(Reading time: 29 - 58 minutes)

25. மனம் கொய்தாய் மனோஹரி - அன்னா ஸ்வீட்டி

Manam koithaai Manohari

வீட்டை விட்டு கிளம்பி காரில் வந்து கொண்டிருந்தனர் மித்ரனும் மனோவும்…. காரை செலுத்திக் கொண்டிருந்த மித்ரன் ஏதோ சிந்தனையில் இருப்பது போல் பட்டது மனோவுக்கு…. இவள் பார்வையை உணர்ந்தானோ…?

“அது மனு…..அண்ணி இன்பாட்டயும் அம்மாட்டயும் நல்லாதான் பேசி பழகுவாங்க போல….இன்பா சொன்னவரை அப்டித்தான் புரியுது…..ஆனா இப்ப இந்த ப்ரச்சனைல அவங்க யார்ட்டயும் எதையும் பேசுறதா இல்லை…..அவங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை சொன்னாங்கன்னா நமக்கு இன்னும் வசதியா இருக்குமேன்னு யோசிச்சுட்டு இருக்கேன்….. ஆனா இது எதோ என்கொயரி மாதிரியும் யாருக்கும் தோணிடக் கூடாது…. அண்ணிக்கே கூட இது கேஷுவல் டாக் மாதிரி தெரியுறதுதான் நல்லது….அப்டி நீ அண்ணிட்ட ஒரு டைம் கேட்டு பார்க்கிறியா…? அவங்க கொடுக்ற இன்ஃபோ  அவனை ரெஸ்க்யூ பண்றதுல ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்னு தோணுது…”

மனோவுக்கு இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து என்று எதுவும் இல்லை….ஆக பயோசிக்கு கிளம்பிய இருவரும் இப்போது போய் நின்றது மனோவின் வீட்டில்….

காலிங் பெல் சத்தத்தில் எட்டிப் பார்த்துவிட்டு கதவை திறந்த மனோ அம்மாவிடம் அத்தனை பரவசம் ப்ளஸ் பரபரப்பு….. பின்னே கல்யாணத்திற்கு பின் இப்பதான் முதல் தடவையா ரெண்டுபேரும் வீட்டுக்கு வர்றாங்க….. அதுவும் வர்றதா ஒரு வார்த்தை சொல்லாம….

“ வாங்க… வாங்க மாப்ள…… வா மனோ….”  அம்மா அவசர அவசரமாய் கதவை திறந்து கொண்டே இவர்களை வரவேற்றார்……..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலையோரம் வீசும் காற்று..." - நட்பால் இணைவோம்...

படிக்க தவறாதீர்கள்... 

“ வாங்க…..இப்ப உடம்பு எப்டி இருக்குது…. பிரவாயில்லையா…? “ தன் மருமகனைப் பார்த்து சற்று தயங்கி தயங்கி நலம் விசாரித்த இவளது அம்மாவோ…… மனோவிற்கு ஒரு ரகசிய  கண்டன பார்வை…

மித்ரனோ “ஹலோ ஆன்டி…. என் ஹெல்த் இப்ப பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்…. மனுட்ட கேட்டுப் பாருங்க அவளுக்கு நல்லா தெரியும்….நீங்க  நல்லா இருக்கீங்களா…? அகதன் ஆஃபீஸ் போயாச்சோ?....அங்கிள் வெளிய போயிருக்காங்களா…..இல்ல வீட்லதானா?” என இவளது  அம்மாவிற்கு பதிலையும்…..இவளுக்கு  வெளி காண்பிக்க முடியாத முக சிவப்பையும் தந்தபடி… வீட்டிற்குள் நுழைய…

அவன் தன் ஷூவை கழற்றும் வரை மித்ரன் அருகில் காத்திருந்த மனோவோ, அவசர அவசரமாய்  ஒரு அரை முறைப்பையும், அதோடு கலந்த அவளவனுக்கான சின்ன வெட்கத்தையும் அவனுக்கு காண்பித்தபடி அவனோடு வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள்….

