(Reading time: 23 - 46 minutes)

ப்போது நீரா என இவர்களால் சுருக்கி அழைக்கப்படும் நீரதா ரஷ்யாவின் குர்க்‌ஸ் நகரில் மெடிசின் படித்துக் கொண்டிருந்தாள்….. நீரதா இவர்களது அப்பாவின் நெருங்கிய நண்பர் இமானுவேலின் மகள்.

ஒரே பெண் என்பதால் வீட்டில் செல்லம்…… இவர்கள் வீட்டிலும் அவளுக்கு படு சலுகை ஆரம்ப காலத்திலிருந்து…..பெண் குழந்தை ப்ரியையான மரகதத்திற்கு நீரா என்றால் உயிர்…. பக்கத்து பக்கத்து ஊர் என்பதால் சிறு வயதில் இவர்கள் வீட்டிற்கு அவள் அடிக்கடி வந்திருந்தாலும்…… ஒரு கால கட்டத்திற்குப் பின் அவளும் படிப்பில் முங்கிப் போக…..இங்கும் அதி யவி எல்லோரும் ஹாஃஸ்டல்…மற்றும் பள்ளிக்கு அலைந்து வரும் அபை….என அவளுக்கு கம்பெனி இன்றி போனதால் வருவதில்லை….

ஆனால் ஆண்டு தோறும் குழந்தைகள் அனைவருக்கும் விடுமுறை வரும் அந்த மே மாதம் மட்டும் இரு குடும்பமும் இணைந்து எங்காவது டூர் கிளம்பிப் போய்விடுவார்கள்…. இவர்கள் வீட்டு பிள்ளைகளே ஒன்று சேர்வது இந்த மே மாதம் மட்டும்தானே….ஆக அப்போது கூடவே வரும் நீராவும் இவர்களில் ஒருத்தியாகவே உணர்வுகளில் இணைந்து இருந்தாள்…. ஆனால் இவர்கள் ஊரில் இந்த நீரா என்று ஒருத்தி இருப்பது கூட பிறருக்கு சரியாக தெரியாது….

அபைக்கு அவள் எப்போதும் க்ளோஸ் ஃப்ரெண்ட்…. அது அவனது சுபாவம்…. ஆனால் எப்போதும் கேலியும் கிண்டலும் லூட்டியும் வால்தனமுமாய் வளைய வரும் அவள்  அதிபனிடம் எப்படி சரியத் தொடங்கினாள் என்பது தான் ஆச்சர்யம்.

அதி அவளுக்கு இந்த விஷயங்களில் நேர் எதிர்…. அதுவே அவளை கவர்ந்ததோ?? அவள் அதியை விரும்புவதாக முதன் முதலில் சொன்னது கூட அபயனிடம் தான்….

“ஐயையோ ஒரு அர லூசா எனக்கு அண்ணியா வரப் போகுது…” என இவன் பதில் கொடுத்தாலும்….அவளது விருப்பத்தில் இவனுக்கு எந்த எதிர்ப்பும் இல்லைதான்… அவள் குணம் இவனுக்கு தெரியும்….இளகிய அன்பு மனமும்தான்.

அப்போது அவள் சில மார்க்கில் இந்தியாவில் மெடிசின் சீட்டை இழந்து…..மெடிசின்தான் படிப்பேன் என பிடிவாதமாய்  நின்று……ரஷ்யாவில் சீட் வாங்கி படிக்க கிளம்பிக் கொண்டிருந்தாள். அந்த தருணத்தில் தான் அவள் தன் விருப்பத்தை வெளியிட்டதும்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“நீ படிச்சு முடிச்சுட்டு வரவும் வீட்ல சொல்லி இந்த மேரேஜ்க்கு அரேஞ்ச் செய்றது என் பொறுப்பு…” இவன் படு பொறுப்பாய் வாக்கு கொடுக்க நச்சென இவன் தலையில் வைத்தாள் ஒரு கொட்டு…

