(Reading time: 14 - 27 minutes)

தாய் திரேசாவை அருகில் அமரவைத்து மெதுவாய்ச் சொன்னார்... பார்த்தாயா? ஒரு அழுகிய அப்பிள் பழம் ஒரு கூடை நல்ல பழங்களை அழுக வைத்துவிட்டது. தீய நட்பும் இப்படித்தான். ஒரு தீய நட்பு ஒரு நல்ல குழுவையே நாசமாக்கி விடும். ஒரு மனிதனைக் கொல்வதற்கு ஒரு துளி விஷம் போதும்.

எனவே நட்பைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. உண்மை நண்பர்கள் உங்களுடைய சந்தோஷத்தின் போது காணாமல் போனாலும் உங்களுடைய துயர வேளையில் நிச்சயம் உங்களோடு இருப்பார்கள்.  உடுக்கை இழந்தவன் கைபோல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நல்ல நப்புக்கு இலக்கணமாகும். 

அம்மா அன்று கூறியது பசுமரத்து ஆணி போல் இவள் மனதில் பதிந்து போனது ...

சங்கீதா நட்பின் இலக்கனமானவள் தன் துயர் அறிந்து மருந்தாய் இருப்பவள் இன்றுவரை அவள் ரஞ்சி பற்றி ...அவளின் ரணத்தை பற்றி தன உயிரான கணவனிடம் கூட கூறவில்லை ..

ஒரு மென் புன்னகையுடன் தன்னை கண்ணாடியில் மீண்டும் பார்த்தாள் 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்...

முன் கூறியதுபோல் கொடி  இடை கொண்ட ரஞ்சி  உடுத்தி இருந்த  புடவை ஒரு நாற்பதுவயது பெரிய பெண்கள் உடுத்துவது போன்ற நூல் புடவை முக்கால் கை மற்றும் நெக் மூடிய காலர்  வைத்த கைச்சட்டை  .....உயர்த்தி போட்ட கொண்டை சரியாக திருத்தாத புருவம் பெரிதாக வைத்த போட்டு என இவள் வயசுக்கும் தோற்றத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது......

ஆனாலும் இவள் உடுத்தும் உடையில் எப்போதும் ஒரு நேர்த்தி உண்டு ..கம்பீரம் உண்டு  அது அவளுக்கு மற்றவர்களிடத்தில் ஒரு தனி மரியாதையை கொடுத்தது .. அதற்க்காகதனே அவளும் இவ்வாறு உடை உடுத்துகிறாள் .

மனம் தன் போல் தாயினிடத்தில் சென்றது அம்மாவுக்கு இவளை அழகுபடுத்தி பார்ப்பதில் எப்போதும் தனி விருப்பம் ... நினைவலை பின்னோக்கி செல்கிறது ....

ரஞ்சி உனக்கு தெரியுமா நீ உருவானதும் நான்  எல்லா சாமிகிட்டையும் பெண்குழந்தை தான் வேணும்னு வேண்டுதல் வைத்தேன் ... 

ஏன் அப்போதான் உனக்கு வீட்டுவேலை செய்ய ஆள் கிடைக்கும்னா ?????

அடி.... உதை பட போர பாரு .... பெண்குழந்தை எப்போதும் சந்தோசம் ... அவங்களுக்கு விதம்விதமா டிரஸ் பண்ணி பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் பெண்குழந்தை நம் தாயின் வடிவாய் நமக்கு தோன்றும் ...Survival of the fittest  என்று சூழலுக்கு ஏற்றாற்போல தங்களை வலிமையாக மாற்றிக்கொண்டு தப்பிப் பிழைக்கிற உயிரினங்களைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் குணம் பெண்களிடம் அதிகம் உண்டு..

 குழந்தை மீது எனக்கான பற்றுதல் வர மிக முக்கியமான காரணம் ஒரு கவிதை, என்று உள்ளே சென்று ஒரு பேப்பர் எடுத்து கொண்டு வந்தார்கள் அதில் 

என் சின்னஞ்சிறு

கண்மணிக்கு

அம்மா எழுதுவது ..

இன்றோடு நீ உதித்து

பதினோரு வாரம்..

என் வயிற்றில் நீ

இனியதொரு பாரம் ..!

தாயும் பிள்ளையும்

என்றாலும்

வாயும் வயிறும்

வேறாம்..!

சொல்பவர்கள்

சொல்லட்டும்

அவர்களுக் கென்ன

தெரியும் ..

உன் பசிக்கு

என்றே உண்டு

உன் உறக்கம்

மட்டும் உறங்கி

உனக்காகவே வாழும்

நம் ஓருடல் ஈருயிர் வாழ்வு ..!

முதன் முதலில்

உன்னை

மின் ஓவியமாய்

பார்த்தேன் நேற்று ..

பார்த்ததும் நெஞ்சுக்குள்

ஆசையின் ஊற்று ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.