சரி சரி...மாமா... வைக்கறேன்... அவசரப்படாதீங்க...' என்றபடி உள்ளே விரைந்தாள். ஆனால் அவள் நேரம் டிவியின் ரிமோட்டை காணவில்லை. அதை துழாவிக்கொண்டிருந்தாள்.
மறுபடியும் லாண்ட் லைன் அடிக்க இந்த முறை மங்கா வந்து எடுக்கவும் மாடியிலிருந்து ஆதித்யன் இறங்கி வரவும் சரியாய் இருந்தது.
அழைப்பை ஏற்ற மங்கா ஒரு நிமிடம் மலங்க மலங்க விழித்தார்.
ஹலோ... யாருங்க லைன்ல இருக்கறது? ராமு அண்ணா இருக்காங்களா?? பிரகாசம் பெரியப்பா இருக்காங்களா?
....
ஹலோ... யாருங்க லைன்ல... ரொம்ப அவசரங்க... வீட்டுல யாராவது இருக்காங்களா?
ஹலோ... யாருங்க ஐயா வேணும் உங்களுக்கு? ராமு ஐயாவுங்களா???
ஹலோ... மங்காவா.. பேசறது??
ஆ..ஆமாங்க...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
மங்கா... நான் சுந்தரம் பேசறேன்... அண்ணா... இல்ல வீட்டுல யாராவது இருக்காங்களா??
ஐயா....நீங்களா...ராமு ஐயா வெளியில இருக்காருங்க... இதோ நம்ம ஆதி தம்பி பக்கத்துல இருக்காருங்க...'
யாரு மங்காமா லைன்ல??' என்றபடி வந்து ரிசீவரை வாங்கினான் ஆதித்யன்.
சுந்தரம் ஐயா தம்பி...' என்று மெல்ல கூறியபடி விலகி சென்றாள் மங்கா.
ரிசீவரை வாங்கியவன் முகம் இறுகியிருந்தது. முயன்று வரவழைத்த குரலில் ' ஹலோ... சொல்லுங்க பெரியப்பா... நான் ஆதி பேசறேன்' என்றான்.
அதற்குள் கவி அங்கே ரிமோட்டை தேடி எடுத்து டிவியை ஆன் செய்து நியூஸ் சேனலை வைத்தாள். திரையில் காட்டப்பட்ட புகைப்படத்தையும் பிளாஷ் நியூஸையும் பார்த்தவள் அதன் ஒலியை கூட்டிவிட்டு மொபைலை காதுக்கு கொடுத்தபடி வெளியே விரைந்தாள்.
நவி அக்கா..நவி அக்கா....' என்று அவள் கரம் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே விரைந்தாள்.
ஏண்டீ கவி... என்னதான் உனக்கு அவசரம்??? கையை விடு.... நானே வரேன்... என்ன பிரச்சனைனு முதல்ல சொல்லு...' என்று விலக முற்பட மற்ற தங்கைகளின் கவனமும் இவள் புறம் திரும்பியது.
அதிர்ச்சியுடன் கையில் இருந்த கைபேசியை நவியின் காதுக்கு கொடுத்தாள் கவின். 'அன்பு மாமா...'
அன்பா....?? லைன்லியா??
ஆமாம்' என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
சொல்லு மாம்ஸ்...' என்று நவி கூற...
போன் போட்டா எடுக்க மாட்டியா?? உன் அண்ணன்களும் எடுக்கல... என்ன தாண்டீ நினச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல???
என்ன ஆச்சு அன்பு? ஏன் இப்படி பேசறீங்க?
பேசறதோட விடறேனு பார்த்துக்க... என் அக்காவுக்கு ஏதாவது ஆச்சுனு தெரிஞ்சுது.... உன் அருமை அண்ணன்... கார்த்திக் தொலன்சான்... கேட்க ஆளு இல்லைனு நினச்சிட்டானா??
என்னடா பேசற நீ??' - நவிராவின் கோபம் அவளது முகத்தில் மட்டும் அல்லாது அவளது வார்த்தைகளிலும் வெளிப்பட்டது.
முதல்ல உள்ளே போய் நியூஸ் பாரு...' என்று அழைப்பை துண்டித்தவனது குரலிலும் ஆத்திரம் ஏறி அமர்ந்திருந்தது.
அங்கே ஆதி...
சொல்லுங்க பெரியப்பா... என்ன விசயம்?
டேய்... தேவா கண்ணா...
பெரியப்பா... வேணாம்... நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசினா...சரி... ஆனா நீங்க...
டேய் தேவா... வேண்டாம் டா... நான் உங்களை பத்தி பேச இப்போ போன் பண்ணலை...
....
அம்மாவுக்கு உடம்பு சரியில்லடா...
என்னது...??? பாட்டிக்கு என்ன??
ஹார்ட் அட்டாக்டா... மதுரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்கோம்... கொஞ்சம் சீரியஸ் ...
ஏன்?? என்ன ஆச்சு... திடீர்னு??
அது.. வந்து... நம்ம மதி...
ஏன்?? அவுங்களுக்கு என்ன??' என்றபடி அவன் டிவியின் புறம் திரும்ப செய்தியை பார்த்து ஸ்தம்பித்து நின்றான். அதே நேரம் நவி பதட்டமாய் உள்ளே விரைந்து வந்து டிவியை பார்த்தாள். பின்னேயே வந்த மற்ற தங்கைகளும் அவளுடன் சேர்ந்து உரைந்து நின்றனர்.
மதியை யாரோ கடத்திட்டாங்க டா தம்பி...
...
அம்மா விசயம் தெரிஞ்சு நெஞ்சு வலினு விழுந்துட்டாங்க...
...
உன்னையும் சிவாவையும் பார்க்கனும்னு சொல்றாங்க... வீட்டுல எல்லாரையும் பார்க்கனும்னு சொல்லறாங்க!
....