(Reading time: 16 - 32 minutes)

ப்போ எனக்கு அது சரின்னுதான் தோணிச்சு.. ஏன்னா.. ஏற்கனவே அவள் கணவனை விட்டு இருக்கிறாள், குழந்தைக்கு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.. அதனால் பொறமை ஏற்படும் என்று எல்லாம் சொல்லி குழந்தை பார்க்க வந்தவங்க கஷ்டப்டுதினாங்க... இப்போ உடம்பு சரி இல்லை என்றால் அதற்கும் அவளை எதாவது சொல்லி கஷ்டபடுத்துவாங்க ..அதோட என்னதான் நம்ம பொண்ணுங்க தான் என்றாலும் இவளுக்கு உள்ள பாசமும், பொறுப்பும் மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் குறைவுதான். அவங்க சொகுசு குறையக்கூடாதுன்னு பார்ப்பாங்க.. இவளை கூட்டிகிட்டு வந்து அவங்களும் இவளை எதாவது சொல்லிட கூடாதுன்னு யோசிச்சேன்.. அதோட.. நானும் மனுஷிதானே. .எத்தனை பேருக்கு செய்ய முடியும் சொல்லுங்க.. அதான் அவங்க வீட்டில் என்றால் அவங்க ரெண்டே பேர்தானே .. அங்கே அவள் ரெஸ்ட் எடுக்கட்டும்நு நினைச்சேன்.. அவங்க மாமியாரும் ஒத்துக்கவே தானே நானும் விட்டுட்டேன்.. “

“அங்கே தான் தப்பு பண்ணிடோமொன்னு தோணிச்சு .. அவள் மயங்கி விழுந்தா சரி.. அது பெரிய ப்ரோப்லேம் இல்லை ஓகே.. ஆனால் அவளுக்கு அந்த அளவுக்கு என்ன பிரச்சினைன்னு யோசிச்சோமா? மாப்பிள்ளை வர நாலு வருஷம் ஆகும்ன்னு தெரிஞ்சுதான் கல்யாணம் பண்ணிகிட்டா.. சோ.. அவர் பிரிவு அவளுக்கு பெரிய விஷயம் இல்ல.. அத தாண்டி ஏதோ விஷயம் இருக்குன்னு யோசிச்சென்.. அதோட இன்னொரு விஷயம் .. இந்த ட்ரைனிங் முடிஞ்சு அவளுக்கு கூடுதல் பொறுப்பு தருவாங்கன்னா..  அவள் வேலை செய்யறது செயின் hospital.. எங்கே வேண்டும் என்றாலும் அவளை மாற்றலாம் அல்லவா... அப்போ அதுக்குதான் நம்ம யார் கிட்டயும் சொல்லலலியா? அப்போ அவ என்ன முடிவு எடுத்திருக்கா ? இத எல்லாம் யோசிச்சு தான் எனக்கு நெஞ்சு வலி வந்தது.. “

பிரயுவின் அம்மா யோசனையோடு அவரை பார்க்க, “ப்ரயு மாமியார் என்னை பார்க்க வந்த போது , நான் தூங்கறதா நினைச்சு ப்ரயு கிட்ட பேசினாங்க

“இங்க பாரு ப்ரத்யா.. இதுவரைக்கும் எப்படியோ.. நான் உனக்கு நல்ல மாமியார இல்லாம இருந்திருக்கலாம்.. ஆனால் என் பையனுக்கு நல்ல அம்மாவா இருந்திருக்கேன்.. இருக்கணும்ன்னு நினைக்கிறேன். இனிமேல் என் பையன் வாழ்க்கை நல்லா இருக்கனும். சும்மா உப்பு பெறாத விஷயத்துக்கு கோபபட்டு என் பையன கஷ்டபடுத்துதாத... உங்க அப்பா சரியனதுக்கு அப்புறம் அவனோட வந்து வாழ பார்” ன்னு சொன்னங்க..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "பார்த்தேன் ரசித்தேன்" - காதல் கிரிக்கெட்டில் சட்டம் இல்லை, ஒரு சாஸ்திரம் இல்லை, ரன்ஸ் எடுப்பது தான் வேலை...!

படிக்க தவறாதீர்கள்... 

அதுலேர்ந்து எனக்கு ஒரே யோசனையா இருக்கு பிரயுவை பத்தி..”

“நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கும் புரியுது .. அவ இங்க இருக்கிற நாட்கள்ல அவகிட்ட பேசி .. என்னன்னு தெரிஞ்சிக்கலாம்ங்க.. நீங்க கவலைபடாதீங்க.. அவ அந்த அளவுக்கு எல்லாம் யோசிச்சிருப்பன்னு தோனல.. பார்துக்கலாம் விடுங்க..”

வர்கள் பேச்சு முடியும் போது ஆதி யோசனையோடு வெளியே சென்றான்.. அவன் வந்தது யாருக்கும் தெரியவில்லை.

அவனின் எண்ணமெல்லாம் பிரயுவிற்கு என்ன பிரச்சினை.. ? ஆரம்பத்திலிருந்து நடந்ததை யோசித்தவன், அவன் பேசுக்காக மட்டும் அவள் கோபப்பட்டு பேசாமால் இருக்கவில்லை.. வேறு ஏதோ இருக்கிறது என்று புரிந்து கொண்டான். தன் அம்மா பேசியதை யோசித்தவன்.. இவள் அவர்களை எதிர்த்துக் கூட பேச மாட்டாளே.. பின் ஏன் அம்மா இப்படி பேசினார்கள்.. இதுவும் புரியவில்லை.

அவன் மனசாட்சி “ஏன்டா.. ஆதி.. இதையே இவ்ளோ லேட்டா புரிஞ்சிக்கிரையே? அவள் கிட்ட எப்போ பேசி.. அவளை புரிந்து சமாதான படுத்த போறே “ என்று கேட்க, உண்மையில் ஆதி பதில் தெரியாமல் முழித்தான்.

அவன் இதை எல்லாம் யோசித்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி பாதி தூரம் சென்றிருப்பான்.. அவன் போன் அடித்தது.. ப்ரயு வீட்டில் இருந்து .. தான் வந்தது அவர்களுக்கு தெரிந்து விட்டதோ என்ற யோசனையோடு எடுத்தான்.. போனில் வந்த செய்தியை கேட்டவன் அப்படியே.. தன் மாமனார் வீட்டிற்கு வண்டியை திருப்பினான்.

அங்கே வீட்டில் மாமியார் பதறிய படி நிற்க, தரையில் மயங்கி கிடந்தாள் அவன் மனைவி ப்ரயு..

“அத்தை என்ன.. ஆச்சு ?

“தெரியல மாப்பிள்ளை.. அவங்க அப்பாக்கு சாப்பாடு குடுத்துட்டு போனாள். அவர் சாப்பிட்டு, மாத்திரை எல்லாம் கொடுத்துட்டு வந்தேன்.. இவ ஹால் லே மயங்கி கிடக்கிறா.. நான் தண்ணி தெளிச்சேன் எழுந்துக்கல.. பயந்து உங்களுக்கு போன் பண்ணேன்.. “

அவனும் “ப்ரயு.. ப்ரயு.. “ ன்னு கூப்பிட்டு பார்த்தான்.. கை கால் தேய்த்து விட்டான்.. அவள் கண் திறக்கல...

“அத்த .. hospital கூட்டிட்டு போய்டலாம்.. நீங்க கால் டாக்ஸி போன் பண்ணுங்க..” என,

“நான் ஏற்கனவே பண்ணிட்டேன்.. இன்னும் ஐந்து நிமிஷத்துலே வந்துரும்.. “ என அவர் கூறும் நேரம், டாக்ஸியும் வந்து விட, இவன் பிரயுவை பின் சீட்டில் கிடத்தினான்.

பின்னாடியே வந்த ப்ரயு அம்மாவை, “அத்த.. மாமாக்கு தெரியுமா? “

“இல்ல.. மாப்பிள்ளை.. அவர் தூங்கிட்டார்.. “

“நீங்க அவர எழுப்ப வேணாம்.. நீங்களும் வீட்டில் இருங்க.. “

“இல்ல. .வீட்ட பூட்டிட்டு நான் வரேன்.”

“சொன்னால் கேளுங்க.. நான் பார்த்துக்கறேன்.. நீங்க மாமாவ பார்த்துக்கோங்க.. அவர் இப்போதான் hospital லேர்ந்து வீட்டிற்கு வந்துருக்கார்.. நான் அம்மாவை வர சொல்லிருக்கிறேன்.. அதோட காலையில் பக்குவமா மாமாகிட்ட சொல்லி கூட்டிட்டு வாங்க.. “ என்று விட்டு வண்டியை எடுக்க சொல்லிவிட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.