(Reading time: 19 - 38 minutes)

சாப்பிட்டேன்… ஆஃபீஸ்ல தான் இருக்குறேன்…” என எதிர்முனையில் இருந்து பதில் வர,

“ஹ்ம்ம்… ஒகே…” என்றான் அவன்…

“ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?... என்னாச்சு?... எதும் ப்ராப்ளமா?...” என கேட்டதும்,

“அதெல்லாம் இல்லையே… நல்லா தான் இருக்குறேன்… இப்போ கூட சைட் அடிச்சிட்டு தான் இருக்குறேன்…” எனவும்,

“அதுதானே பார்த்தேன்… நீங்களாவது திருந்துறதாவது…” என்றவளின் வார்த்தையில் சிரித்தவன்,

“நான் என்ன தப்பு பண்ணினேன் திருந்துறதுக்கு….” எனக் கேட்க,

“அய்யோடா… ஆமா ஆமா, சொல்லிக்கிட்டாங்க… வெளியில… சரி வொர்க் எப்படி போகுது இன்னைக்கு…” என்ற கேள்வியில் சற்றே அமைதியாக இருந்தவன்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "மனம் கொய்தாய் மனோஹரி" - When U Marry a stranger...

படிக்க தவறாதீர்கள்...

“ஏதோ….” என சொல்லிவிட்டு, “உனக்கு…” என கேட்க,

“வழக்கம் போல தான்..” என சொன்னவள், “ஆமா அதென்ன ஏதோ?... என்னாச்சு அங்க?.. யாரும் எதும் சொன்னாங்களா?...” எனக் கேட்க,

“அதெல்லாம் எதுவுமில்லை… உனக்கு உன் ஆஃபீஸில் வேலை இல்லையா?... காலையிலேயே எனக்கு போன் பண்ணி பேசிட்டிருக்குற?... உன் மொக்கை ஆஃபீஸில் உனக்கு வேலையே தரமாட்டாங்களா யாரும்?...” என அவன் கேலி செய்ததும்,

“அதுதானே பார்த்தேன்… என்னையும் என் ஆஃபீசையும் குறை சொல்லலன்னா உங்களுக்கு தூக்கம் வராதே…” என கோபமாக பேசுவது போல் அவனிடம் காட்டிக்கொண்டாள் ஜானவி…

“இதப்பாருடா… அந்த மொக்கை ஆஃபீஸைப் பத்தி சொன்னதும் உனக்கு கோபம் வேற வருது… அட சீ… போ… நீயும் உன் ஆஃபீசும்… ஓடிப்போயிடு… சொல்லிட்டேன்….” என கலாய்க்க ஆரம்பிக்க,

“முடியாது… முடியாது… நீங்க வேணும்னா போங்க….” என அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் அவளுக்கு இன்னொரு அழைப்பு வர, யாரென்று பார்த்தவள்,

“அய்யய்யோ…… போச்சு… போச்சு…” என்றாள்…

“ஹேய்… லூசு… எதுக்கு புலம்புற?... இப்போ என்னாச்சு?...” என அவன் கேட்க,

“அக்கா தான் போன் பண்ணுறாங்க… கொஞ்ச நேரம் முன்னாடியும் பண்ணினாங்க… நான் என் ஃப்ரெண்ட் கிட்ட பேசிட்டிருந்தேன்… ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணியிருந்தா அவ… அதான் அக்கா போன் பண்ணப்போ எடுக்கலை… இப்போ மறுபடியும் கூப்பிடுறாங்க… இப்பவும் கால் வெயிட்டிங்க் அவங்களுக்கு வந்துருக்கும்… செத்தேன் நான்… என்னை கொல்லப்போறாங்க இப்போ…” என அவள் சொன்னதும்,

“ஹாஹாஹா…………” என அவன் சத்தமாக சிரித்தான் அவன்…

“இப்போ எதுக்கு சிரிக்குறீங்க நீங்க?... நானே கடுப்புல இருக்குறேன்… நீங்க வேற சிரிச்சு எரிச்சல் பண்ணாதீங்க…” என அவள் வெடிக்க,

அவன் மறுபடியும் அதே முறையில் சிரித்து அவளை வெறுப்பேற்றினான்…

சற்று நேரம் அமைதியாக இருந்தவள், “முடிஞ்சதா?... சிரிச்சு முடிச்சாச்சா?... இப்போ சந்தோஷமா?...” எனக் கேட்க, அவன் “ஆமா……..” என்றான்…

“மூஞ்சியப் பாரு… ஃப்ரெண்ட் கஷ்டப்படுறேன்… இதுல சிரிப்பு வேற…” என அவள் ஆதங்கப்பட,

“உன்னை நான் சிரிக்க வேண்டாம்னு சொன்னேனா?... வேணும்னா நீயும் சிரி…” என அவன் மீண்டும் சிரிக்க,

“உங்களை நான் அப்புறமா பேசிக்கிறேன்…” என்று பல்லை அவள் கடிக்க,

“பேசிக்கோ… பேசிக்கோ… போ… போ… கிளம்பு காத்து வரட்டும்…” என்றான் அவன் அவளை வம்பிழுத்தபடி…

“நான் கோபமா கிளம்புறேன்….” என அவள் சீரியசாக சொல்ல,

“இன்னும் நீ கிளம்பலையா?...” என்ற பதிலில், “மூஞ்சி…..” என திட்டிக்கொண்டே

“வைக்கிறேன்… போங்க…..” என அழைப்பை கட் செய்தாள், அங்கிருந்து அடுத்த பதில் வரும் முன்னர்…

அவளுக்கு தெரியும் அங்கிருந்து அடுத்து என்ன பதில் வரும் என்று… சரி என ஒற்றை பதிலில் அவளை மேலும் வெறுப்பேற்றுவான் அவன்…

“லூசு… மூஞ்சி… ஓழுங்கா பேசுதா பாரு… எப்பப் பாரு ஒன் வேர்ட் ஆன்சர் பண்ணிகிட்டு…” என அவள் புலம்பிக்கொண்டிருக்க, அவளருகில் இருந்து அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த ஜனனி,

“என்னடி?... எதுக்கு இப்படி புலம்புற?...” என்றதும்,

“என்னை கலாய்க்குறதே ஒருவேலையா வச்சிட்டிருக்கார்டீ… பிசாசு… சரியான கேடி….” என அவள் மீண்டும் அவனை திட்ட,

“அப்பாடி இப்போதான் எனக்கு சந்தோஷமா இருக்கு…” என்றாள் ஜனனி…

“சந்தோஷமா?... ஏன்?...” என முறைத்துக்கொண்டே கேட்ட ஜானவியிடம்,

“பின்னே என்னை நீ கலாய்க்குறல்ல… அப்போ உன்னை இன்னொருத்தர் கலாய்க்கும்போது நான் சந்தோஷம் தான படணும்…” என சொன்னதும், பட்டென்று அவள் முதுகில் ஒங்கி ஒன்று வைத்தாள் ஜானவி…

“ஸ்….. பிசாசே… வலிக்குதுடி….” என்றபடி ஜனனி கத்த,

“நல்லா வலிக்கட்டும்…” என்றபடி அவளை முறைத்தாள் ஜானவி…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.