(Reading time: 23 - 45 minutes)

தியம் எல்லோரும் சாப்பிட்டதும் ஓய்வெடுக்க நினைத்தபோது செந்திலுக்கு தெரிந்த ஒருவர் புதிதாக வீடு கட்டுவதாகவும்... எஞ்சினியர் எல்லாம் சரியா செய்கிறாரா..?? என்று இவர்கள் பார்க்க வேண்டும் என்று கூப்பிடவே... இங்க வந்து கூட இதெல்லாம் தேவையா...?? என்ற மதியின் புலம்பலை காதில் வாங்காமல் செந்தில் பிருத்வியை கூட்டிக் கொண்டு போக...

இதுதான் தருணம் கோவிலுக்கு போக... போய் வந்த பின்னோ... இல்லை ஊருக்கு போன பின்போ பிருத்வியிடம் எல்லா விவரங்களையும் கூறலாம் என்று நினைத்துக் கொண்டு... பிரணதி செய்த காரியத்திற்கு அவளை கொஞ்சம் திட்டி... வரூனுக்கு போன் செய்து இருவரும் கோவிலுக்கு வருவதாக கூறினாள் யுக்தா..

பிருத்வியிடம் என்ன சொன்ன" என்று வரூன் கேட்டதற்கு... வீட்டுக்கு போய் எல்லா விஷயத்தையும் சொல்லிட வேண்டியது தான்... இப்போ ஏதாவது சொல்லி சமாளிச்சுக்களாம்... ஆனா இப்போதைக்கு பிரணதிக்கு எதுவும் தெரியவேண்டாம்.. அவ டென்ஷனாயிடுவா.. என்று போனில் வரூனிடம் கூறினாள்.

மதியிடம் இருவரும்  பிரணதியின் பர்ஸை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்ததாக கூறினார்கள்... தனியாக போக வேண்டாம்... மாமாவோ இல்லை பிருத்வியோ கூட வரட்டும் என்று மதி கூறியதற்கு... அதுவரைக்கும் பர்ஸ் அங்கேயே இருக்குமா..?? என்று இருவரும் கேட்டார்கள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

பின் தனியாக அவர்களை அனுப்ப வேண்டாம் என்று நினைத்த மதி... அவர்கள் உறவுக்கார பெண்ணோடு TVS 50 யில் அவர்களை அனுப்பி வைத்தாள்.

எப்படியோ தெரியாத ஊரில் மதி இவர்களை தனியாக அனுப்பமாட்டாள் என்பது யுக்தாவிற்கு தெரியும்... எப்படியோ பிருத்வியிடம் உண்மையை சொல்லித் தானே ஆக வேண்டும்... அதனால் இப்போது அந்த பெண்ணோடு பூஜையை முடித்துவிட்டு வரலாம் என்று நினைத்தாள்...

கோவிலுக்குச் சென்றதும் அங்கே வரூன் காத்திருந்தான்... முதலில் அதிர்ச்சியான அந்த உறவுக்கார பெண் பின் விஷயம் தெரிந்ததும்... அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தாள். அவளும் ஒருவரை காதலிப்பதால் இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லமாட்டேன் என்றாள். பின் வரூனும் பிரணதியும் ஜோடியாக அம்மனை வழிபட்டனர்.

அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே செந்திலும் பிருத்வியும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். விஷயத்தை மதி சொன்னதும்... "இப்படியா கேர்லெஸா இருக்கறது " என்று செந்தில் கோபப்பட்டு பின் கூட ஒருவரை துணைக்கு அனுப்பியதால் அமைதியாக இருந்தார்.

ஆனால் அவர்கள் கூறியது பொய் என்பது பிருத்விக்கு தெரிந்தது... அவர்கள் வரூனை பார்க்க் சென்றிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது... இங்கு வரூன் வர வேண்டிய காரணம் என்ன என்று பிருத்வி யோசித்தான்..

ஏனோ வரூனுக்கும் பிரணதிக்கும் காதல் இருக்கும் என்பது அவனுக்கு தோன்றவில்லை... இப்போதும் வரூன் யுக்தாவை பற்றி அவன் சந்தேகிக்கவுமில்லை... அங்கு நட்பு முறையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர் சரி... ஆனால் வரூன் இவ்வளவு தூரம் வரும் அளவிற்கு யுக்தாவிற்கு ஏதோ பிரச்சனையா என்று யோசித்தான்...

அவனுக்கும் தெரியுமே... இப்போது அவளுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் இவன் குடும்பத்தாரை தவிர வேறு யாரும் அருகில் அவளுக்கு இல்லை என்று... இந்த சமயத்தில் வரூனின் உதவியை நாடியிருக்கலாம் என்று தோன்றியது...

புத்திக்கு நியாயமானதாக தோன்றினாலும்... இவனை அவள் ஒதுக்கியே வைத்திருக்கிறாள் என்றே மனசு சொல்லியது... உனக்கு என்ன பிரச்சனை யுக்தா என்று நேரடியாக அவளிடம் கேட்காமல் அவளே சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தான்... ஆனால் கோவிலிலிருந்து வந்ததிலிருந்து அவர்கள் சென்னைக்கு போய் சேரும் வரையிலும் யுக்தா வரூனைப் பற்றி எதுவுமே பேசவில்லை...

பிருத்வி எதுவும் கேட்காததால் இங்கு எதுவும் பேசுவதை அவன் விரும்பவில்லை போல என்று நினைத்து வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்த யுக்தாவித்கு தெரியவில்லை அவன் கோபத்தின் உச்சியில் இருக்கிறான் என்பதும்... அது எப்படி வெடிக்க போகிறது என்றும்...

வீட்டிற்கு வந்த பின்னும் இரவு உணவு முடிந்து ஏதேதோ சின்ன சின்ன வேலைகளை முடித்துவிட்டு அவள் அறைக்கு வர நேரமாகிவிட்டது யுக்தாவிற்கு... அதுவரையிலுமே பிருத்வியிடம் எப்படி வரூன் பிரணதி காதலைப் பற்றி சொல்வது என்று திட்டமிட்டு கொண்டிருந்தாள்... பிருத்வி இதை எப்படி எடுத்துக் கொள்ள போகிறானோ என்று பயமாக இருந்தது. எப்படியோ விஷயத்தை சொல்லிதான் ஆக வேண்டும் என்று பதட்டத்தோடு அவனுக்கு பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள்.

பிருத்வி ஏதோ புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்த அவள்... "பிருத்வி பால் எடுத்துட்டு வந்திருக்கேன்..." என்று அவனை அழைத்தாள்.

"வை எடுத்துக்கிறேன்..." என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.