(Reading time: 23 - 45 minutes)

20. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ

Kadalai unarnthathu unnidame

செந்திலும் பிருத்வியும் கம்பெனிக்கு போயிருப்பதால்... வீட்டை பூட்டிக் கொண்டு கோவிலுக்கு போன மூவரும் திரும்பி வீட்டுக்கு வர அங்கே யாரோ ஒருவர் வீட்டு வாசலில் காத்துக் கிடந்தார்.

முதலில் அவர் யாரென்று அடையாளம் தெரியாத மதிக்கு பின் அவர் செந்திலின் சொந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவந்தது... அவரை உள்ளே அழைத்துச் சென்று உபசரித்தனர் மூவரும்... இவர்களுடைய குலதெய்வக் கோவிலை புதுசாக கட்ட ஏற்பாடு செய்துள்ளதாகவும்...  அதற்கான நன்கொடை வேண்டுமென்றும் அதை வாங்கவே அவர் வந்திருப்பதாக தகவல் தெரிந்ததும்... செந்திலிடம் போன் செய்து கேட்டு... நன்கொடையாக செந்தில் கொடுக்க சொன்ன பணத்தை கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.

அவர் கிளம்பியதும் யுக்தா வேலையை பார்க்க போக... பிரணதியும் அவள் அறைக்குச் சென்று விட... மதி தனியாக உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்...

பின் வேலை முடித்துவிட்டு வந்த யுக்தாவும் பிரணதியும் மதி யோசனையாக உட்கார்ந்திருந்ததை பார்த்து என்னவென்று வினவினர்....

"அத்தை.... அந்த பெரியவர் வந்து போனதிலிருந்து ஏதோ யோசனையா இருக்கீங்களே என்ன அத்தை..."

"ஒன்னும் இல்ல யுக்தா... அடிக்கடி குலதெய்வ வழிபாடு செய்வது நல்லதுன்னு புக்ல படிக்கிறோம்... இப்போ அந்த பெரியவரும் வந்ததிலிருந்து அதைப் பத்தி தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... அம்மா அப்பா இல்லாம அனாதையா இருந்த எனக்கு இந்த குலதெய்வம் பத்தியெல்லாம் என்ன தெரியும்..."

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

"அத்தை ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க... "

"இல்லம்மா உங்க மாமா என்னை கல்யாணம் செஞ்சுக்க நினைச்சப்ப... நான் சம்மதம் சொன்னதும்... அவரோட அப்பா அம்மா அப்ப உயிரோட இல்லைன்னாலும்... கல்யாணத்துக்கு முன்னாடி எங்க குலதெய்வ கோவிலுக்குப் போய் பொங்கல் வச்சு பூஜை பண்ணனும்...

கல்யாணத்துக்கு முன்னாடி ஜோடியா போய் சாமிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கனும்... அப்பத்தான் கல்யாணம்  எந்த தடையில்லாம நடக்கும்னு ஒரு நம்பிக்கை... அதனால போகனும்னு சொன்னாரு... அப்புறம் உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போய் எல்லாரும் பொங்கல் வச்சு சாமிக் கும்பிட்டு வந்தோம்....

அப்புறம் பிருத்விக்கும் இவளுக்கும் மொட்டைப் போட்டு காது குத்திட்டு வந்ததோட சரி.... அப்பப்ப போகலைன்னாலும் உங்க கல்யாணத்துக்கு முன்னாடியாவது உங்களை கூட்டிட்டுப் போயிருக்கனும்... அப்போ கல்யாணம் நடந்த சூழ்நிலையில் எனக்கும் சரி உங்க மாமாவுக்கும் சரி இது தோணலை... கல்யாணம் முடிஞ்சதுமாவது உங்களை கூட்டிக்கிட்டு போயிருக்கனும் அப்பவும் விட்டாச்சு... ஆனா இப்போ இந்த பெரியவர் வரவே இப்போ நாம கோவிலுக்கு போனா என்னன்னு தோனுது யுக்தா...

இப்போ உங்களுக்குள்ளேயும் ஓரளவுக்கு எல்லாம் சரியாகிவிட்டது.... அப்படியே கோவிலுக்கு போய் பூஜை பண்ணிட்டு வந்தோம்னா எல்லாம் நல்லபடியாக ந்டக்கும்னு நம்பிக்கை இருக்கு.." என்று தன் மகளிடமும் மருமகளிடமும் சொல்லிக் கொண்டிருந்த மதிக்கு தெரியவில்லை... அங்கே போய் வந்ததும் நிலைமை மோசமாகும் என்று...

கடவுள் மேலே நம்பிக்கை வச்சு குலதெய்வத்தை வழிபட போனா பிருத்வி யுக்தா பிரியப் போறாங்கன்னா அப்போ கடவுளே அவங்க பிரிய வேண்டும் என்று நினைக்கிறாரா என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது... முன்பே சொன்னது தான் யுக்தா வாழ்க்கையிலே இப்படி தான் நடக்க வேண்டும் என்று விதி தீர்மானித்தது தானே... அவள் காதல் அவளுக்கு எளிதில் கிடைக்கக் கூடாது என்று அவள் விதியில் இருந்தால் பின் இப்படியெல்லாம் நடக்கத் தானே செய்யும்...

இப்படியெல்லாம் அவள் வாழ்க்கையில் நடக்கிறது என்றால் கடவுள் ஏதோ கணக்கு வைத்திருக்கிறார் என்று தானே தெரிகிறது...

மதி குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்று சொன்னதும்... செந்திலும் ஒத்துக் கொண்டார்... அவருக்கும் இது நல்லது என்று பட்டது...  பிருத்வி, பிரணதி, செந்தில் மூவருக்கும் ஏற்ற ஒருநாளை தேர்ந்தெடுத்து எல்லோரும் கிளம்ப முடிவெடுத்தனர்... அவர்கள் குலதெய்வ கோவில் திண்டிவனம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருப்பதால் விடியற்காலையிலேயே கிளம்பி மதியத்திற்குள் பூஜை முடித்து பின் செந்திலின் தூரத்து சொந்தக்காரர் வீட்டில் சிறிதுநேரம் தங்கி மாலை கிளம்பி வர முடிவெடுத்திருந்தனர்.

எல்லாம் திட்டமும் நல்லபடியாக போட்டு முடிக்க இங்கே குழப்பம் வந்தது மீண்டும் பிரணதியால்... தன் அம்மா சொன்ன ஒரு விஷயத்தை மனதிற்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள் அவள்... திருமணத்திற்கு முன் அந்த கோவிலில் ஜோடியாக சென்று வழிப்பட்டால் கல்யாணம் எந்த தடையில்லாமல் நடக்கும் என்பது அவள் மனதிலேயே இருந்தது.

இவள் காதலுக்கு தன் அப்பா அம்மா பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என்று தெரியும்.... வரூனுடைய அப்பா அம்மாவும் பிரச்சனையாக இருக்கப் போவதில்லை என்றும் தெரியும்.... இருந்தாலும் இவள் அண்ணன் பிருத்வி இந்த கல்யாணத்துக்கு தடையாக இருப்பானோ என்று இவள் பயந்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.