(Reading time: 8 - 16 minutes)

ருகருகே இருக்கும் காரணத்தால் வெளிப்படும் காதலானது மகேஷிற்கு தெரிய வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு!!

எதை எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தவளின் இடையைப் பற்றி தன்னருகே இழுத்தது ஒரு கரம்!!

"ஈஸ்வரா!"-என்று அலறிவிட்டாள் அவள்.

"உஷ்!கத்தாதே செல்லம்!நான் தான்!"-அவளின் காதில் கிசுகிசுத்தான் திவாகர்.

"என்ன நீங்க விடுங்க?இப்படியா விளையாடுவாங்க?"

"ஏன் நான் தானே!"

"இன்னொருமுறை இப்படி பயமுறுத்தினீங்க,அப்பறம் அடி தான் கிடைக்கும்!"-அவன் காதை திருகினாள் சிவன்யா.

"ஏ..வலிக்குதும்மா!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மனோஹரியின் "காதல் பின்னது உலகு" - கல்யாணமாம் கல்யாணம்…

படிக்க தவறாதீர்கள்... 

"போங்க!முதல்ல கீழே போங்க!"-திவாகரின் பார்வை சிவன்யாவை துளைத்தெடுத்தது.

"என்ன?"-அவன் ஒன்றுமில்லை என தலையசைத்தான்.

"போங்க!"-அவளது பேச்சுக்கு கட்டுப்பட்டவளாய் நடந்தான்.அவன் செல்வதையே பார்த்தவளின் முகம் சிவந்தது.

சிறிது நேரம் சென்றிருக்கும்...

"அம்மூ!"-மீண்டும் திவாகரின் குரல்!சிவன்யா புன்னகையோடு திரும்பினாள்.

"நான் எப்போ வந்தேன்?நானும் நீயா வருவன்னு பார்த்தா!என்னை பார்க்க வரவே மாட்ற?என்ன கொழுப்பா?"-என்றான்.அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது!இப்போது தானே இவன் இங்கிருந்து கிளம்பினான்??

"என்னம்மா?என்னாச்சு?"

"நீங்க கீழே தான் இருந்தீங்களா?"

"ஆமா..கீழேயே தான் இருந்தேன்!நீ வரலையேன்னு தான் கடுப்பாகி நான் மேலே வந்தேன்!"-அவள் அதிர்ச்சியின் உச்சத்தையே அடைந்தாள்.

"ஏன்?என்னாச்சு?"

"ம்...ஒண்ணுமில்லை.."

"நீ இப்போதாவது வருவியா?பயப்படாதே...நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்!தைரியமா வா!"

"நீங்க போங்க!வரேன்!"

"ம்..."-திவாகர் கீழிறங்கி சென்றான்.

வந்தது திவாகர் இல்லை என்றால்??வேறு யார்???

பூட்டப்பட்டிருந்த அந்த அறையில் தனியாக ஆடிக்கொண்டிருந்த நாற்காலி அதற்கான பதிலை சொல்லியது.

"தேங்க்ஸ்டா!நான் சொன்ன உடனே வந்ததுக்கு!"

"பரவாயில்லை மச்சான்...!உனக்காக இது கூட பண்ண மாட்டேனா?"-அவர்கள் பேசிக்கொண்டே இருக்க,லட்சுமி இருவருக்கும் பாலை எடுத்து வந்து தந்தாள்.

"சிவா தூங்கிட்டாளா?"

"தூங்கிட்டாங்க!"

"சரி..!"-அவள் அமைதியாக சென்றுவிட்டாள்.

"மஹீ!"

"என்னடா?"

"உன்கிட்ட ஒண்ணு கேட்கட்டா?"

"கேளு...!"

"நீ யாரையோ லவ் பண்றல்ல?"-மகேஷ் திடுக்கிட்டான்.

"என்னடா உளர்ற?"

"இல்லை நண்பா..!தோணுச்சு அதான் கேட்டேன்!"

"நல்லா தோணுச்சு போ!"-திவாகர் திரும்பி லட்சுமியை பார்த்தான்.

"என்னடா?"

"இல்லை...உன்கிட்ட வேலை செய்யுறவங்க அதிகமா லேடிஸ் கிடையாது!அப்படி இருக்கும் போது எப்படி லட்சுமியை நீ அப்பாயிண்ட் பண்ண?"-மகேஷ் புன்னகைத்தான்.

"அவளுக்கு யாரும் கிடையாதுடா!சின்ன வயசுல இருந்து ஆசிரமத்துல தான் வளர்ந்திருந்தா!ஒரு வழியில தான் அவளை பார்த்தேன்.இரண்டு பேர் அவக்கிட்ட தவறா நடக்க முயற்சி பண்ணிருந்தாங்க!அப்பறம் அவங்களை 2 தட்டு தட்டி துரத்திவிட்டு அவக்கிட்ட விசாரித்தேன்.அவ அழுதுட்டே விவரத்தை சொன்னா!சரி ஆபிஸ்ல வேலை செய்யுற அளவுக்கு எதாவது படிச்சிருக்கும்னு பார்த்தா மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்குனது இல்லையாம்!சரி...சிவன்யாவும் தனியா தானே இருக்கா கூட துணையா இருக்கட்டும்னு இங்கேயே தங்க வச்சிட்டேன்.அவ வந்த அப்பறம் சிவன்யாக்கும் நல்ல ஃப்ரண்டு கிடைத்த மாதிரி ஆயிடுச்சு!எனக்கும்..."-சட்டென நிறுத்தினான் மகேஷ்.

"உனக்கும்?"

"ம்...மூக்க பிடிக்க மூணு வேலை வீட்டு சாப்பாடு கிடைக்குது!"

"ஓஹோ...!"

"ஏன் கேட்கிற?"

"ஒண்ணுமில்லை நீ பிரசன்டேஷன் ரெடி பண்ணு!"-தப்பித்தால் போதும் என்று மகேஷ் கணினியில் கவனத்தை பதிக்கலானான்.

தொடரும்

Episode 03

Episode 05

{kunena_discuss:991}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.