“டேய் சும்மாவே நான் ஒரு பேரக்ராஃப் பேசுனா, உங்க அண்ணா ஒரு புள்ளி அளவுள பதில் சொல்வாங்க….இதுல நான் அடுத்த நாட்ல வேற போய் உட்கார்ந்துகிட்டா…….என்னடா பேசுவாங்க…. அதுக்கு ஹெல்ப் கேட்டா…. நீ திரும்பி வந்த பிறகு கல்யாணம் செய்றதைப் பத்தி பேசுற….. உள்ளூர்ல இருந்துட்டு கன்னா பின்னானு மீட் பண்ணா சரியா வராதுதான்….. ஆனா நான்தான் அங்க போய்டுவேன்ல……அவங்களுக்கும் இதுல இஷ்டம்னு தெரிஞ்சுட்டு போனேன்னா கொஞ்சம் நிம்மதியா போவேன்ல…. “ என சற்று அதட்டலாய் ஆரம்பித்து கெஞ்சலாய் பாவம் போல் அவள் முடிக்க….

இவனுக்குமே அவள் கேட்பதை செய்து கொடுக்க வேண்டும் என தோன்றிவிட்டது….. என்ன செய்யலாம் என்ற சிந்தனையோடு வீட்டுக்கு வந்தால்…

“ நம்ம பிள்ளய நமக்கு தெரியாதா….. வெளிநாட்டுக்கு அனுப்புறோம்னு நீ ஏன் இவ்ளவு வருத்தப்படுற……படிக்க ஆசப்பட்டு பிடிவாதமா போறா…..நீருகுட்டி போனமா படிச்சமா திரும்பி வந்தமான்னு இருப்பா…..அவ வர்றப்ப இங்க நம்ம அதியும் வேலையில நிமிந்துறுப்பான்……உடனே கல்யாணத்தை முடிக்கப் போறோம்….இதுல என்ன இருக்கு” என நீராவின் அம்மா அன்னத்திடம் இவனது அம்மா மரகதம் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது எப்ப நடந்த ட்விஸ்ட் என சந்தோஷமாக உள்ளே நுழைந்தால்….. இவர்கள் வீட்டு ஹாலில் நீராவின் பெற்றோரும் இவனது பெற்றோரும் மட்டுமல்ல….அதியும் கூட அங்கு தான் இருந்தான்…. ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல்…வெகு அமைதியாய்….

இவனது அம்மா அதியிடம் சம்மதம் கேட்காமலெல்லாம் இப்படி ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுக்கும் ஆள் கிடையாது…. ஆக இந்த அமுக்குனியிடம் கேட்டு அவனும் சரின்னு தலைய ஆட்டி வச்சுறுக்கான்…..

வேகமாய் போய் அவசரமாய் அதிபன் அருகில் உட்கார்ந்த இவன் “டேய் எப்படா கவுந்த….?” என மெல்லிதாய் முனங்க..

அதற்கு பதிலாக அடுத்திருந்த யவி இவன் தலையில் வைத்தான் அடுத்த குட்டை…”ஏன்டா பெரியவங்க எல்லோருக்கும் இப்டி ஒரு ஆசை இருக்குன்னு உனக்கு தெரியாதோ” என முனங்கியபடி…

‘அடபாவீஸ் அப்ப இந்த விஷயம் தெரியாத ரெண்டே பேர் நானும் நீராவும்தானா’ என இவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும்….

“சரி சின்னவங்க எப்ப கவுந்தீங்க..அதை சொல்லுங்க அதுதான் இப்ப முக்கியம்….” என்று பாய்ண்டுக்கு வந்தான்…

“அம்மா வந்து நம்ம நீருவ உனக்கு பார்க்கலாம்னு ஒரு எண்ணம் இருக்குப்பான்னு சொன்னப்ப….இல்லையா அதி…” என அதுக்கும் யவிதான் பதில் சொன்னான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.