கொஞ்சம் உடனே கிளம்பி வாப்பா...மஞ்சு அங்கதான் வந்திட்டு இருக்கா..
.....
தேவா....நம்ம தேவிமா உன்கிட்ட பேசனுமாம்... இதோ கொடுக்கறேன்' என்று அவர் கூற
இத்தனை நேரம் அதிர்ச்சியில் இருந்தவன் தேவியின் பெயர் கேட்டதும்...
இல்ல பெரியப்பா... வேணாம்... நான் தாத்தா.. அப்பாகிட்ட எல்லாம் சொல்லிட்டு உங்ககிட்ட சொல்லறேன்...' என்று அழைப்பை துண்டித்தான்.
கார்த்திக் கிளம்பி கீழே வரவும்... ப்ரீத்தியின் குடும்பத்தை வழியனுப்பிவிட்டு குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் உள்ளே வரவும்...சரியாய் இருந்தது.
கார்த்திக்கை பார்த்த கவின் ஓடிச்சென்று அவனை கட்டிக்கொண்டாள்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
அண்ணா.. நம்ம....அண்ணி.... நீலா... அண்ணி... ' என்றாள் கண்களில் நீர்மணி திரண்டிட
நீலாம்பரி ஐஏஸ் வாஸ் கிட்னாப்ட்' என்ற பிளாஷ் நியூஸை பார்த்து நிலை தடுமாறி அருகில் இருந்த சோப்பாவில் சரிந்து அமர்ந்தார் சூர்யபிரகாசம்.
தாத்தா...அப்பா..மாமா...ஐயா... என்னங்க... என்றபடி எல்லோரும் அவரிடம் விரைய டிவியை பார்த்தபடி நின்றிருந்தான் கார்த்திக் சிவநாதன்.
கார்த்தி... என்று தாத்தாவே சுதாரித்து குரல் கொடுக்கும் வரை வைத்தக்கண் வாங்காமல் திரையில் வந்து கொண்டிருந்த பிளாஷ் நியூஸை பார்த்திருந்தான்.
ஆயிரம் எண்ண அலைகள் அவன் மனதினுள்.... இத்தனை வருடம் போட்டிருந்த கடின முகத்திரை கிழிந்துவிடுமோ...!!
தாத்தாவிடம் சென்று அமர்ந்தவன் அவரது குற்றம் சாட்டும் பார்வையை தாங்கிக்கொள்ள முடியவில்லை அவனால்!
டேய்... நான் ஏதோ மனசு உறுத்தலாவேயிருக்கு... என் பேத்தியை இங்கே கூட்டிட்டுவானு எத்தனை முறை சொன்னேன்... கேட்டியா?? இப்போ பாரு... நீ என்ன பண்ணுவ ஏது பண்ணுவனு எனக்கு தெரியாது! என் மதிக்குட்டி இங்கே வந்தேயாகனும்... உனக்கு ஒரு நாள் தான் அவகாசம்... அதுக்குள்ள என் மதி இங்கே வரனும்.... அவளை மீட்டு.. அவ காலில் விழுந்தாவது இங்கே கூட்டி வர...' என்று கட்டளையிட்டார்.
தாத்தா... அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது தாத்தா... நீங்க கவலைப்படாமல் இருங்க... உங்க உடம்புக்கு ஆகாது...
அது எப்படி அவளுக்கு எதுவும் ஆகாதுனு சொல்லற...என் உடம்புக்கும் எதுவும் ஆகாது...
தாத்தா...
சொல்லுடா?? இதுவரைக்கும் உங்களையேல்லாம் கண்டிக்காம விட்டது என்னோட தப்பு... உங்க அப்பாக்களோட தப்பு........
தாத்தா....
பேசாத... கார்த்திக்... சொன்னத செய்... அவ அம்மாவுக்கு... அவ தாத்தா பாட்டிக்கு என்ன பதில் சொல்லுவேன் நானு??
தாத்தா...' என்று அழைத்து செண்பகம் ஹார்ட் அட்டாகில் மதுரையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை கூறினான் ஆதித்யன்.
அடுத்த அதிர்ச்சியை ஏற்றுக்கொண்டு சற்று யோசித்தவர் ஆதியையும் கார்த்திக்கையும் பார்த்து....
என் பேத்திங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வந்து அவங்களோட சேர்ந்து வாழறதா இருந்தா... ஓத்துமையா குடும்பம் நடத்தறதா இருந்தா... இந்த வீட்டுல உங்களுக்கு இடம்... இந்த சொத்துல உங்களுக்கு பங்கு...இல்லைனா இந்த வீட்டுல உங்களை பார்க்ககூடாது...!
தாத்தா!' என்று உரைந்து நின்றனர் அண்ணனும் தம்பியும்!
எல்லாரும் சீக்கிரம் உங்க வேலையேல்லாம் முடிச்சிட்டு புறப்ப்டுங்க... மதுரை போறோம்...எல்லாரும்! நவிரா... பிளைட் டிக்கட்ஸ் எல்லாருக்கும் சேர்த்து புக் பண்ணு...' என்று ஆணை பிறப்பித்துவிட்டு தன் தம்பி சிவபிரகாசத்திடம் பேச விரைந்தார்.
கார்த்திக்கும் ஆதியும் தீவிர சிந்தனையில் இருந்தனர்.
என் நிலாப்பொண்ணுக்கு எதுவும் ஆகியிருக்காது!' என்று கார்த்திக்கின் உள் மனது கூறிக்கொண்டேயிருந்தது. அவன் எண்ணமோ...
'நல்லாதானேயிருந்தா... ரெண்டு நாளா காணலனு சொல்றாங்க... இல்லையே...! ஏதோ தப்பாயிருக்கே....என்ன ஆச்சு இவளுக்கு??'
அடுத்து என்ன? என்று ஆயிரம் கேள்விகள். விரல் நுனியில் அவனை ஆட்டுவிப்பவளையே காணவில்லை எண்ணும் போது... அவள் எண்ணம் வழியில் செயல்பட பழகிக்கொண்டவன்... சுயமாய் சிந்தித்து செயல்பட சற்றுத் திணறித்தான் போனான் கார்த்திக் சிவநாதன்.
அந்த திணறல்... அவனுக்கு வாழ்க்கையின் பல பரிமாணங்களை கற்றுக்கொடுத்தது!
தொடரும்...
{kunena_discuss:1000}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.