ரஷ் ஆகி தலை சீவி பூ வச்சுக்கிட்டு இருக்கனும்.... நீயும் அப்படி இல்லை.. எனக்கும் அதெல்லாம் தோணல..." என்று கூறி தலைப் பின்னி... வாங்கி வைத்திருந்த 3 முழம் மல்லிகை பூவை தலையில் சூடினாள்.

"அத்தை என்ன எல்லா பூவையும் எனக்கு வச்சிட்டீங்க... பிரணதிக்கு, உங்களுக்கு எடுத்துக்கலையா..."

"பிரிஜ்ல பூ இருக்கு நானும் பிரணதியும் காலையில வச்சிக்கிறோம் இப்ப நீ வச்சிக்க... இங்கப் பாரும்மா பிருத்விக்கு உன் மேல கோபம் இருந்துச்சு.. உனக்கும் ஏதோ வருத்தம் இருந்துச்சு...

இப்போ தான் பொண்டாட்டி ஒருத்தி வீட்டில் இருக்கறது அவனுக்கு தெரிஞ்சிருக்கு... நீ இனிமேயும் ஒதுங்கி இருக்காதம்மா.. இங்கப் பாரும்மா சீக்கிரம் உங்களுக்குள்ள எல்லாம் சரியாகனும்... உன்னை இப்படி பார்த்தா அவனுக்கு வர கோபமெல்லாம் கூட காணாம போய்டும் பாரு..." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் மதி.

எதுக்கு அத்தை இதெல்லாம் செய்யறாங்க என்று யோசித்து பின் எதற்கு என்று அவளுக்கு புரிய வந்தது... அவரின் எதிர்பார்ப்பு இவளுக்கு புரிகிறது...  மகனுக்கு கல்யாணம் முடிந்தால் மகனுடைய சந்தோஷமான வாழ்க்கை... அதன் பின் பேர குழந்தை என்று பெற்றவர்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்கும்... ஆனால் அதையெல்லாம் இவளால் நிறைவேற்ற முடியுமா என்று தான் இவளுக்கு தெரியவில்லை...

ஒருவேளை சப்னா இந்த இடத்தில் இருந்தால் எல்லாம் நல்லபடியாக நடந்திருக்குமோ என்று இவளுக்கு தோன்றியது... ஒருவேளை இன்னும் கொஞ்சம் பிடிவாதத்தோடு இருந்திருந்தால் இந்த திருமணத்தை நடக்கவிடாமல் தடுத்திருக்கலாமோ என்று கூட அவள் மனம் யோசித்தது...

எதுவாக இருந்தாலும் எல்லாம் முடிந்து விட்டது... அத்தையின் அந்த எதிர்பார்ப்பு நடக்குமா என்று தெரியவில்லை... அவர்களின் இந்த ஆசைக்காவது மதிப்பு கொடுப்போமே என்று கட்டிய புடவை தலையில் வைத்த பூவோடு வலம் வந்தாள்.

திடிரென்று புது ப்ராஜக்ட் கொடுத்த நிறுவனம் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வந்து அதற்கு சென்றான் பிருத்வி.... அது ஒரு ட்ரிங்ஸ் பார்ட்டி... இது போல பார்ட்டிக்கு செல்வது பிருத்விக்கு பிடிக்காது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.