(Reading time: 23 - 46 minutes)

கார் கதவை திறந்து கொண்டு இவன் இறங்கிவிட்டான்…..

“டேய் கல்யாணத்தப்பவும் உங்க அண்ணா கைல ரிங் போடுவேன்டா….அப்பவும் இப்டி ஓடிப் போய்டுவியா….?” கேட்டபடி அடுத்த கணம் அவளும் வெளியே இறங்கினாள்…..

அன்றிலிருந்து அந்த மோதிரம் அதியின் கையில் எப்போதும் இருக்கும்….

அடுத்து சில மாதங்கள் செல்ல ஒரு நாள் திடீரென அவளிடமிருந்து அழைப்பு….. இவனுக்குத்தான்…..

“இப்பவே இங்க வாடா அபை…..என்னால தாங்கவே முடியலை….வர்றப்ப அவங்களையும் கூட்டிடு வா….என்ன இங்க இருந்து கூட்டிட்டுப் போய்டுங்க…..” என அழுகையில் வெடித்தாள் அவள்.

இவன் அவளுக்கு ஆறுதல் சொல்ல முனைந்தானானால் அருகிலிருந்த அதி இவர்கள் இருவருக்குமாய் விசாவுக்கு வழி தேட ஆரம்பித்தான் அந்த நிமிடமே….

ஆக அப்படித்தான் அடுத்த சில தினங்களில் அண்ணன் தம்பி இருவரும் மாஸ்கோ போய் நின்றது….  அங்கிருந்து ஏறத்தாழ 500 கிமீ தூரத்தில் இருக்கிறது குர்ஸ்க்…..

குர்ஃஸ்கில் ஏர்போர்ட் இருந்தாலும் அங்கு செல்லும் ஃப்ளைட்டுகளின் எண்ணிக்கை மிக சொற்பம்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்... 

ஆக இவர்கள் அவசரத்திற்கு அது எதுவும் அமையவில்லை….. ஆனால் மாஃஸ்கோவிலிருந்து டாக்சிகள் குர்ஃஸ்க்குக்கு சென்று கொண்டிருந்தன….. மூன்று பேராய் ஷேர் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்…

அப்படி ஒரு டாக்சி கிளம்ப தயாராய் இருக்க…அதில் ஒரு நபருக்கு மட்டுமாய் இடமிருக்க….அதியை அதில் அனுப்பிவிட்டு…

இவன் அடுத்து வேறு டாக்சி அல்லது பஸ் ட்ரெய்ன் எதிலாவது செல்வது என காத்திருந்தான்.

அப்போது கிடைத்த பஸ்ஸில் இவன் பயணம் செய்ய…..ஒரு நூறு கிலோமீட்டர் கடந்த நிலையில் பஃஸ் எதற்காகவோ ஒரு இடத்தில் நிற்க….. அவசர அவசரமாய் ஓடி வந்து ட்ரைவர் புறம் நின்று எதையோ கேட்டாள் அவள்….

அப்பொழுதுதான் அவளை முதன் முதலாக பார்த்தான் இவன்…. இவனது பவிப் பொண்னு… வெள்ளையில் சிவப்பு திட்டுகள் அங்கும் இங்குமாய் இருந்த ஒரு உடை…..அதன் மேல் கறுப்பு ஜெர்கின்…..அப்படித்தான் அவள் நின்று கொண்டிருந்தாள்…

அவள் ரஷ்யனில் பேசினாலும் பஸ்ஸில் ஏற அனுமதி கேட்கிறாள் எனபது அவள் உடல் மொழியிலிருந்து இவனுக்கு புரிய…

கட்டைக் குரலில் மொட்டையாய் மறுத்தார் ட்ரைவர்…. அவள் அழுதுவிடுவாள் போல கெஞ்சினாள்….

சுற்று முற்றும் பார்த்தான் இவன்….கண்ணுக்கெட்டிய தூரம் வரை….அந்த நீள ரோடு… அதன் இரு புறமும் காய தொடங்கி இருந்த அந்த ஒரு ஜான் உயர புற்கள்…..அதில் அங்கங்கு கொட்டிக் கிடக்கும் பனி…

மற்றபடி யாருமில்லை…..எதுவுமில்லை….

இப்பொழுது எதையோ சொல்லியபடி இவனது பஸ்ஸை ட்ரைவர் நகர்த்த….. சட்டென இறங்கிக் கொண்டான் இவன்….

தொடரும்!

Episode # 22

Episode # 24

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.