(Reading time: 16 - 32 minutes)

ரு நாள் நீ அவனுக்கு அக்கா....மறு நாள் நீ அவளுக்கு அண்ணா! எப்படி எங்க ஐடியா...? என்ற சஞ்சையையும் ஆதியையும் பார்த்து ரொம்ப கேவலமா இருக்கு அண்ணாஸ்!' என்றனர்.

இதுக்குதான்.... இந்த பிரச்சனைக்கு தான்...நாங்க எப்பவுமே பெஸ்ட் ப்ரண்ட்ஸா இருக்கறதுனு முடிவு எடுத்து செயல்படுத்திட்டு வரோம்... நம்மளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டாங்க பாரு மச்சி...' என்றபடி விஷ்வா சித்ராவின் தோள் மீது கைப்போட்டு குறைப்பட...

ஆமாம்டா மச்சி...'என்று தாளம் வாசித்தாள் அந்த அன்புத்தங்கை!

சரி சரி... சீக்கிரம் போய் குளிச்சு ரெடியாகி வாங்க ரெண்டு பேரும்...' என்று அவர்களை விரட்டினார் தாமரை பாட்டி.

ஆச்சர்யம் + அதிர்ச்சி என்று கலவையாய் படி ஏறி செல்லும் விஷ்வாவையும் நவிராவையும் பார்த்தவாறு நின்றிருந்தாள் ப்ரீத்தி.

என்ன ப்ரீத்தி?? அப்படி பார்க்கறீங்க? எங்க 'விஷ்வா' அண்ணா சம ஸ்மார்ட் இல்ல?? பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குல்ல??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்... 

என்னது?? என்ன சொன்னீங்க? என்றாள் பதட்டமாய். விஷ்வா அவளை கண்டுக்கொள்ளாதவாறு நடித்தபடி பார்த்தும் பார்க்காமலும் படி ஏறி செல்பவனை பார்த்துத்தான் மனதில் பொறுமிக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி!

விஷ்வா... அண்ணாவை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குல்ல?? என்றாள் கயல் திரும்பவும்.

இல்ல...இல்ல... அப்படியேல்லாம் இல்ல...

என்ன இல்ல? எங்க அண்ணா பார்க்க நல்லா இல்லையா?? - மலர்

அய்யோ... நான் அப்படி மீன் பண்ணல...

என்னது மீன்னா? நீங்க மீன் எல்லாம் சாப்பிடுவேளா...எங்க வீட்டுல அப்படி ஒரு பேரே எடுக்ககூடாது... என்று அப்பாவி போல் கன்னத்தில் போட்டுக்கொண்டாள் சங்கு!

அய்யோ...நான் அப்படி சொல்ல வரலை... அத தான் மீன்னு சொன்னேன்...' என்று விளக்கம் அளித்தவளை இடைமறித்து கவின் 'அப்போ எங்க அண்ணாவை பத்தி சொல்லுங்க??' என்றாள்.

என்ன சொல்ல?? உங்க அண்ணனா அவரு??

ஆமா...எங்க அண்ணன் இல்லாம வேற யாரு? சந்தோஷ் அண்ணாவும் நவிரா அக்காவும் ட்வின்ஸ்.

அதிர்வது ப்ரீத்தியின் முறையானது. இன்னும் எத்தனை ட்வின்ஸ் இருக்கீங்க?' என்றாள்.

வெயிட் அண்ட் சீ!' என்றுவிட்டனர் கயல்விழியும் மலர்விழியும். சரியாக பத்து நிமிடத்தில் இறங்கி வந்தனர் விஷ்வாவும் நவிராவும். 

அது தன் விஷ்வாவின் வீடு என்று தெரியாத வரை அங்கே பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தாள் ப்ரீத்தி. வாய் ஓயாமல் பேசி அங்கே அந்த வீட்டில் இருந்தவர்களை ஒரு வழி செய்துக்கொண்டிருந்தாள். 

ஆனால் இப்போதோ எதிர்பதமாய் இருந்தது அவளது நிலை. இன்னைக்கு அவன் அண்ணன்களை தான் பார்க்கனும்னு சேலையில வர சொன்னான்....ஆனா அந்த பெருமாள் அவன் ஆத்துக்கே என்னை அழச்சிண்டு வந்துட்டார்... இதுல இவா வீட்டை பார்த்துண்டே இவா பையனை தனிக்குடித்தனம் அழச்சிண்டு போகனும்நு பெருமாள் கிட்ட மனு வேற வெச்சிண்டு இருந்தேன்.... நான் விஷ்வாக்கு பொருத்தமா இருப்பேனா?? இவா குடும்பத்துக்கு?? என்னை மாட்டுப்பொண்ணா ஏத்துப்பாளா??' என்று மனதிற்குள் மறுகிக்கொண்டிருந்தாள். 

அவளின் வருகையை செய்கைகளை மாடியில் தன்னறையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தான் சிவா.ப்ரீத்தி யார் என்று முன்னமே விஷ்வாவின் மூலம் தெரிந்ததால் அவளை கூர்ந்து கவனித்தான். டிடக்டிவ் ஏஜன்சி மூலம் விசாரித்து வேறு தகவல் பெற்று இருந்தான். எல்லாவற்றையும் இணைத்து பார்க்கும் போது ப்ரீத்தி "பூஞ்சோலை" குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாய் இருக்க மாட்டாள் என்றே தோன்றியது!

சிவாவும் ப்ரீத்தியும் தங்கள் சுய சிந்தனையில் இருக்க அவர்களை நிகழ் காலத்திற்கு ஈர்த்து வந்தது பாடல் சத்தம்.

மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்...

நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்...

என்று சித்ரா, கயல், மலர், சங்கு, கவின் திருப்பாவை பாட தொடங்கினர். 

அவர்களின் குரலில் லயித்து அமர்ந்திருந்தவளை நிகழ் உலகத்துக்கு கொண்டு வந்தது அவளது பாட்டி அலமேலு.

ஏண்டீ ஷ்ரவந்திகா... நீயும் தானே சங்கீதம் படிச்சிருக்க..ஒரு பாட்டு பாடேண்டீ!

இதில் கோர்த்துவிட்ட பாட்டியை பார்த்து முறைத்தாள் ப்ரீத்தி.

ஏண்டாமா ஒரு பாட்டு பாடேன்' என்றார் தாமரை பாட்டி.

தொண்டையை சரிப்படுத்திக்கொண்டு ஒரு கணம் கண்ணை மூடி அமர்ந்தவள் விழிகளுக்குள் வந்து நின்றான் அந்த மாயக்கண்ணன்...அடுத்து கண் திறக்க அவள் மனம் கவர்ந்த கள்வன் கண்முன்னே இருந்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.