(Reading time: 29 - 58 minutes)

ந்த வீட்டிற்கு வந்து அவள் நன்றாக உறங்கிய நாட்களை விரல் வைத்து எண்ணிவிடலாம்... ஏன் அவள் நன்றாக தூங்கியே எத்தனையோ வருடங்கள் ஆகிறது... அப்படியிருக்க இன்று எப்படி தூங்கிப் போனாள்... இவனை விட்டு விலக நினைத்தாலும் இவனின் அருகாமை  அவளுக்கோ ஏதோ நிம்மதியான உணர்வை கொடுப்பதை அவளால் உணர முடிந்தது...

ஆனால் பிருத்வி விழித்ததும் இங்கு நடந்தது அவனுக்கு ஞாபகம் இருக்குமா...?? இருந்தாலும் என்ன சொல்வான்... நீதான் என் அறைக்கு வந்தாய் என்று இவளையே குற்றம் சாட்டுவானா...?? அன்று இவளை குற்றம் சாட்டியபோது ஏனோ இவளால் தாங்கி கொள்ள முடிந்தது...

ஆனால் இன்று அவன் மனைவி என்ற நிலையில் அப்படி ஒரு வார்த்தையை கேட்பதே அவமானம்... ஏனோ அதன் பிறகும் இங்கேயே உறங்க மனமில்லாமல் அவளுடைய அறைக்குச் சென்றாள்...

காலையில் கொஞ்சம் தாமதமாகவே கண் விழித்த பிருத்விக்கு இரவு நடந்தது நல்லவேளை ஞாபகம் இருந்தது... "ஏன்டா என்ன செஞ்சு வச்சிருக்க... ஏற்கனவே போதையில அவக்கிட்ட நடந்தது போதாதா..?? திரும்பவும் அதே தப்பை செஞ்சிருக்க... இனிமேயிருந்து குடிப்பியா..??" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

காலையில் குளித்து தலையில் துணியால் கொண்டை போட்டுக் கொண்டு வேலை செய்த மருமகளை பார்க்க மதிக்கு சந்தோஷமாக இருந்தது மதிக்கு... எத்தனையோ முறை இப்படி இருந்திருந்தாலும் இன்றைக்குள்ள வித்தியாசம் மதிக்கு புரிந்திருந்தது... அதற்கு காரணம் இரவு தண்ணீர் எடுத்துப் போக வெளியில் வந்த மதி யுக்தா அறை திறந்து இருப்பதை பார்த்து அவளை பார்க்கச் சென்று யுக்தா அங்கு இல்லை என்பதை அறிந்ததும் அவள் பிருத்வியின் அறையில் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்... அவர்களின் சந்தோஷமான வாழ்க்கையை மதி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாளே...

ஏனோ எழுந்ததிலிருந்து யுக்தா பிருத்வியின் கண்ணில் படவேயில்லை.. அதற்கான காரணம் பிருத்விக்கு புரிந்தது... என்ன இருந்தாலும் அவளின் விருப்பத்தை அவன் கேட்காமல் அவளிடம் அப்படி நடந்துக் கொண்டது தவறு தானே...

இப்படியிருக்க மதியோ இதற்கு மேலும் இவர்கள் தனி தனி அறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பிருத்வியிடம் அது பற்றி பேசினாள்... யுக்தா மனைவியா எல்லா கடமையையும் செய்யும்போது ஏன் நீங்கள் தனி தனியாக இருக்க வேண்டும் என்று மதி கேட்ட போது அவனும் சரி என்று ஒத்துக் கொண்டான்...

முதல் நாள் போல் போதையில் இல்லாமலேயே தன் மனைவியை பிருத்வி நாடினான்... அவளும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை... இப்படி அவர்கள் முழுமையான இல்லற வாழ்க்கையை ஆரம்பித்து ஒருமாத காலம் செல்ல...

ஏனோ அப்போதும் அவர்களுக்குள் அன்யோன்யம் வரவில்லை... அவர்களுக்குள் ஊடல்கள் செல்ல சீண்டல்கள் எதுவுமே இல்லை... இப்போதும் யுக்தாவிடம் அதே விலகல் தன்மை இருந்தது... பிருத்வியும் அந்த சமயங்களில் கோபப்பட்டுக் கொண்டிருந்தான்... அவளின் விலகலுக்கான காரணத்தை அவனும் அறிய முயற்சி செய்யவில்லை... அவனின் கோபத்திற்கான காரணத்தை அவளும் அறிய முயற்சி செய்யவில்லை...

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மதிக்கோ... இவ்வளவு சீக்கிரம் இந்த மாற்றங்கள் வந்திருக்க இன்னும் சிறிது காலத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பினாள்... கடவுளிடமே அந்த பொறுப்பை விட்டிருந்தாள்...

அப்படி ஒருநாள் யுக்தாவையும் பிரணதியையும் கூட்டிக் கொண்டு வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றாள் வளர்மதி... இவ்வளவு சீக்கிரம் அவர்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திட்ட முருகா... அப்படியே அவங்க சந்தோஷமான வாழ்க்கையை வாழனும் முருகா என்று வேண்டினாள்...

பிரணதியோ சீக்கிரம் வரூனை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டினாள்... ஆனால் யுக்தாவோ பிருத்வியின் மனதில் சப்னா இருப்பது தெரிந்து ஏமாற்றமடைந்த பின் தனக்கென்று எதுவும் அவள் வேண்டிக் கொள்வதையே விட்டுவிட்டாள்... அதற்காக கடவுள் பக்தியை அவள் விடவில்லை... எனக்கு பிருத்வி கூட இப்படி ஒரு வாழ்க்கையை தான் முடிவு பண்ணியிருக்கீங்கன்னா அப்படியே இருக்கட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்...

முருகனோ விஷமச் சிரிப்பு சிரித்துக் கொண்டார்... எல்லாம் நல்லபடியாக நடக்க இன்னும் சில சங்கடங்களை எல்லோரும் சந்தித்தாக வேண்டுமே... ஒன்றாக சேர்ந்தவர்கள் கொஞ்ச காலம் விலகியும் இருக்க வேண்டுமே என்பதுதான் அந்த சிரிப்பின் பொருள் என்று இந்த மூவருக்கும் தெரியவில்லை...

அது தெரியாமலே கோவிலை விட்டுச் சென்ற மூவருக்கும் யுக்தாவும் பிருத்வியும் விலகி இருக்கும் தருணம் வெகுவிரைவில் வரப்போகிறது என்றோ... அதற்கான முதற்கட்டம் இவர்களுக்கு முன் இவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கிறது என்றோ தெரியவில்லை.

தொடரும்

Episode # 18

Episode # 20

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.