(Reading time: 23 - 45 minutes)

தேபோல் குளக்கரையை நோக்கி மௌனத்தோடு இருவரும் நடந்தாலும்... இருவருமே அந்த தருணத்தை ரசித்தனர்... அந்த ஒத்தையடிப் பாதை வரும்வரை அவன் கைகளோடு தன் கையை கோர்த்து வந்தவள்... திடிரென்று தூரத்தில் வரூன் வருவதை பார்த்துவிட்டாள்... "இவன் எங்கே இங்கு வந்தான் என்ற அதிர்ச்சியில் பிருத்வியின் கைகளில் இருந்து தன் கைகளை உருவிக் கொண்டாள்...

திடிரென்று கையை உருவிக் கொண்டதும் அல்லாமல் எதையோ பார்த்து யுக்தா பயந்திருப்பது பிருத்விக்கு தெரிந்தது... பாம்பை தான் பார்த்திருப்பாள் என்று நினைத்த அவன்... "யுக்தா என்ன திரும்பவும் பாம்பை பார்த்தியா..." என்று கேட்டான்.

பிருத்வி வரூனை பார்க்கவில்லை என்று தெரிந்துக் கொண்டவள்... "பிருத்வி அந்த பக்கமா தான் பாம்பு போனமாதிரி இருந்தது... நான் இங்கேயே இருக்கேன்... நீங்க போய் தண்ணி எடுத்துட்டு வாங்க பிருத்வி... " என்று அவனை அனுப்பி வைத்தாள்...

அவனும் "சரி இங்கேயே நில்லு நான் தண்ணி எடுத்துக்கிட்டு வரேன்..." என்று அவளை விட்டுச் சென்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவன் சென்றதும் வரூன் வந்துக் கொண்டிருந்த திசையில் சென்றாள்... வரூனும் யுக்தாவை பார்த்து விட்டான்... யுக்தா அவன் அருகில் வந்ததும்... "ஹே யுக்தா.." என்று ஆச்சர்யத்தோடு அவன் அழைக்க.... அவன் கையைப் பிடித்துக் கொண்டு பிருத்வி திரும்ப வரும்போது அவன் பார்வையில் இவர்கள் படாத இடத்துக்கு வருனை அழைத்துப் போனாள்...

பின்... "வரூன் நீங்க எப்படி இங்க.." என்று கேள்வி கணைகளை தொடுத்தாள்.

"யுக்தா பிரணதி தான் கோவிலுக்கு வரச்சொன்னா... ஆனா இங்க வந்து கோவிலைப் பத்தி சொன்னதும் ஊருக்குள்ள உள்ள கோவிலை காட்டினாங்க... அப்புறம் கொஞ்சம் டிடெயிலா இந்த கோவில் பத்தி சொன்னதும் இந்த பக்கமா போகச் சொன்னாங்க... நல்லவேளை யுக்தா உன்னை பார்த்துட்டேன்... ஆமாம் கோவில் எங்க இருக்கு..." என்று அவன் பேச பேச பிரணதியின் பதட்டத்திற்கான காரணம் இவளுக்கு புரிந்தது.

"பிரணதி வரச்சொன்னா நீங்க வந்துடுவீங்களா வரூன்... இங்க உங்களை பிருத்வியோ இல்லை அத்தை மாமாவோ பார்த்தா என்னாகறது... உங்களை பத்தி என்ன நினைப்பாங்க... இதெல்லாம் யோசிக்கமாட்டீங்களா...

ஆமாம் இதப்பத்தி என்கிட்ட ஏன் சொல்லல... "

"பிரணா தான் இங்க வந்ததும் சொல்லிக்கலாம்னு சொல்லிட்டா.."

"அவளுக்கு தான் இதுல இருக்க சீரியஸ்னஸ் தெரியல... உங்களுக்குமா தெரியல... சரி உங்களை ஏன் இங்க வரச்சொன்னா.."

