(Reading time: 14 - 27 minutes)

பிரதி பலனாய்

நான் கொஞ்சம்

எதிர் பார்க்கவும்

செய்கிறேன் கண்ணா,

நீ ஆண் என்று

அறிந்ததில் இருந்து ..!

முட் கிரீடத்தை

சூட்டி விடுவேன்

என்று

நினைத்து விடாதே !

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

ஒவ்வொரு

பெற்றோருக்கும்

ஒரு சில கனவுகள்

இருந்தே தீரும்..

சிலர் சொல்கிறோம்..

சிலர் மறைக்கிறோம்..!

தலைப் பிரசவம்..

பிழைத்தால்

எனக்கிது மறு ஜன்மம்..

இல்லாவிடின் மறு ஜனனம் ..

என் உயிர் ஊட்டி

உன் உடல் வளர்க்கிறேன் ..

என் பிரதி பலிப்பாய்

இருந்திடுவாய்

என்பதால் அல்ல..

உனக்கொரு முகவரியுடன்

தனித்துவமாய் இருப்பாய் என்று !

எப்போதும் நினைவுகொள் ..

ஆணிற்குப் பெண்

என்றைக்கும் சமமில்லை..

தாயாகும் பெண்ணிற்கு

வேறொன்றும் ஈடில்லை ..

உடன்படு..அதனால் கடன்படு ..

உயிர்பட்ட கடனை

எல்லா உயிர்களிடத்தில்

சமத்துவ அன்பு காட்டி

வட்டியுடன் தீர்…!

நியூட்டன் , எடிசன்

ஐன்ஸ்டீன் அறிவுடன்

இருந்திடாமல் போனாலும்

புத்தர், காந்தி

தெரசா பணிவுடன்

என்றென்றும் வாழ்ந்திடு ..

போலித் தனம் தவிர்…

மொழி வெறி, இன வெறி

நிற வெறி , மத வெறி

ஏதும் இல்லாத புதியதொரு

உலகம் சமைத்திடு ..

அதில் சமாதானப்

பூக்களை

நாளும் வளர்த்திடு

பின்பு எனக்கு கொள்ளியிடு…..!

இதை படித்ததில் இருந்து எனக்கு குழந்தைகள் மீதான ப்ரியம் அதிகமானது குழந்தை என்பது வெறும்  சந்ததிகள் மட்டும் அல்ல நாம் பதிக்கும் சுவடுகள் அதனால் நாம் பொறுப்புடன் செயல் படவேண்டும்

அதிலும் பெண் என்பதில் தனி ப்ரியம் ..அதுமட்டும் இல்லை உனக்கான பேர் வைப்பதிலும் ரொம்ப யோசிச்சு வைத்தோம் 

பிரபஞ்சன் எனும் பெயர் சூறாவளியை குறிக்கும் ....அதுவே பெண்பால் ஆகும் பொது .. திடமான மனதும் கடின உழைப்பையும் ..நம்பிகையுமானவள்... என்றாகிறது ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.