(Reading time: 23 - 46 minutes)

து அவ்வளவாக அபயனுக்கு பிடிக்கவில்லை அப்போது… காலேஜ் படித்துக் கொண்டிருந்த அவன் வயதுக்கு இது ஒன்றும் சரியாக படவில்லை…. நீரா இவனை விரும்பி கல்யாணம் செய்யனும்னு நினைக்கா….இவன்னா என்னமோ அம்மாவுக்காக தியாகம் செய்ற மாதிரி அவளை கல்யாணம் செய்யப்போறானா? என்றிருந்தது அவனுக்கு….

“டேய் அம்மாவுக்காகவாடா கல்யாணம் செய்யப் போற…நீரா பாவம்டா…” என்றான்

அதி இப்போது இவனை திரும்பி ஒருவிதமாக பார்த்தான்…. “டேய் கல்யாணம் ஃபிக்ஸ்‌ பண்ணி அடுத்து ஒரு மூனு மாசம் கேப்ல கல்யாணம் வச்சாலே கண்ண கட்டுதுன்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க……இதுல எனக்கு 6 வருஷம் வெயிட்டிங் பீரியட் ஃபிக்ஸ்‌ செய்துறுக்காங்க…..இதுல நான் பாவமில்லையா……விஷயமே தெரியாம கிளம்பிப் போற அவ தான் பாவமா உனக்கு” என்றான்.

அதியின் இந்த பதில் இவனுக்கு திருப்தியாக இருந்தது தான்.

“அப்ப ஒன்னு செய்யலாம் …நீயே இந்த விஷயத்தை அவட்ட சொல்லிடு….அவளையும் ஈக்வலா பாவமாக்கி அனுப்பிடலாம்….….” அபயனின் அடுத்த ஐடியா இது…

அதிபனிடம் இருந்து இதற்கு வாய்க்குள் அடங்கிய சிரிப்பொன்று பதிலாக கிடைக்க…யவியோ” ஏன்டா அவ ரஷ்யன் முட்ட வாங்குறதுல உனக்கு என்னடா இவ்ளவு ஆச” என எகிறினான்.

அண்ணன் தம்பீஸின் அனைத்து கான்வெர்ஷேஷனும் சின்ன முனங்கல் குரலில் நடந்து கொண்டிருந்தாலும், அதுவரை தங்களுக்குள் சளசளத்துக் கொண்டிருந்த பெரியவர்கள் இப்போது பேச்சை நிறுத்தி இருக்க….

இந்த முனங்கிய எகிறல் கூட எல்லோருக்கும் தெளிவாக கேட்டு வைத்தது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“டேய் அபயா….நீரு குட்டிட போய் இதை இப்ப சொல்லி வச்ச….. அப்றம் அவ கல்யாணத்துக்கு உன்ன வர விடமாட்டேன் பார்த்துக்கோ…” என இப்போது மிரட்டியது இவனது அப்பா.

இவன் என்னைக்கு அப்பா பேச்சை மீற…?

அடுத்து வந்த நாட்களில் அவள் கிளம்பும் தினம் நெருங்க நெருங்க அவள் புலம்பல் அழுகையாக… இவனுக்கோ உண்மையை சொல்லவும் முடியாமல்…அதை மறைக்கவும் தெரியாமல்….. தவித்துப் போனான்.

ஆக அடுத்த ப்ளானைப் போட்டான்….. இவனத்தான அப்பா சொல்லக் கூடாதுன்னு சொல்லிடாங்க…..அதிய எதுவுமே சொல்லக் கூடாதுன்னு சொல்லையே….

அவனிடம் போய் விஷயத்தை சொல்லிவிட்டான்….

