(Reading time: 23 - 46 minutes)

தாவது முக்கிய விஷயம் என யவ்வனிடம் சொல்லி…ஆசையா கிளம்புறவங்களை தடுத்துடக் கூடாதே…. என்பது இவர் எண்ணம்.

வெளிய கிளம்புறாங்க என்ற தகவல் கிடைக்கவும் இவன் கால்கள் தானாக தயங்கி நிற்க….அப்ப பவிக்கு லன்ச் கொடுக்க யார கூட்டிட்டுப் போக என்ற யோசனை இவன் மனதில்.. அப்படியே படியிலிறுந்து இறங்கி வந்து இவர்கள் ஹால் சோஃபாவில் அமர்ந்தான்.

மகனையே பார்த்துக் கொண்டிருந்தார் அல்லவா மரகதம்….. “என்ன எதுவும் பவி விஷயமா…?” என கேட்டு மகன் முன் குண்டு போட்டார் அவர்.

அவ்வளவுதான் அந்த கேள்வியில் சட்டென நடப்புக்கு வந்தான் இவன். ஆனாலும் இப்போது இவன் என்ன சொன்னால் சரியாக இருக்கும்…??? தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.

அம்மாவோட இந்த கேள்விக்கு முழு அர்த்தம் என்ன?

“அப்டின்னா பவிதான் நம்ம வீட்டுக்கு வர்ற அடுத்த பொண்ணு என்னப்பா?”

“……………”

“ஏன்பா எனக்கு தெரிஞ்சா நான் என்ன செய்துடுவேன்னு நீங்க எல்லோரும் நினைக்கிய….?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்... 

இதற்கு மேல் இவன் இனி எப்படி சொல்லாமல் இருப்பதாம்….???

நேராகப் போய் தன் அம்மாவின் பின்னிருந்து அவரை கழுத்தோடு கட்டியவன்…. “எப்டி மரகதம் டார்லிங் நீ இப்டி கலக்குற…. இருந்த இடத்துல இருந்துட்டே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுறுக்க….” என கொஞ்சியவன் அவரது கன்னத்தில் அழுத்தமாய் ஒரு ஆனந்த முத்தம்…

“மூக்கனாங்கயிறு இல்லாத முன்னூறு மாட கூட தனி மனுஷியா மேச்சுடலாம்…..மூனு மகங்கள வளர்க்கிறதுன்னா சும்மாவா….?” என்றவர் “போடா…..எனக்கா எல்லாம் தெரிஞ்ச பிறகு வந்து சொல்லுத…” அவனை சற்றாக தள்ளினாலும் அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி…. பிள்ளைக்கு எத்தனை வயதானால் என்ன….அம்மாவுக்கு அதன் முத்தம் அலாதி  ஆனந்தம் தான்….

அதோடு அவருக்கு அப்படியாய் இருக்குமோ என்ற சந்தேக சாயலில் நின்ற இந்த கல்யாண காரியம் உறுதிப் படும் பூரிப்பு…. பவிஷ்யா இங்கு வேலைக்கு வருவதென்பது அத்தனை எளிதான காரியமாக இருந்திருக்க முடியாது…. அவளது அப்பாவைப் பத்தி இவருக்குத் தெரியும்…..அப்படியானால் இங்கு இருந்து யாராவது அதற்கு முயற்சி எடுத்திறுக்க வேண்டும்…

யவ்வன் கல்யாணத்தின்போது அபயனின் பார்வை அவ்வப்போது கொண்டல்புரம் வந்திருந்த பவிஷ்யாவிடம் போய் வருவதும், அவள் மகிழ்ச்சியற்ற முகத்துடன் இவன் பார்வைகளை தவிர்ப்பதையும் பார்த்திருந்தார்…..

அபயன் பொதுவா பெண்களிடம் சற்று பேசி பழகுபவன்…..அப்படி ஏதுமாக கூட இருக்கலாம்….. இல்லாமலும் இருக்கலாம் என்றும் இருந்த அந்த நினைவு, பவி இன்று இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கும் விஷயத்தால் மகனளவில் இது வெறும் பேச்சளவு உறவு இல்லையோ என்ற நினைவை தந்து….

இங்கு உள்ள வர்றப்ப அவன் முகம் பார்க்கவும் இதை கேட்க தோன்றிவிட்டது….ஹாஸ்பிட்டால்ல இருந்து வர்றவனுக்கு அப்டி என்ன சிந்தனை…

“மம்மி டார்லிங்…..எனக்கே இப்பதான் தெரியும்….” என தொடங்கியவன்….”பழக்கம்னுலாம் எதுவுமில்ல மம்ஸ்…. யவி கல்யாணத்தப்ப… அதுவும் ரெண்டு தடவை பேசிறுக்கேன்…” என்றான்.

காதல் என்று சொன்னால் அதை எப்படி வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ள முடியுமில்லையா….? பவியை இவன் வீட்டில் எல்லோரும் மதித்தாக வேண்டும் இவனுக்கு…. ஆக விளக்கமாகவே சொல்லி வைக்க முனைந்தான்.

ஆனால் இப்போது மரகதம் இவனை கண்டனப் பார்வை பார்த்தார். ரெண்டு தடவை பேசுன ஒரு பொண்ணை சொந்த ஊர் வரை கொண்டு வருவதென்றால்…..என்ற கேள்வி வருகிறது தானே இவருக்கு….

“என்ன மம்ஸ் நீங்க இப்டி மார்டனாகிட்டீங்க…. அப்பாவ நேருக்கு நேரா பார்த்தது கூட கிடையாது நீங்க கல்யாணத்துக்கு முன்னால……இதுல இதுக்கு இப்டி ஒரு லுக்விட்டா நான் என்ன சொல்றதாம்…?” அதற்கு அவன் பதில் இப்படி இருந்தது….

“அதியோ யவியோ பத்து நிமிஷம் பொண்ண பார்த்தோம்……கல்யாணத்துக்கு சரின்னு சொன்னோம்னு சொன்னாங்கன்னா அத ஒத்துகிடலாம்….அவங்க குணம் அது….வினிய ஒருதடவை ராயகிரில வச்சுப் பார்த்துட்டு அவன் முடிவுக்கு வந்துட்டான்….நான் சரின்னு சொல்லிட்டு கல்யாணம் பேசலையா….? ஆனா நீ அவங்கள மாதிரி எதுலயுமே கிடையாதே…..”

மரகதம் தன் பக்கத்தை விளக்க….

போலியாய் பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு….”அப்போ அவங்கல்லாம் அஞ்சு நிமிஷத்துல சரியான முடிவு எடுக்கிற புத்திசாலி…..எனக்குன்னா முடியாதுன்னு சொல்றீங்களா மம்ஸ்…” என்றான் கொஞ்சலாய் இவன்.

“உன் முடிவ யாரு தப்புன்னா…? பவிக்கு என்ன குறச்சல்…? அவ நம்ம வீட்டுக்கு வந்தா உன்னவிட எனக்குதான் சந்தோஷம்….ஆனா நீ உன் மனசையும் புரிஞ்சுதான் முடிவுக்கு வந்தியான்னு கேட்கேன்….”

“பவிய ஒன்றர வருஷம் முன்னாலயே ஒரு டைம் பார்துருக்கேன்மா…அப்ப இருந்து இஷ்டம்தான்….ஆனா இப்பதான் அவட்ட பேசுனேன்…”

முதல் முதலில் அவன் தனது பவிப் பொண்ணைப் பார்த்த அந்த நிகழ்வை நினைத்துக் கொண்டே இப்படி சொல்லி வைத்தான் தன் அம்மாவிடம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.