(Reading time: 14 - 27 minutes)

02. வசந்த காலம் - கிருத்திகா

Vsantha kalam

ஹாய் !!!!! பிரெண்ட்ஸ் அண்ட் சிஸ்டேர்ஸ் ...என் முதல் முயற்சிக்கு உங்களின் பாராட்டு மிகவும் சந்தோஷமாக உள்ளது ... நீங்கள் கூறிய திருத்தங்களை செய்ய முயற்சி செய்துள்ளேன் ... இன்னும் பிழை இருப்பின் சுட்டி காட்டவும் அதை சரி செய்து கொள்ளுகிறேன் ... சிறிது சிறிதாக பக்கங்களை அதிகப்படுத்தி தருவதற்கும் முயற்சி செய்கிறேன் .....உங்கள் ஊக்கங்களுக்கு நேரம் எடுத்து கருத்துக்களை பதிவு செய்ததற்கும் மிக மிக நன்றி 

ங்கை கொடுத்த முத்தத்துடன் ரம்யமான மனநிலையுடனும் பிரபஞ்சினி ஆபீஸ் நுழைந்தாள் .. அங்கே ..

இவளை முறைத்துக்கொண்டு  சங்கீதா நின்றிருந்தாள் .. சங்கீதா ரஞ்சி போலவே கிட்டதட்ட இவள் வேளைக்கு சேரும் போதே சேர்ந்தவள் ... பார்த்த உடன் ஒரு சிநேகமான புன்னகையில் இருவரும் மனமொத்த தோழிகள் போல் உணர்ந்தார்கள் ....

சங்கீதாவின் காதலுக்கும் வீட்டை எதிர்த்து அவள் புரிந்த திருமணத்திற்கும் உடன் நின்றவள் ரஞ்சி ... சங்கீதாவின் கணவனுக்கும் ரஞ்சி மீது தனி ப்ரியம் உண்டு வசதியான வீட்டில் பிறந்தவன் அவன்.. காதலுக்காக அனைத்தையும் விட்டுவந்தவனின் காயங்களுக்கு மருந்தாய் ..மயிலறகின் தீண்டலாய் ..உடன்  பிறவா சகோதரியாய் வந்தவள் ரஞ்சி ...

சங்கீதாவின் முகத்தை பார்த்ததும் புரிந்து போனது.... ஐயோ வேதாளம் இன்று எந்த முருங்கை மரத்தில் இருக்குதோ என்று எண்ணியவளாக சென்றாள் ..

"ஏய் ரஞ்சி எத்தனை  தடவை சொல்லி இருக்கிறேன் ஒழுங்கா வயசு பொண்ணு மாதிரி டிரஸ் பண்ண முடியுமா முடியாதா ??????? உங்க அண்ணன் என்னடானா " என் தங்கச்சி மட்டும் சாமியார் மாதிரி டிரஸ் பண்ணிட்டு இருக்கறா நீ ஹீரோயின் மாதிரி கலகுறேன்னு தினமும் காலைல திட்டுறார்" ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே 

படிக்க தவறாதீர்கள்...

ஏய் சங்கி பொறு பொறு எங்க அண்ணன்  உன்னை திட்டுறார  ????? நம்ம்பவே முடியல்லையே அவர் தான் உன் கடைக்கண் பார்வையில் வேர் அறுந்த மரமாய் ...ஒத்தக்காலில்  தவமிருக்கிறார் உனக்காக ......பின்ன எப்படி உன்னை திட்டுவார் ???

முகத்தில் செம்மையுடனே  அதவிடு அவர் திட்டினாரோ .. இல்லையோ ... காண்டீபா நீ இப்படி இருப்பதில் வருத்ததுடன் தான்  இருக்கிறார் நீ மாற போறயா ???  இல்லை எப்போதும் போல் என் கூட  சண்டை மட்டும்  போடுவயா  ??????

கோவத்தின் உச்சியில் இருந்தவளை ஒருவாறு சமாளித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள் .... இடைவேளையில் ரெஸ்ட் ரூம் வந்தவள் தன்னை தானே கண்ணாடியில் பார்த்தாள் ...அந்த சங்கி மங்கி சொன்னதன் அர்த்தம் புரிந்தது ..( அவள் குஷி மூடில் இருக்கும் பொது எப்போதும் சங்கி மங்கி என்று தான் சங்கீதாவை கூப்பிடுவாள் )..

