(Reading time: 19 - 38 minutes)

வ தான் சின்னப்பொண்ணு… புரியாமல் அடம் பிடிக்கிறாள்… சமாதானப் படுத்த வேண்டிய நீயும் இப்படி பிடிவாதம் பிடிச்சா எப்படிடீ… பாவம் பூஜா…” என்றபடி வாசந்தி சரயூவைப் பார்க்க, அவள் தனது கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, மகளிடம் பேச தயாரான போது,

“நீங்க என்ன சொன்னாலும் நாங்க வரமாட்டோம்மா… இங்கதான் இருப்போம்…” என்றாள் பூஜா…

“சொன்னா கேட்கமாட்ட நீ?...” மகளின் முன் ஆத்திரம் மிக அவள் கேட்டதும், பூஜா பயந்து போனவளாய்,

“அங்க போய் என்னம்மா பண்ணப் போறோம்?... இங்கேயே இருக்கலாம்மா… இன்னும் கொஞ்ச நாள்…” என சரயூவின் கைப்பிடித்து பூஜா கெஞ்ச,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

மகளின் ஆதங்கம் புரிய, பூஜாவின் பயமும், கெஞ்சலும் சரயூவை வருத்த, “இங்க பாரு பூஜா… உன் அப்பா தான் இப்போ போன் பண்ணி நம்மளை அங்க வர சொல்லுறார்… அம்மா போகணும்னு சொல்லலை… நீ கேட்டதும் அப்பா உன்னை இங்க கூட்டிட்டு வர்றதுக்கு ஓகே சொன்னார்ல… அதே போல அவர் இப்போ அங்கே கூப்பிட்டதும் நாம போகணும்ல…” என பொறுமையாக சொன்னதும்,

“ஹ்ம்ம்… ஆனா லீவ் தானம்மா இப்போ…” என்றாள் அவள் மீண்டும் அதே பிடிவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு….

“அப்பா பாவம்ல… இங்க அம்மா உனக்கு சமைச்சு தரேன்… அங்க அப்பாக்கு யாரு சாப்பாடு கொடுப்பா… அப்பா தனியா கஷ்டப்படுவார்ல… அப்பா கஷ்டப்பட்டா உனக்கு ஓகேயா?...” எனக் கேட்டதும், அந்த குட்டி பெண்ணால் தன் தந்தை கஷ்டப்படுவார் என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

“ஆமாம்மா… அப்பா பாவம்மா… நாம போகலாம்மா… நான் போய் பாப்பாகிட்ட சொல்லுறேன்ம்மா… அப்பாவ பார்க்க போறோம்னு….” என தாயிடம் சொன்னவள்,

வாசந்தியிடம், “பாட்டி… நாங்க இப்போ போயிட்டு இன்னொரு நாள் கண்டிப்பா வருவோம்… சரியா?... சீக்கிரம்… அப்பாவையும் கூட்டிட்டு வருவோம்…” என சிரிப்புடன் சொல்லிவிட்டு,

மீண்டும் தாயிடத்தில் வந்து, “சாரிம்மா… நீங்க எதுக்கு சொல்லுறீங்கன்னு தெரியாம உங்க மேல கோபப்பட்டுட்டேன்ம்மா… சாரிம்மா…” என பாவமாக சொன்ன மகளை சட்டென்று அணைத்துக்கொண்டவள், மெல்ல அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு,

“அம்மாவும் சாரி… உன்னை திட்டிட்டேன்ல… சாரிடா பூஜாம்மா….” என சொல்ல,

“இட்ஸ் ஓகேம்மா… நான் அடம்பிடிச்சதால தான திட்டினீங்க… இல்லன்னா திட்டியிருக்கமாட்டீங்க தான?...” என கேட்க, அவள் தனது மகளின் பேச்சினை ரசித்தாள்…

சிரித்தபடி, “சரி நீ போய் விளையாடு… அம்மா நம்ம துணி எல்லாம் பேக் பண்ணுறேன்…” எனவும், பூஜா தனது குட்டி தங்கையை பார்க்கச் சென்றாள்…