“ நாம எல்லோரும் விஷயம் தெரிஞ்சு சந்தோஷமா இருக்கோம்…. பாவம் அவ…. படிக்கன்னு பிடிவாதமா தான அங்க போறா…..அவ எமோஷனலி வீக்கா இருந்தா…இங்கயே ஒரு டிகிரி ஜாய்ன் செய்துட்டு உன் பார்வையிலேயே  இருக்கனும்னு நினச்சுறுக்க மாட்டாளா…? நீ விஷயத்த அவட்ட சொல்றதால அவளுக்கு நிம்மதிதான் வருமே தவிர அப்டில்லாம் படிப்பை விட்ற மாட்டா” என என்னமெல்லாமோ சொல்லி அதிபனை அவளிடம் இதைப் பற்றி பேச சம்மதிக்க வைத்தும் விட்டான்.

அவள் கிளம்புவதற்கு இரண்டு நாள் முன்பு அவளோடு பேசினான் அதிபன்…..

“படிக்றதுக்குன்னு ஆசைப் பட்டு போற அதை ஒழுங்கா செய்துட்டு வா….இல்ல மேரேஜ்ல இப்ப ஃபோகஸ் செய்யனும்னு நினச்சாலும் வீட்ல சொல்லிடு…இந்த படிப்பு ஐடியாவ ட்ராப் பண்ணிட்டு அதை கவனிக்கலாம்….எதுனாலும் ஒன் அட் அ டைம்…ரெண்டையும் சேர்த்து ஹேண்டில் செய்ய நினைக்காத சரியா வராது” என….

நீராவுக்குமே தேவைப் பட்டது இந்த ஒரு கேரண்டி தானே…சந்தோஷமாகவே கிளம்பிப் போனாள் அவள். அடுத்துமே ரஷ்யாவிலிருந்து இவனிடம் பேசுவாளே தவிர அதியும் அவளும் பேசிக் கொள்வது கிடையாது…

வருடம் ஒரு முறை 40 நாள் லீவில் இந்தியா வரும் போது…..ஒரு முறை அவள் வீட்டில் இவர்கள் குடும்பத்திற்கு விருந்து இருக்கும்…அப்போது அதியும் கூட வருவான்…. இவனையும் யவியையும் கூட வைத்துக் கொண்டு பொதுவாக பேசுவது போலதான் அதிபனிடம் பேசுவாள் அவள்…..

அப்படித்தான்  வருடங்கள் போய்க் கொண்டிருந்தன….. ஆனால் பேசிப் பழகினால் கூட காதல் அழியும் போலும்…..இப்படி இலை மறை காயாய் இருப்பது வளருமோ…?

அதி இங்கு அவள் வருகை நெருங்கவும் அந்த ஹாஸ்பிட்டலை கட்டினான்…. அந்த வருடம் கிளம்பும் போது ஏனோ நீரா “இந்த டைம்மாவது நீங்க ஏர்போர்ட் வாங்க…..” என அதியை சென்னைக்கு வழி அனுப்ப அழைத்தாள்…

அந்த முறை அவளை சென்னையில் கொண்டு வழி அனுப்பியது இவனும் அதியும்தான். மூன்று பேருமாய்தான் கார் பயணம். அதியும் இவனும் மாறி மாறி ட்ரைவ் செய்ய, பின் சீட்டில் இருந்து பெரும்பாலும் இவனிடம் தான் பொறிந்து கொண்டிருந்தாள் அவள்…

அதியிடம் அவ்வப்போது ஒன்றிரண்டு…ஆனாலும் அவனுடன் பேசும் போது மின்னிய அவள் கண்கள் இன்று கூட இவனுக்கு ஞாபகம் இருக்கிறது….

ஏர்போர்ட்டில் பார்க்கிங்கில் காரை நிறுத்தும் போது அந்த மோதிரத்தை நீட்டினாள் அதிபனிடம்…. இவன் கண் முன்னாகத்தான்…..

”உங்களுக்குன்னு டிசைன் செய்தேன்…..”தயக்கமாக அவள் சொன்ன…..  அவள் முகத்தை ஒரு கணம் பார்த்த அதி தன் விரலை நீட்ட…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.