(Reading time: 16 - 32 minutes)

ழி முழுதும்.. “ப்ரயு...ப்ரயு “ என்று அவள் கன்னத்தை தட்டுவதும், தன் நெஞ்சோடு சேர்த்து அணைப்பதுமாக வந்தான்.

அவள் வேலை பார்க்கும் hospital கே கூட்டி சென்று அட்மிட் செய்தான். அங்கே நல்ல வேளையாக பிரயுவை ஏற்கனவே பார்த்த  டாக்டர் இருக்க, அவளை உடனே அட்மிட் செய்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்து விட்டார்.

ஆதி என்ன செய்ய என்று புரியாமல் ஐ.சி.யு.. வாசலில் நின்று கொண்டிருந்தான். டாக்டர், நர்ஸ் வந்து வந்து போவது புரியாமல் .. திகைத்தான். வெறும் மயக்கம் தானே என்று எண்ண முடியவில்லை அவனால்.

டாக்டர் அவனிடம் “எத்தனை நேரமா மயக்கமயிருக்கா ப்ரத்யா?” என்று கேட்க,

“ஒரு அரை மணி நேரம் இருக்கும் டாக்டர்”

“ஒஹ்.. சரி நீங்க வெயிட் பண்ணுங்க “

“டாக்டர் என்னாச்சு.. ? எப்போ மயக்கம் தெளியும் அவளுக்கு ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“இப்போ எதுவும் சொல்ல முடியாது .. நீங்க வெயிட் பண்ணுங்க..”

இதை எல்லாம் கேட்ட அவனுக்கு எதுவுமே புரியவில்லை. அவனுக்கு யாரிடமும் சொல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

ஆனால் பிரயுவின் அம்மா, அவள் மற்ற இரு மகள்களுக்கு சொல்லியிருக்க அவர்கள் கணவன்மார் hospital வந்தனர். ப்ரயு மாமியாருக்கும் சொல்ல, அவரும் வந்து விட்டார்.

ஆதியின் தோற்றம் பார்த்து “ஆதி ..ஒன்றும் இருக்காது. போன முறையும் இப்படிதான் ஆகி.. மூன்று மணி நேரம் கழித்து விழித்தாள்.. அதனால்.. நீ கவலைபடாதே.. “ என்றார்.

அவன் சகலைகளும் “அண்ணா .. ஒன்னும் இருக்காது .. இங்கே வேலை செய்யறவங்கதானே .. டாக்டர்ஸ் நல்ல பார்த்துப்பாங்க.. அவங்களே உங்ககிட்ட விவரம் சொல்லுவாங்க.. “ என,

அப்போது தன் நண்பன் நினைவு வந்தது ஆதிக்கு ..

போன் எடுத்து “ஹலோ .. பிரபாகரன்.. சாரி தூங்கிட்டியா .. “ என்று வினவ ,

“சொல்லுடா.. என்ன விஷயம்..?”

“இல்ல.. உன் மனைவி .. “-----“ அந்த hospital வேலை செய்தாங்க தானே.. “

“ஆமாம்.. “ என

“எனக்கு .. ஒரு ஹெல்ப் வேணுமே.. என் மனைவிய இங்கே ஐ.சி.யூ வில் அட்மிட் பண்ணியிருக்கோம்.. எனக்கு எதுவும் சரியாய் புரியல.. யார் கிட்ட பேசலாம்ன்னு கேட்டு சொல்றியா?”

“டேய்.. என்னடா..  நான் அவள கூட்டிகிட்டு வரேன்.. நேர்லே பார்த்துக்கலாம் “

“இல்லைடா.. பாவம் அவங்கள நைட் லே disturb பண்ண வேண்டாம்’

“டேய். .என்னடா பேசற நீ.. ? ஒரு நாள் முழிக்கிறதால ஒன்னும் ஆகாது.. நான் இதோ கிளம்பிட்டோம் “

என்று அவன் போன் வைத்தான்.

அதற்குள் டாக்டர் “இன்றைக்கு அவள் மாத்திரை போட்டாளா?”

“என்ன டாக்டர்.. சொல்றீங்க.. ? எனக்கு எதுவுமே புரியல ?”

“ம்.. “ என்று அதிருப்தியோடு தலையாட்டி விட்டு சென்றார்.,

ஆதி ஒன்றும் செய்ய தோன்றாமல் அப்படியே நாற்காலியில் அமர்ந்தான்.

சற்று நேரத்தில் அவன் நண்பன் வர, “ஆதர்ஷ் .. “ என்று அழைக்க, நிமிர்ந்தவன்.. அவன் பின்னால் நின்று கொண்டிருந்த அவன் மனைவியை பார்த்தான்..

“thank god .. ப்ரியா.. நீயே வந்துட்டியா.. உனக்கு எப்படி தெரியும் ப்ரயு அட்மிட் ஆயிருக்கும் விஷயம்.. அத்தை சொன்னாங்களா?” என்று வினவ,

“அண்ணா.. பிரயுவா .. ? என்னாச்சு அவளுக்கு “

“ஆதி .. உனக்கு பிரியாவ தெரியுமா ? அவ தான் என் மனைவி..”

“அப்படியா... அவங்க உன் மனைவி ன்னு தெரியாது.. என் மனைவியோட தோழி... “

“அப்படினா.. பிரத்யுஷா சிஸ்டர் தான் உன் மனைவியா .. ஒஹ்..என்னாச்சுடா ..” என்று அவனும் வினவ,

அதற்குள் ப்ரியாவை பார்த்த டாக்டர் “ஹேய்.. ப்ரியா. பிரத்யாவ பார்க்க வந்தியா?”

அவரை பார்த்த பிரியா அதிர்ந்தாள்.. அவர் அந்த hospital நரம்பியல் மருத்துவர்.. அவரே வந்து பார்ப்பது என்றால், அவளுக்கு நெஞ்சம் பட பட என்று அடித்துக் கொண்டிருந்தது.

பிரியா டாக்டரிடம் விவரம் கேட்டுக் கொண்டே செல்ல, ஆதியும், பிரபாகரனும் தொடர்ந்தனர்.

“டாக்டர்.. என்ன ஆச்சு அவளுக்கு ?’

“ஹ்ம்ம்.. உனக்குத்தான் தெரியுமே.. அவள் மூன்று முறைக்கு மேல் மயங்கி இருக்கிறாள் என்று ?”

“இல்லை டாக்டர்.. எனக்கு தெரியாது.. என் கல்யாணத்திற்கு முன் ஒரு தடவை விழுந்தாள். ஆனால் உடனே விழித்து விட்டாள் தானே..”

“இல்லை.. ப்ரியா. நீ திருமணம் முடிந்து சென்ற பின் இரண்டு முறை நடந்து இருக்கிறது.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.