சங்கீதாவை பற்றி என்னும் போதே ஒரு இனிமை இவள் மனதில் பரவுகிறது 

நட்பு என்பது  வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.  மூன்று எழுத்து காவியம் அது, உண்மை நட்பு ஒரு கோடி உறவுகளுக்கு சமம். சந்தோசங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள, ரகசியங்களையும், முக்கியமானவற்றையும் பேசிக்கொள்ள , சோகத்தில் தோள் சாய்த்து அழ, இடர் காலத்தில் கைபிடித்து எழ என  இரு வழிப்பாலமாவது நல்ல நட்பு ஒன்றே. இவ்வுலகில் தாய் தந்தையரை, சகோதர, சகோதரிகளை, ஏன் தமக்கு பிறக்கும்  குழந்தைகளையும் கூட தேர்ந்தெடுக்கும் உரிமையை யாருக்கும் இறைவன் தருவதில்லை, வாழக்கைத்துணையாகப் போகும் அந்த ஒருவரையும், உயிர்த்துணையாக விளங்கப்போகும் நண்பர்களையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் மட்டுமே அவன் நமக்கு விட்டு வைத்தான்.

 உயர்விலும், தாழ்விலும், இன்பத்திலும், துன்பத்திலும் உடன் வருவதே உண்மை நட்பு, அது வாழ்க்கைக்கு வாய்த்த வரப்பிரசாதம். உண்மை நட்பு ஒரு வரம், அதைப் பேணி காப்பது ஒரு தவம்...! . அந்த நட்பை உயிர் உள்ளளவும் போற்றிப் பாதுகாத்து வாழ்ந்திருக்க வேண்டும்.

ரஞ்சிக்கு தன் சின்ன வயதில் நட்பு மற்றும் கூடா நட்பு பற்றி அம்மா கூறிய கதை நினைவில் வந்தது 

அன்னை திரேசா சிறுமியாக இருந்தபோது அவருடைய தோழியரில் ஒரு தீய தோழி இருப்பதை அவருடைய தாய் கவனித்தார். ஒரு தீய நட்பு நல்லவர்களையும் கெடுத்துவிடும் எனவே அந்த நட்பைத் துண்டிக்க வேண்டும் என திரேசாவின் தாய் முடிவெடுத்தார்.

ஒருநாள் அவர் திரேசாவை அழைத்தார். அவருடைய கையில் ஒரு பெரிய பெட்டியில் நிறைய ஆப்பிள்  பழங்கள் இருந்தன. அழகான ஆப்பிள் பழங்களைக் கண்ட திரேசாவின் கண்கள் ஆனந்தத்தில் விரிந்தன. ஆர்வத்துடன் ஒரு பழத்தை எடுக்கப்போன திரேசாவை தாய் நிறுத்தினார். அவற்றுள் நல்ல பழங்களாகத் தெரிந்து இரண்டு கூடைகளில் வைக்கும்படி தாய் கூறினாள். அதன்படியே திரேசாவும் நல்ல பழங்களாகத் தெரிந்து  இரண்டு கூடைகளில் நிரப்பினாள். தாய் தனியே வைத்திருந்த ஓர் அழுகிய பழத்தை எடுத்தார், திரேசா புரியாமல் பார்த்தாள். தாய் அந்த அழுகிய பழத்தை நல்ல பழங்கள் இருக்கும் ஒரு கூடையின் நடுவே வைத்தார்.

“ஏம்மா நல்ல பழங்களோடு கெட்ட பழத்தையும் வைக்கிறீர்கள்?” என திரேசா கேட்டார்.

“எல்லாம் ஒரு காரணம்தான், இந்த இரண்டு கூடைகளையும் அப்படியே கொண்டு போய் ஒரு இடத்தில் வை. நான் சொல்லும் போது எடுத்து வா” என்றார் தாய். திரேசா அப்படியே செய்தார்.

சில நாட்களுக்குப் பின் தாய் திரேசாவை மறுபடியும் அழைத்தார். அந்த பழக் கூடைகளை எடுத்து வரச்சொன்னர். பழக் கூடைகளை திரேசா எடுத்து வந்து தாயின் முன்னால் வைத்தார்.

அழுகிய பழம் வைத்த கூடையில் இருந்த பழங்கள் எல்லாமே அழுகிப்போய் இருந்தன. மற்றக் கூடையில் இருந்த பழங்கள் பழுதடையாது அப்படியே இருந்தது. இதனைப் பார்த்த திரேசா வருந்தினார். நன்றாக இருந்த பழங்கள் கெட்டுப் போய்விட்டனவே என்று அவருக்கு அழுகையே வந்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.