““அவங்க இப்பதான் மார்கெட் கிளம்பிப் போனாங்க….அகி ஆஃபீஸ் போய்ட்டான்…..உட்காருங்க…..” உள்ளே நுழைந்த மருமகனிடம் சோஃபாவை காட்டி சொல்லிவிட்டு “மனோ அவரை உட்கார சொல்லு….”  என அதை மகளிடமும் சொல்லி உபசரிப்பின் ஆழத்தை அம்மா இன்னுமாய் அதிகரித்தவர்….

“இருங்க இப்ப வர்றேன்…..” என பேச்சை முடித்து மனோவுக்கு தன்னோடு வருமாறு ஒரு சின்ன கண்ணசைவு….

யாரிடமும் “என்ன சாப்டுறீங்க” என முகத்துக்கு நேராக கேட்டு உபசரிக்கும்  அம்மா….. மித்ரனுக்கு என்ன கொடுக்கவென கேட்க இவளை எதோ ரகசிய ஆலோசனைக்கு அழைப்பது போல் அழைப்பது மனோவுக்குப் புரிய…..அம்மாவின் படபடப்பை பார்க்கும் போது ஒரு பக்கம் சின்னதாய் சிரிப்பாயும்….மறுபக்கம் அது மித்ரனுக்கான மரியாதை, தனக்கான பாசம் என்ற விளங்கலில் பெருமிதமாயும் இருக்கிறது இவளுக்கு……

மித்ரனோ மனோ அம்மாவின் படபடப்பை உணர்ந்தவனாக, அவரை இலகுவாக உணர வைக்கவென  “ஆன்டி ஆனாலும் உங்க பொண்ணு மேல உங்களுக்கு இப்டி ஒரு ஒபினியனா….? ஒரு 10 நாள் அவ கூட என்னை தனியா விட்டதுக்கு…..இப்டி பார்த்து பார்த்து என்னை கவனிக்கீங்களே….. அவ நீங்க பயப்படுற அளவுக்கு என்னை ஒன்னும் பண்ணிடலை……நல்லாதான் வச்சுறுக்கா…..”   சிரிப்பை இதழுக்குள் சிறை செய்தபடி சொல்லிக் கொண்டே,

வெகு இயல்பாய் எதிரிலிருந்த டீபாயிலிருந்து நியூஸ் பேப்பரை உருவியபடி இவர்கள் வீட்டு சோஃபாவில் சென்று அமர்ந்தான்…. இதில் அஸ் யூஸ்வல் மனோ அவனை முறைக்க….

“அது….” என சொல்ல ஆரம்பித்த அம்மாவும் அடுத்து அவன் சொன்னதை முழுதாய் உணர்ந்து சின்னதாய் சிரித்தார்…. அதேநேரம் மனோவோ உற்சாக துள்ளலுடன் தன் அம்மாவின் கையைப் போய் உரிமையும் அழுத்தமுமாய் பற்றினாள்…

“என்ன மனோ நீ….வர்றோம்னு ஒரு வார்த்தை கூப்ட்டு சொல்லிருக்கனும்ல…. முதல் தடவை வர்றீங்க…..விருந்து செய்யனும்….அப்பா வேற இப்பதான் வெளிய போறாங்க…..எனக்கு கையும் ஓட மாட்டேங்குது காலும் ஓட மாட்டேங்குது….” மகளுக்கு மட்டும் கேட்கும் சிறு குரலில் அவரது தவிப்பை சொல்லியபடி

”அவருக்கு என்ன பிடிக்கும்..? என்ன செய்யலாம்…?” என அவளோடு சமயலறை புறமாய் நடக்க தொடங்கினார் அம்மா…

அதற்கு பதிலாக “அம்மா அவங்கள பார்க்க செம ஹேண்ட்சமா இருக்காங்கல்ல…?” என்றபடி தன் அம்மாவை தோள் பற்றி நிறுத்தி….அவன் புறமாய் திருப்பி….அவனை முழுப் பார்வை பார்த்து இயல்பான பேச்சு சத்தத்தில் இவள் சொல்ல…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.