"ஜோடியா வந்து இங்கப் பூஜை பண்ணா தடையில்லாம கல்யாணம் நடக்குமாம் பிரணதி சொன்னா... அதான் வரச்சொன்னா..." என்று வரூன் சொன்னதும்... அப்படி எதுவும் இவள் கேள்விப்படவில்லையே பிரணதி ஏன் அப்படி சொன்னாள் என்று யோசித்த போது மதி அத்தை சொன்னது ஞாபகம் வந்தது.

"அது அப்படியில்லை வரூன்... கல்யாணம் முடிவானதும் ஜோடியாய் சேர்ந்து வந்து சாமிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதை பத்தி அத்தை சொன்னாங்க... அதை பிரணதி தான் தப்பா புரிஞ்சிக்கிட்டான்னா... நீங்களும் அதை கேட்டு வந்திருக்கீங்க..." என்று குறைப்பட்டாள்.

"எப்போ நாங்க காதலிக்க ஆரம்பிச்சிட்டோமோ அப்பவே எங்க கல்யாணம் முடிவானா மாதிரி தானே யுக்தா.." என்று வரூன் சொன்ன போது சிரிப்பதா இல்லை அழுவதா என்று தோன்றியது அவளுக்கு...

எப்படித்தான் லவ் பண்ணா இப்படியெல்லாம் டயலாக் பேசறாங்களோ என்று நொந்து கொண்ட அவளுக்கு தானும் பிருத்வி கூட சேர என்னன்னவோ வேண்டுதல்கள் சாமிக்கிட்ட வச்சது ஞாபகம் வந்தது... அதில் மனசு மாறிய அவள்...

"சரி இங்க எங்கேயாச்சும் உட்கார்ந்து இருங்க... பூஜை முடிஞ்சதும் ஊருக்குள்ள போவோம்... அப்புறம் எப்படி இங்க வர்றதுன்னு பார்க்கிறேன்... அப்போ உங்களுக்கு போன் பண்றேன்... நீங்க கோவிலுக்கு வாங்க..." என்று இவள் முடிக்கும் முன்

"யுக்தா போலாமா..??" என்று பிருத்வியின் குரல் பக்கத்தில் கேட்டது...

பிருத்வியின் குரல் கேட்டு இருவரும் அதிர்ச்சியாக திரும்ப... அவன் அவர்களுக்கு சற்று தள்ளி நின்றிருந்தான்.

இப்போது பிருத்வியிடம் என்ன சொல்வது என்று யோசித்த வரூன்... "பிருத்வி" என்று அவனை கூப்பிட... அவனுக்கு பதில் சொல்வதென்ன... அவன் முகத்தை கூட பார்க்காமல்... யுக்தாவை பார்த்து...

"யுக்தா பூஜைக்காக வெய்ட் பண்ணுவாங்க வா... என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான்... வரூனை ஒரு பார்வை பார்த்துவிட்டு யுக்தாவும் அவன் பின்னே சென்றாள்.

கொஞ்ச தூரம் நடந்து வந்ததும்... அங்கு வைத்திருந்த குடத்தை எடுத்துக் கொண்டு பிருத்வி முன்னே நடக்க... அவள் பின்னே நடந்தாள்.. அவனிடம் என்ன சொல்வது... வரூன் பிரணதி காதலைப் பற்றி சொல்லிடலாமா..?? என்று அவள் யோசித்துக் கொண்டு வர... வரூன் இங்கு வந்த காரணத்தைப் பற்றி யுக்தா ஏதாவது சொல்வாளா..?? என்று பிருத்வி எதிர்பார்த்து வந்தான்.

பின் கோவிலுக்கு வந்ததும்... பூஜை ஆரம்பித்தது... பிருத்வி கோபமாக இருப்பது யுக்தாவுக்கு புரிந்தது... பூஜையெல்லாம் முடிந்ததும் செந்திலின் உறவினர் வீட்டிற்கு கிளம்பினர். பிருத்வியிடம் எல்லாம் விஷயத்தையும் சொல்லிவிட்டே பிரணதியை கோவிலுக்கு கூட்டிட்டுப் போகலாமா என்று யுக்தா யோசித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.