வெளியில் யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்தான். எல்லோரும் அவனிடம் என்னவென்று கேட்க, அவனுக்கு ஆறுதல் சொல்ல முயற்சிக்க, அவன் யாருக்கும் பதில் சொல்லவில்லை.
பிரியா அவனிடம் வந்து, “ஏன் அண்ணா ? அவளை விட உங்களுக்கு வேலை பெரிதா? இப்படி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்திருக்காளே.. அவள் எந்த அளவு வேதனை பட்டு இருந்தால், தனக்கு என்ன ஆனாலும் ஆகட்டும் என்று விட்டு இருப்பாள். ச்சே.. நானாவது அவளோடு தொடர்பில் இருந்திருக்க வேண்டும்.. “ என்று அங்கலாயக்க, பிரபா அவளை தன்னோடு அழைத்து சென்றான்.
“பிரபு.. அவள் இப்படி இருக்கிறாளே? அவள் நாளைக்கு கண் திறப்பாளா?”
“நம்பிக்கை வைடா. ரியா ... யாருக்காக இல்லை என்றாலும் ஆதிக்காகவது அவங்க நல்லபடியா வருவாங்க. “
“உங்க friend பத்தி பேசாதீங்க.. அவருக்கு வெளிநாடு போகணும் என்றால் அவர் மட்டும் போகட்டும்.. அதற்கு அவர் அம்மாவிற்கு துணைக்கு என்று கல்யாணம் பண்ணி, அந்த பெண்ணை விட்டு செல்வாரா? அப்படி அவருக்காக ப்ரயு செய்ததற்கு பலன் இதுதானா?” என்று எல்லாம் கோபபட,
“ரியா.. ப்ளீஸ் அவனை எதுவும் சொல்லாதே.. அவன் நிலைமை அப்படி. .இப்போ கூட அவங்களுக்காகதான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துர்க்கான்.. அவன் அவங்களுக்காக என்ன செஞ்சிருக்கான்னு உனக்கு தெரியாது... ?” என
“அப்படி என்ன செஞ்சாராம்?” என்ற ப்ரியாவிற்கு பதில் சொன்னான்.. பிரபா..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз…!
படிக்க தவறாதீர்கள்...
அவன் சொன்னதை கேட்ட பிரியா, ஆதியை பார்த்துவிட்டு
“எல்லாம் செஞ்சும் பிரயோஜனம் இருக்குமா பிரபா.. நீங்க சொன்னதை பார்த்தா ஆதி அண்ணாவும் பாவம் தான்.. அவளும் அதைதான் சொல்லுவாள். ஆனால் அவள் நல்லபடியாக வர வேண்டுமே.. “ என்று அழ,
பிரபா.. “நிச்சயம் நல்ல வருவாங்க.. நீ அழாதே..” என்று ஆறுதல் படுத்தினான்.
ப்ரயு கண் விழிப்பாளா? ஆதியை பார்த்து பேசுவாளா?
ஹாய்.. friends . இந்த எபிசொட் லே ... மெடிக்கல் டெர்ம்ஸ் பத்தி எதாவது .. சொதப்பியிருந்தேனா .. சாரி.. அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.. மத்தபடி எப்படி இருக்குன்னு கமெண்ட்ஸ் சொல்லுங்க..
அடுத்த எபிசொட் penultimate எபிசொட் இருக்கும் .. ரெண்டு எபிசொடில் கதை முடியும்
தொடரும்
{kunena_discuss:948}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.