(Reading time: 14 - 27 minutes)

யோ அம்மா ரொம்ப அழகான பேர் தான் எனக்கு வைத்து இருக்கீங்க .... யூ சீ மம்மி என்ன மாதிரி அழகா பிறந்தவே இப்படிதான் தேடி தேடி பேர் வைக்கவேண்டும் ..

உடனே சிவா நீங்கள் எனக்கு மட்டும் சும்மா  பேர் வைசீங்களா என சண்டை போட அம்மா .. குட்டி பொன்னே உங்க ரெண்டு பேர் பெரும் ரொம்ப யோசிச்சி தான் வச்சோம் உன் பெயருக்கான பொருள்  ,எந்த விஷயத்திலும்  தன்னிச்சையான உறுதி முடிவு எடுப்பவள் , சரியான வாயாடி   சிறந்த வணிக திறன் உள்ளவள் 

ஆடம்பரமான வாழ்க்கை மீது கொஞ்சம் நாட்டம் உள்ளவள் ... என்ன ரஞ்சிவிட உனக்கு கொஞ்சமே கொஞ்சம் பெருமை அதிகம் என கூற ... சிவா கோபித்து கொண்டாள் ... பிறகு அம்மா ஒரு அழகான சுடிதார் வாங்கிகொடுத்து சமாதானம் செய்தார்கள் 

இப்படி அம்மாவும் இவளும் பல நாட்கள் அமர்ந்து பேசியதுண்டு .... அம்மா இவளுக்கு பார்த்து பார்த்து துணி வாங்குவார் .... இவள் நிறத்திற்கு   பொருந்துவது  போல்தான் துணியின் நிறமும் அதை தைக்கும் விதமும் இருக்கும்.

கல்லூரி நாட்களில் இவள் தோழிகள் கூட இவள் உடுத்தும் அழகை ரசிப்பர் ... எங்களுக்கும் இப்படி அம்மா செலக்ட் பண்ண வில்லை என வருந்துவர் ......

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

கல்லூரி நாட்களை நினைக்கும்போது கண்ணீர் கண்களை மறைத்து ..அவனை சந்தித்ததும் அங்குதான் ..தெரிந்தே அவன் மனதை கொன்று புதைத்ததும் அங்குதான் ....

பழைய நினைவுகள் அவள் மனதில் தேனாய் தித்தித்தாலும் அவனை வருத்திய நினைவும் சேர்ந்து வரும் பொது அடி மனதில் வேதனை ரம்பமாய் அறுத்தது ...மனதில் சொட்டும் ரத்தத்துடனும் ... கண்களில் கண்ணீருமாய் எவ்வளவு நேரம் நின்றாள் என நினைவில்லை ..வெளியே  ஏதோ சத்தம் கேட்க நினைவு வந்தவளாய் ... முகத்தை கழுவி தலை சரி செய்து மீண்டும் வேலை பார்க்க சென்றாள் ...

அவளை பார்க்கும்போது சங்கீதாவிற்கு வருத்தமாக இருந்தது .... அவளின் ரணம் என்ன காயம் என்ன என்று அவள் அறிவாள் ஆனால் அதை சரி செய்யும்  மார்க்கம் தான் தெரியவில்லை ..

வேலை முடிந்து வீட்டிக்கு வந்த ரஞ்சி..தெருமுனை தாண்டும்போதே வீட்டை பார்த்துவிட்டாள்  ... வீடு ..இருட்டாக இருந்ததை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை சிவா கல்லூரி முடிந்து ரஞ்சி வரும் முன் வந்து விடுவாள் .... இந்த நேரம் படிக்க ஒன்றும் இல்லை என்றாள்... டிவி இல்லை மொபைல் கேம்ஸ் என்று ஏதாவது செய்வாள் ... சில நாட்க்கள் ஸ்நாக்ஸ் செய்கிறேன் என்று அடுப்படியை குப்பை ஆக ரணகள படுத்துவாள் ..

 பிரெண்ட்ஸ் கூட வெளியே போவதானாலும் போனில் தகவல் சொல்லிவிட்டுதான் செல்லுவாள் ... 

இன்னும் ஆறு வீடுகள் கடக்கவேண்டி இருக்க பொறுமை இழந்தவள் ..மொபைல் எடுத்து தன் தங்கைக்கு அழைத்தாள் .... மொபைல் சுவிட்ச் ஆப் என்று வந்தது.....இதயம் திக் திக் என்றது ..தங்கை விளையாட்டு பிள்ளை எனினும் மிகவும் பொறுப்பானவள் ....மொபைல் சார்ஜ் இல்லை எனினும் பிரெண்ட்ஸ் போனில் இருந்து அழைத்து தகவல் சொல்லி விடுவாள் ..

வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் காலையில் கண்ட கனவு அவளுக்கு அடி வயற்றில் கொடுத்த அவஸ்தை மீண்டும் வந்து ஒட்டிகொண்டது ..சில கனவுகள் நமக்கு ஏதோ ஒரு செய்தியை உணர்த்துகின்றன. அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்..... மீண்டும் மீண்டும் ஒரே கனவு அதாவது ஒரு கனவு அல்லது சம்பவம்  ஒருதடவை வந்திருந்தால், அதை ஒரு அறிகுறியாகக் கொள்ளலாம்.தனக்கு இந்த கனவு அடிகடி வருவதும் இப்போது நினைவு வந்தது ... அவள் இதை அவன் நினைவு தன்னை வருத்துகிறது என ஒதுக்கி இருந்தாள்  அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்... தான் கண்ட கனவுக்கு அர்த்தம் தெரிய வில்லை எனினும் ....ஏதாவது தவறு நடந்துவிடுமோ என்று உள்ளம் பதறியது ....

 வீட்டில் இருந்த நிசப்தமும் இருட்டும் ரஞ்சிக்கு பயத்தை கொடுத்தது ... பூட்டு நீக்கி உள்ளே ஆள் இருப்பதற்க்கான அறிகுறி தெரிந்தது ..பின் ஏன் விளக்கு எரியவில்லை ..... பூட்டு திறந்திருப்பதை பார்த்த நிம்மதி ஒருபுறமும் .... பயமும் கலக்கமுமாய் கதவை திறந்தாள் ..

உள்ளே ...............................

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:997}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.