எப்படியாவது விஷயத்தை சொல்லிதானே ஆகவேண்டும் என்று நினைத்தவள்... மெதுவாக "பிருத்வி" என்று அழைத்தாள்...
என்ன என்பது போல அவளை பார்த்தான்..
"வரூன் பத்தி பேசனும் பிருத்வி" என்றாள்.
"வரூன் பத்தி என்கிட்ட என்ன சொல்ல வேண்டியிருக்கு..." என்றான்.
"அதில்லை பிருத்வி வரூன் கோவிலுக்கு வந்ததை பத்தி.." என்று முடிக்கும் முன் கோபமாக எழுந்தவன்..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...
படிக்க தவறாதீர்கள்...
"அதைத்தான் சொல்றேன்... என்கிட்ட அதைப்பத்தி பேச வேண்டிய அவசியம் என்ன..?? நான் உனக்கு யாரு... நீயே கட்டாயத்தின் பேர்ல தானே இங்க இருக்க... என்கூட ஒருநாள் வாழ்ந்தா போதும்னு சொன்ன உன்னை... காலம் முழுக்க என்கூட இருக்கமாதிரி செஞ்சுட்டாங்களே...
அப்படியிருக்க என்கிட்ட என்ன சொல்லனும்.... எதுக்கு சொல்லனும்... என்கூட வாழற லைஃப் பிடிக்கல... புது ப்ரண்ட்ஷிப் கிடைச்சிடுச்சு... உன்னை தேடி ஊருக்கு வர்ற அளவுக்கு... இதப்பத்தி என்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது... " என்று அவன் பேச..
"பிருத்வி போதும் நிறுத்துங்க... நீங்க பேசறதோட அர்த்தம் உங்களுக்கு புரியுதா..... தப்பா இருக்கு பிருத்வி... இது உங்க மனசுல இருந்து வரல... ஆனா கோபத்துல இப்படி பேசி என்னை காயப்படுத்தனும்னு நினைக்கிறீங்க... ஆனா அது உங்களையே கேவலப்படுத்திக்கிறதா தான் அர்த்தம்... இதை வேற யாராவது கேட்டா மனைவியையே தப்பா பேசறீங்கன்னு உங்களை கேவலாமா நினைப்பாங்க...
நான் பண்ண ஒரு தப்புக்காக என்மேல கோபமா இருந்தீங்க... அது எனக்கும் புரிஞ்சுது... அதனால நாம விலகியே இருந்தோம்... ஆனா இப்போ நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சிட்டோம் பிருத்வி... இருந்தும் இன்னும் நீங்க கோபமா இருக்கீங்க... ஏன் பிருத்வி...?? ஏன் இன்னும் இந்த கோபம்...?? ஏன் இன்னும் என்மேல வெறுப்பு...?? இப்படி தப்பா பேசற அளவுக்கு...?? சொல்லுங்க பிருத்வி... " என்று அவள் கேட்ட அடுத்த நொடியே...
"ஆமாம் கோபம் தான் உன்மேல... ரொம்ப கோபம்.." என்று அவன் கத்த ஒரு நொடி அதிர்ந்தாள்... அது ஏ.சி ரூம் ஆக இருந்ததால் கதவு ஜன்னல் எல்லாம் அடைத்திருக்கவே அவன் கத்தியது வெளியில் மற்றவர்களுக்கு கேட்கவில்லை..
ஆனால் அதையெல்லாம் யோசிக்காமல் அவன் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனான்... "ரொம்ப கோபம் ஏன் தெரியுமா..?? இப்படி தான் வாழனும்னு மனசுல ஒரு வாழ்க்கையை நினைச்சுக்கிட்டு இருந்தேன்... ஆனா நீ வந்து எல்லாத்தையும் மாத்திட்ட... எனக்கு ஒவ்வொரு நாளும் சித்ரவதையா இருக்கு...
என்ன சொன்ன நானே என்னை கேவலப்படுத்திக்கிறேனா..?? இப்போ தான் நான் கேவலப்பட்டு போனேனா...?? உன்னை தான் காதலிக்கிறேன்... உன்னை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்னு ஒரு பொண்ணுக்கு நம்பிக்கையை கொடுத்துட்டு ஏமாத்தினேனோ... அப்பவே ஒரு கேவலமானவனா ஆயிட்டேன்...
ப்ரண்டா நினைச்ச உன்கிட்ட போதையில இருந்தாலும் எப்போ தப்பா நடந்துக்கிட்டேனோ அப்பவே கேவலமானவனா ஆயிட்டேன்... இப்படி ஒரு பையன் பிறந்திருக்கான்னு சந்தோஷப்பட்ட என்னோட அப்பா அம்மா முன்னாடி அப்படி ஒரு தப்பை பண்ணிட்டு கூனி குறுகி நின்னேனோ அப்பவே கேவலப்பட்டு போயிட்டேன்... இதுல புதுசா என்னை கேவலமா நினைக்க என்ன இருக்கு...
நான் கோபக்காரன் தான்... ஆனா எப்போ நீ என்னோட வாழ்க்கையில வந்தியோ அதுல இருந்து ஏதாவது ஒரு காரணத்துக்கு என்னை கோபப்படுத்திக்கிட்டே இருக்க... நல்லா இருந்த என்னை ஒருநாள் குடிகாரனா கூட மாத்திட்ட... திரும்பவும் உன் விருப்பம் இல்லாமயே உன்கிட்ட தப்பா நடந்துக்கற அளவுக்கு என்னை கேவலமானவனா மாத்திட்ட... இதுக்கு மேல தான் நான் கேவலமானவனா மாறனுமா..??" என்றெல்லாம் அவள் முகத்தை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பி அவன் கோபத்தோடு அடுக்கடுக்காக பேசிக் கொண்டே போக...
யார் முன்னும் குறிப்பாக அவன் முன்னே அழக்கூடாது என்று நினைத்திருந்த யுக்தாவின் கண்களில் அவளையும் மீறி கண்ணீர் வந்துக் கொண்டிருக்க... பேசிக் கொண்டே இவள்புறம் திரும்பிய பிருத்வி அவள் கண்ணீரை பார்த்து பேச்சை நிறுத்த... தான் அழுதுக் கொண்டிருக்கிறோம் என்பது அப்போது தான் அவளுக்கு புரிய... அந்த அறையிலிருந்து உடனே வெளியே சென்றுவிட்டாள்... தான் என்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என்பதும் அப்போது தான் பிருத்விக்கு புரிய தலையில் கைவைத்து கட்டில் மேல் அமர்ந்தான்.
இதுவரையில் அவள் அமைதியும் மௌனமும் கூட பிருத்வியின் மனதை மாற்றாமல் கோபப்படுத்திக் கொண்டிருக்க... இப்போது அவள் அழுகையாவது அவன் மனதை மாற்றுமா..??
அப்படி அவன் மனம் மாறினால்... அதை தெரிந்துக் கொள்ள தான் யுக்தா அவன் அருகில் இருப்பாளா..??
தொடுவானம் தொடுகின்ற நேரம்...
தொலைவினில் போகும்...
அது தொலைந்துமே போகும்...
தொடுவானமாய் பக்கமாகிறாய்...
தொடும்போதிலே தொலைவாகிறாய்...
தொடரும்
{kunena_discuss:933}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.