(Reading time: 19 - 38 minutes)

ந்த நேரம் பார்த்து, சரயூ போன் வர, ஜானவி முழித்தாள்… அவள் முழியை வைத்தே, “யாரு அக்காவா?... யூ என்ஜாய் ஜானி பேபி…” என்றபடி தன் வேலையை அவள் பார்க்கத் தொடங்க,

மெல்ல அழைப்பை ஏற்று ஹலோ சொன்னவளை பொரிந்து தள்ளினாள் சரயூ…

“போன் பண்ணா போன் எடுக்க மாட்டீயோ நீ?.. அக்கா நான் பேசிட்டிருக்கேன்… அப்புறம் பேசுறேன்னு சொல்ல கூட முடியாதா மேடமுக்கு?.. அவ்வளவு பிசியா நீ?...” என அவள் கேட்க,

“அய்யய்யோ… அக்கா அப்படி எல்லாம் இல்லக்கா…” என்றவள் தன் தோழியிடம் பேசிக்கொண்டிருந்ததை சொல்லிவிட்டு அவளை சமாதானம் செய்ய, சரயூவும் மனம் இறங்கினாள்…

“சரி… ஜானு… நான் இன்னைக்கு சாயங்காலம் கிளம்புறேன்… அதை சொல்லத்தான் போன் பண்ணினேன்…”

“என்னக்கா சொல்லுறீங்க?... அதுக்குள்ளயா?... நேத்து தான வந்தீங்க…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதித்யா சரணின் "சிவன்யா" - புத்தம் புது தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“ஆமா ஜானு… வேற என்ன பண்ண?... அவர் போன் போட்டு வர சொல்லுறார்… இரண்டு நாள் சொல்லிதான அனுப்பி வச்சேன்… இப்போ வான்னா வர வேண்டியதுதானன்னு கேட்குறார்…”

“அவர் சொல்லுறதும் சரிதானக்கா… பாவம் தனியா கஷ்டப்படுவார்ல… சாப்பாடெல்லாம் தனியா சமைச்சு சாப்பிட கஷ்டமா இருக்குமே…”

“உன் மாமா மேல அவ்வளவு அக்கறை இருந்தா நீ போய் சமைச்சு போடேன்….”

“நான் மாட்டேன்னு சொல்ல மாட்டேன்… பட் மாமாக்கு என் சமையல் பிடிக்குமான்னு தெரியாதே… அதனால எதுக்கு வம்பு?... நீங்களே சமைச்சு கொடுங்க… அதும் இல்லாம எனக்கே கொஞ்சம் தான் சமைக்க தெரியும்…”

“இப்படி பேசி எஸ்கேப் ஆகிடலாமுன்னு பார்க்குறீயா?.. போடீ போடீ…”

“ஹ்ம்ம்… அவர்கிட்ட கூட ஒருநாள் டைம் கேட்கலாம் தானக்கா…”

“கேட்டு பார்த்துட்டேன் ஜானு… அவர் மாட்டேன்னு சொல்லிட்டார்… இந்த இரண்டு நாள் அனுமதிச்சதே கடவுள் புண்ணியம் தான்….”

“ஹ்ம்ம்… மாமாக்கு உங்க மேல ரொம்ப பிரியம்க்கா… அதான் பாவம் அவரால உங்களை விட்டுட்டு இருக்க முடியலை…. பாவம் மாமா….”

“ஆமாடீ… ரொம்ப பிரியம் தான்… உன் மாமாவை நீதான் மெச்சிக்கணும்…”

“பொறாமைக்கா உங்களுக்கு… ஒழுங்கா என் மாமாவை நல்லா பார்த்துக்கோங்க… சொல்லிட்டேன்…”

“பொறாமையா?... ஆமாடீ… இது வேறயா?... எல்லாம் என் நேரம்டீ….” என அவள் அலுத்துக்கொண்டாள் சரயூ…

“சரிக்கா…. அப்பவே நாம பேசிட்டிருந்தப்போ, மாமா லைனில் வந்துட்டாங்கன்னு சொன்னீங்கல்ல,. என்னாச்சு… திட்டீனாராக்கா?...” என அதுவரை பேசிக்கொண்டிருந்த தொனியை மாற்றி ஜானவி கேட்க,

