(Reading time: 16 - 32 minutes)

ரு நிமிடம் யோசித்தவள் 'அலைபாயுதே கண்ணா...' பாட நினைத்தவள் ஏதோ தோன்ற பாடலை மாற்றி வேறு தேர்வு செய்தாள். 

என்ன தவம் செய்தனை யசோதா...

எங்கும் நிறை பரப்பரமம் அம்மா என்றழைக்க...' பாடலை பாடினாள். 

அதனை தொடர்ந்து…

காக்கை சிறகினிலே நந்தலாலா...

காக்கைச் சிறகினிலே நந்த லாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதடா நந்த லாலா

பார்க்கும் மரங்களேல்லாம் நந்த லாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதடா நந்த லாலா

கேட்கும் ஒலியிலெல்லாம் நந்த லாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்த லாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்த லாலா

காக்கைச் சிறகினிலே நந்த லாலா நின்றன்
கரிய நிறம் தோன்றுதடா நந்த லாலா' என்ற பாடலை மனமுருக பாடினாள். 

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

பாடி முடுத்து கண்களை திறந்தவள் கண்ணெதிரே கண்களில் வழியும் காதலுடன் இமைகாது அவளையே பார்த்திருந்தான் விஷ்வா என்றழைக்கப்படும் சந்தோஷ் விஷ்வநாதன்.

இருவரின் கண்களின் தீண்டலை கவனித்துவிட்ட சித்ரா அப்போது தான் உணர்ந்தாள் தன் தமயனின் காதலை! அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து அவள் பார்வையை ஓட்ட மற்ற தங்கைகளும் இவர்களைதான் பார்த்திருந்தனர்.

நிலைமையை சமாளிக்க சித்ரா நாலாயிர திவ்யப்பரபந்ததை வீணையில் மீட்ட ஆரம்பித்தாள். அவள் இசைக்க தொடங்க மற்ற தங்கைகளுடன் ப்ரீத்தியும் இணைந்து திவ்யப்பரபந்ததை பாராயணம் செய்ய தொடங்கினாள்.

பூஜை முடிந்து காலை உணவு முடிந்து ப்ரீத்தியின் குடும்பம் கிளம்ப தயாராய் நின்ற போது நேரம் காலை பத்தரை என்றது கடிகாரம். 

அவர்கள் காருக்காக வெளியில் வரவும் சித்ராவின் கைபேசி ஓலிக்கவும் சரியாய் இருந்தது. வீட்டினுள் லாண்ட் லைனும் அடித்துக்கொண்டிருந்தது. அண்ணன்கள் அனைவரும் அலுவலகம் கிளம்ப தயாராகிக்கொண்டிருக்க, பெரியவர்களும் பெண்களும் ப்ரீத்தி குடும்பத்தை வழியனுப்ப வாசலில் நிற்க லாண்ட் லைன் அழைப்பு ஏற்கப்படாமலே அடித்து ஓய்ந்துமுடிந்திருந்தது.

சித்ராவின் கைபேசி இப்போது கவின் மலரின் கைகளுக்கு சென்றிருந்தது. திரையில் ஓளிரும் பெயரைப் பார்த்தவள் சற்று ஓதுங்கி நின்று அழைப்பை ஏற்று "சொல்லுங்க 'லவ் பாய்' மாமா..." என்றாள் குறும்புடன்.

மற்ற நேரமாய் இருந்திருந்தால் இதற்கு பாந்தமாய் பதில் கொடுத்திருப்பான் 'லவ் பாய்'. ஆனால் இப்போது இருக்கும் பதட்டத்தில் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை அவனுக்கு!

கவி செல்லம்...நவி அக்கா எங்கடா? நீ அவ போன் வெச்சிருக்க?

ஏன்... எங்க கூடலாம் பேச மாட்டீங்களோ நீங்க??

அப்படிலாம் இல்லடா தங்கம்.... ரொம்ப ரொம்ப அர்ஜண்ட் நியூஸ் நவிகிட்டதான் சொல்லனும்.... அதனாலதாண்டா...

எங்ககிட்டவும் சொல்லலாம்.... நாங்களும் உங்க தாய்மாமா பொண்ணுதான்.... 

நீங்களும் தாய்மாமா பொண்ணுதான்டா.... ஆனா.... நீங்க சின்ன பொண்ணாச்சே! நவினு இல்ல... மத்த அக்கா யார்கிட்டவாது கொடுடா பட்டு!' என்றவன் குரலில் பதட்டம் இருந்தது.

என்ன நினைத்தாளோ சிறுமி விளையாட்டை விட்டுவிட்டு "சொல்லுங்க அன்பு மாமா... நான் சொல்லிடறேன் அக்காகிட்ட...வீட்டுக்கு கெஸ்ட் வந்திருக்காங்க...அவங்ககிட்ட பேசிட்டு இருக்காங்க..."

காலையில இருந்து யாரும் டிவி பாக்கலியா??'

ஏன் மாமா? சமந்தமேயில்லாம ஒரு கேள்வி தீடீர்னு கேட்கறீங்க?

பதில் சொல்லுடா கவி...

இல்ல மாமா... காலையில இருந்து எல்லாரும் சம பிஸி...

சரி... நீ போய் டிவி ஆன் செய்து... ஏதாவது ஒரு நியூஸ் சேனல் வை!

ஏன் மாமா... காலையிலேயே ஏதாவது ஆயிடுச்சா உங்களுக்கு?? இங்க நியூஸ் சேனல் வெச்சா நீங்க எப்படி அங்கயிருந்து பாப்பீங்க??'

டேய் கவி... இதுக்கேல்லாம் நான் அப்புறமா பதில் சொல்லறேண்டா... முதல்ல நீ போய் நியூஸ் சேனல் வை!

இங்கலீஷ் ஆர் தமிழ் ஆர் ஹிந்தி?

ஏதுவா இருந்தாலும் ஓகே மா... சத்தமா வை...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.