(Reading time: 16 - 32 minutes)

று ஏழு மாசத்திற்கு முன் இதே போல் நடந்த போது கண் விழிக்க நேரம் ஆனவுடன் .. எல்லா செக் up பண்ண சொன்னேனே. செய்தாள்.. ஆனால் வீட்டில் வெறும் பிரஷர் மயக்கம் என்று சொல்ல சொன்னாள். சரி அவளே கொஞ்ச நாள் கழித்து சொல்லட்டும் என்று நினைத்தேன். “

‘என்ன டாக்டர்.. பிரஷர் மயக்கம் தானே .. ? “ இது ஆதி ..

“இல்லை.. மிஸ்டர்.. ஆதர்ஷ்..  அவளுக்கு பிரஷர் அதிகமாகும் போது மூளையிலும், இதயத்திலும் ரத்த ஓட்டம் அதிகரித்து, அவளின் மூளை செயல்பாட்டை நிறுத்துகிறது. “

மூவரும் அதிர்ந்து விழிக்க, “இது அவளுக்கு தெரியுமா ?” என்று சந்தேகத்தோடு கேட்டான் ஆதி.

“தெரியும்.. அவளிடம் இதை பற்றி முழுதுமாக சொல்லி இருக்கிறேன்.. இதற்கு ட்ரீட்மென்ட் என்றால் நிம்மதியான உறக்கமும், தெளிவான மன நிலையும் தான்.. அதோடு தொடர்ந்து வேலை செய்யாமல் கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும். அவளும் கேட்டு கொண்டதோடு, இரவு நல்ல உறக்கத்திற்கு மருந்தும் கொடுத்து இருக்கிறேன். மேலும்.. அவளுக்கு என்ன பிரச்சினை என்ற கேட்ட போது ஒன்றுமில்லை என்று விட்டாள்.. நானாக ஒருவேளை அவள் கணவரை பிரிந்து இருப்பதால் இருக்குமோ.. என்று எண்ணி அவளை அவரிடம் நீ போ இல்லியா அவர இங்கே வர சொல் என்று கூட கூறினேன். ஆனால். இப்போ அவளுக்கு என்ன பிரச்சினை . ? அவள் கணவனும் வந்த பிறகு.. ?”

“இல்லை டாக்டர்.. அவரை பிரிந்திருப்பதால் அவள் அதிகம் பாதிக்கப்பட மாட்டாள். ஏன் என்றால் அது தெரிந்து தான் அவள் திருமணமே செய்து கொண்டாள். ஆனால் அவள் நிலையை பற்றியோ, இல்லை அவளை பற்றியோ யாராவது எதாவது சொன்னால் மனதை குழப்பி கொள்வாள்.”

“அதோடு .. இப்போ இரண்டு நாட்களுக்கு முன் அவள் அப்பாவிற்கு உடம்பு சரியில்லாமல் இருந்தார்.. அதுவும் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறன்.. ‘ என்றான் ஆதி.

“இப்போ அவள் எப்போ கண் விழிப்பாள் டாக்டர் “?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“தெரியவில்லை ப்ரியா.. நார்மல் மயக்கம் என்றால் இதற்குள் விழித்து இருப்பாள். ஒருவேளை .. இது இரவு நேரமாக இருப்பதால் உறக்கம் தொடர்கிறதோ என்னவோ? நாளை காலை வரை பார்க்கலாம்.. “

“அப்படி விழிக்கவில்லை என்றால் ?”

“அவளோ கோமாவிற்கு சென்றிருக்க கூடிய வாய்ப்பு அதிகம் “

இதை கேட்ட மூவரும் அதிர்ந்து நின்றனர்.

“லெட் us ஹோப்.. “ என்ற படி டாக்டர் கிளம்ப,

மூவரும் வெளியே வந்தனர்.

ஆதியின் முகத்தில் கண்ணீர் இறங்க ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்த வேதனை எல்லாம் வெடித்து வர, அழ ஆரம்பித்தான்.

பிரியா.. ஒரு பக்கம் அழ ஆரம்பிக்க, பிரபாவால், யாரை சமாதானபடுத்த என்று தெரியவில்லை.

ஆதி ..பிரியா வை அழைத்து “ப்ரியா.. என்னை ஐ.சி.யூவில் .. கொஞ்ச நேரம் அனுமதிக்க சொல்லேன் “ என்று கேட்க, ப்ரியாவும் அங்கே உள்ள சிஸ்டர் இடம் பேசிவிட்டு ஆதியை உள்ளே அனுப்பினாள்.

வெளியில் நின்றவர்களுக்கு பிரபாவும், பிரியாவும் விவரம் சொல்ல எல்லோருமே அதிர்ந்து விழித்தனர்.

ஆதியின் சகலைகள் ப்ரயு அம்மாவிடம் சொல்லலமா என்று யோசிக்க, பிரபாதான் இல்லை.. காலையில் சொல்லிக் கொள்ளலாம். என்று தடுத்தான்.

பிரயுவிடம் சென்ற ஆதி ,

“ப்ரயு.. கண்ணம்மா.. “ என்று அழ ஆரம்பிக்க, நர்ஸ் வந்து தடுத்தார்.

பிறகு தன்னை சற்று நிதான படுத்திக் கொண்ட ஆதி “ரதி.. நான் பேசுறது உனக்கு கேட்குதா.. ? ஏண்டா. .இப்படி இருக்க.. ? எங்கிட்ட என்ன கோபமா இருந்தாலும் காமிச்சுடு குட்டிம்மா.. நான் உன்கிட்ட என் அன்ப எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலம்மா.. ? உன்னோடு நான் இருக்கணும் .. உன்னை சந்தோஷமா வச்சிக்கணும் தானே நான் ஒரு வருஷம் முன்னாடியே இங்கே திரும்பி வந்தேன். என்னாலே இதுக்கும் முன்னாடி அந்த contract விட்டு வர முடியலம்மா.. நான் பண்ணது தப்புதான்.. போன தடவ வந்துட்டு உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணாதது, உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதது.. அதோட உனக்கு உடம்பு  சரியில்லன்னவுடன்னே உனக்கு என்ன பிரச்சினை ன்னு கேட்காமல், உன்ன திட்டனது எல்லாமே தப்புதான். அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை தருவியாடா..

நான் உன்னோட ஆதி தானே.. என்னை மன்னிக்க மாட்டியா..? எனக்கு நீ வேணும்டா.. என்னோட வாழ் நாள் முழுக்க என்னோட மனைவியா, friend ஆ .. எனக்கு எல்லாமா நீ வேணும் .. இதுக்கு மேல என் அன்ப உனக்கு எப்படி சொல்ல தெரியல..

நீ எப்போ எழுந்து என்னை ஆதிப்பான்னு கூப்பிடுறியோ, அது வரைக்கும் நான் யாரோடையும் பேச மாட்டேன்.. நீ எங்கிட்ட எப்போ பேசுறியோ அப்போதான் நானும் பேசுவேன்..

நான் உன் மேல் வச்சிருக்கிற அன்பு , காதல் உண்மைன்னா, நீயே என்னை ஆதிப்பான்னு கூப்பிடுவ.. அதுவரைக்கும் காத்திருப்பேன்.. உனக்கு ஒன்னும் ஆகாது என்ற நம்பிக்கையோட, உன்னோட இன்னும் நிறைய வருஷம் வாழ்வேன் என்ற நம்பிக்கையோட காத்திருப்பேன்.. “ என்று கூறியவன் முகத்தில் அதன் பின் உணர்ச்சி சுத்தமாக துடைக்க பட்டு  இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.