பூஜா செல்லும் வரை காத்திருந்த வாசந்தி, “என்னடி, மாப்பிள்ளை உடனே வர சொல்லிட்டார் இப்படி திடீர்னு…” எனக் கேட்க

“அவர் ஊருக்கு விட்டதே அதிசயம்… நேத்து சாயங்காலமே கூப்பிட்டிருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு ஒன்னும் இல்லம்மா…” என்றாள் சரயூ பட்டென…

‘என்னடி இப்படி பட்டுன்னு சொல்லுற?...” என குறைப்பட்ட வாசந்தியிடம்,

“வேற எப்படி சொல்ல சொல்லுறம்மா நீ?... கெஞ்சி கூத்தாடி தான் இங்க வர்றதுக்கு அனுமதியே வாங்கினேன் அவர்கிட்ட… பூஜாவையும், சின்னவளையும் காரணம் காட்டி தான் நான் இங்க வந்தேன்… அனுப்பவே முடியாதுன்னு தான் சொன்னார்… கடைசியில அவங்க இரண்டு பேரை காரணம் காட்டி தான் சம்மதமே வாங்கினேன்… இரண்டு நாள் தான்னு சொல்லி தான் அனுப்பினார் எங்கிட்ட… இப்போ வான்னு சொல்லுறார்… போய்த்தான ஆகணும்… புருஷன் வான்னு சொன்னாலும் போகணும்… போன்னு சொன்னாலும் போகணும்… அப்படித்தானம்மா?... அதை மீறி போகமாட்டேன்னு சொன்னா, உங்க வளர்ப்பை தான குறை சொல்லிடுவாங்க… அதும் இல்லாம பொண்ணா பொறந்தா இதுக்கெல்லாம் விதி விலக்கு கிடையாது தானம்மா உங்க அகராதியில…” என அவள் சொன்னதும் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாய்மூடிக்கொண்டார் வாசந்தி…

அதனை பயன்படுத்தி அங்கிருந்து அகன்றவள், ஜானவியிடம் விஷயத்தை சொல்லிவிடலாம் என்றெண்ணி போன் செய்ய, “வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறார்…” என்ற தகவல் வர,

“மணி 12 கூட ஆகலை… இவ யாருகிட்ட பேசிட்டிருக்கா… அதும் ஆபீஸ் டைம்ல…” என்றெண்ணியவள், சரி அவளிடம் அப்புறம் பேசிக்கொள்ளலாம் என நினைத்து தனது தம்பிக்கு அழைத்தாள்… ரிங்க் போய் கொண்டே இருந்ததே தவிர, எடுத்தபாடில்லை…

இதென்னடா கொடுமை, நம்ம போன் பண்ணும்போது மட்டும் பக்கிங்க போனே எடுக்க மாட்டிக்குதுங்க… என நொந்தபடி போனை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு துணியை பேக் செய்ய ஆரம்பித்தாள்…

ஒரு காலை தரையில் ஊன்றி, மறுகாலை அங்கிருந்த சுவற்றின் மீது வைத்து அதில் சாய்ந்திருந்தான் அர்னவ்….

மனதினுள் அந்த ஆள் பேசி சென்றதே ஓடிக்கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருக்கையில், அவன் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகில், ஒரு குட்டிப்பெண், விளையாடிக்கொண்டிருந்தாள் பொம்மையுடன்…

இவன் அவளையும், அவள் செய்கையையும் ரசித்துக்கொண்டிருக்க, அவனது மொபைல் சிணுங்கியது…

போனை கையில் எடுத்தவன், “இவ எதுக்கு இப்போ போன் பண்ணுறா?...” என கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு,

சரி, பேசுவோம்…. என்ற முடிவில், அதை அட்டெண்ட் செய்து “ஹ்ம்ம்… சொல்லு…” என்றதும்,

“சாப்பிட்டீங்களா?.. வொர்க்ல இருக்குறீங்களா?...” என்ற கேள்வி வர,

“ஹ்ம்ம் ஆமா… நீ?...” என எதிர்கேள்வி கேட்டான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.