“வழக்கம் போல தான் ஜானு… யாருகிட்ட பேசிட்டிருந்த… என்ன ஏதுன்னு கேட்டார்… உன் பேரை சொன்னேன்… ஒன்னும் சொல்லலை… சப்போஸ் அப்போ அர்னவ்கிட்ட பேசிட்டிருந்தேன்னு சொல்லியிருந்தேன்னு வை, அப்பவே போனை கட் பண்ணிட்டு போயிருப்பார்…”

“ஹ்ம்ம்… அவர் உங்கமேல கொஞ்சம் பொசெஸிவ்… இல்லக்கா?...” எனக் கேட்க

“கொஞ்சம் இல்ல… நிறையவே பொசெஸிவ் தான்….” என்றாள் சரயூ…

“ஹ்ம்ம்… சரிக்கா… கிளம்பும்போது இன்ஃபார்ம் பண்ணுங்க… தனியாவா போவீங்க?... பசங்களோட அதும் சாயங்காலம்?...”

“ஆமாடா.. வேற என்ன பண்ண?... வர சொல்லிட்டாரே… போய்த்தான ஆகணும்?....”

“சரிக்கா… விடுங்க… பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க….” என்றவள், “சரிக்கா… கொஞ்சம் வொர்க் இருக்கு நான் அப்புறம் பேசுறேன்..” என்றபடி அழைப்பை துண்டிக்க,

மதியம் சாப்பிட வந்த அர்னவிடம், வாசந்தி விஷயத்தை சொல்ல, அவன் தானும் தமக்கையுடன் செல்வதாக கூற, இருவருக்குமே ஆச்சரியம் தான்…

“இல்லடா… நீ அங்க அவ்வளவு தூரம் வேலைக்கு லீவ் போட்டுட்டு… ஹ்ம்ம்… அதெல்லாம் சரி வராதுடா…” என அவள் தன் கணவனை நினைத்து சொல்ல,

“இல்ல சிஸ்… பரவாயில்லை… நான் லீவ் சொல்லிக்கிறேன்… நீங்க தனியா போக வேண்டாம்… நானும் கூட வரேன்…” என்றவன் அவள் பயத்தினையும் புரிந்து கொண்டு அங்கிருந்து நகர, சாயங்காலம் நால்வரும் கிளம்பி நான்கு மணி நேர பயணத்தில், மதுரை வந்திருந்தனர்…

அழைப்பு மணியோசை கேட்டு, கதவைத் திறந்தவ சரயூவின் கணவன், அர்னவை பார்த்துவிட்டு முகம் மாற, வா… என சொல்லிவிட்டு அகல, சரயூ தம்பியை பார்த்தாள்…

அவன் கண் மூடி இமைத்து உள்ளே போகலாம்… என சொல்ல, அவளும் தம்பியுடன் உள்ளே வந்தாள்…

பதினொரு மணி அளவில் அர்னவையும் படுக்க அனுப்பி வைத்துவிட்டு, குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு, தனதறைக்குள் அவள் நுழைந்ததுமே, பின்னிருந்து அவளை அணைத்துக்கொண்டான் அவளது அருமை கணவன் திலீப் மாதவன்…

“விடுங்க….” என அவள் விலக முயற்சிக்க,

“விடவா?... விளையாடுறீயா?... இரண்டு நாள்டீ.. இரண்டு நாள்… என்னை விட்டு இருந்திருக்க… என் நியாபகமே உனக்கு வரலையா?...” என அவன் கேட்க அவள் அவனையே பார்த்தாள்…

“சொல்லு… பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?...” என அவன் விடாது கேட்க,

“அதான் வந்துட்டேனே…” என்றாள் அவள்…

“ஓஹோ… அப்படியா?...” என்றவன் இரண்டு நாள் பிரிவில் அவளை இறுக்கி அணைக்க, அவளுக்கு வலித்தது… அவனின் முரட்டுத்தனம் அவளை வலுவிழக்கச் செய்ய அவள் அனைத்தையும் தாங்கி கொண்டாள்… சில மணி நேரத்திற்கு பிறகு, அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனை பார்த்துவிட்டு தன் கைகளை பார்த்தபோது, புரிந்தது அவளுக்கு அவளின் மீதான அவனது தேடல்…

அவள் போட்டிருந்த தங்க வளையல் நெளிந்து வளைந்து போயிருந்தது… அதை பார்த்து சிரிப்பதா?... இல்லை அழுவதா என தெரியாது அவனின் அருகில் படுத்து உறங்கி போனாள் அவள்…

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.